புத்தர் சீடர்களுடன் உரையாற்றி கொண்டிருந்தார். முன்வரிசை யில் பிரத்சேனனும் அமர்ந்து இருந்தான். அவன் அடிக்கடி வந்து புத்தரின் மொழிகளை கேட்பது வழக்கம். மன்னன் தரையில் அமர வேண்டி இருந்தது. யார் வந்தாலும் அங்கு அப்படி தான். தனியாச னம் எதும் கிடையாது.
மன்னனுக்கு தரையில் அமர்ந்து பழக்கம் இல்லை. உட்கார முடி யாமல் மிகவும் சிரமபட்டான். இப்படியும் அப்படியும் சாய்ந்தும் காலை மாற்றிபோட்டு மடக்கி அமர்ந்தும், நிலைகொள்ளாது தவி த்து கொண்டு இருந்தான். அதே நேரம் தான் சிரமப்படுவது புத்தரு க்குத் தெரியாமலிருக்கவும் முயற்சி செய்தான். இந்த போராட்டத் தில் அவனையறியாமல் ஒரு காரியம் நடந்து கொண்டு இருந்தது.
அவனுடைய கால் கட்டை விரல் ஆடி கடகடவென்று ஆடிக் கொ ண்டு இருந்தது.
புத்தர் அதை கவனித்து விட்டார். உடனே அந்த பேச்சை நிறுத்தி னார்.
“ஏன் உன் கால் கட்டை விரல் ஆடிக்கொண்டு இருக்கிறது?” என்று கேட்டார்.
பிரச்சேதனன் திடுக்கிட்டு குனிந்து தன் காலை பார்த்தான். பார்த்த வுடன் ஆட்டம் நின்று விட்டது. பிரக்ஞை இல்லாமல் நடந்தது, பிரக்ஞை வந்ததும் நின்று விட்டது.
அதை கவனித்த புத்தர், “ஏன் கட்டை விரல் ஆடுவதை நிறுத்தி விட்டாய்..?” என்று கேட்டார்.
“பெருமானே, என்னை சங்கடமான கேள்வி கேட்டு விட்டீர்கள். அது ஆடிக்கொண்டு இருந்தது எனக்கு தெரியவே தெரியாது. நீங் கள் கேட்டதும் அது தானாக நின்று விட்டது. நான் ஒன்றுமே செய் யவில்லை. ஆட்டவும் இல்லை, நிறுத்தவும் இல்லை..!” என்று மன்னன் சொன்னான்.
அதை கேட்ட புத்தர் சீடர்களை நோக்கி பேச ஆரம்பித்தார்.
“விஷயம் என்ன என்று கவனித்தீர்களா..? இந்த கட்டைவிரல் இவ ருக்கு சொந்தமானது. இது ஆடுகிறது, ஆனால் அவருக்கு தெரியா து. ஆனால் கவனம் வந்ததும் நின்று விட்டது. அதாவது நான் கேள்வி கேட்டதும் நின்று விட்டது. விழிப்புணர்வு தோன்றியதும் நின்று விட்டது. வெறும் விழிப்புணர்ச்சி மட்டுமே தேவை. எல்லா ம் அடங்கி விடும்.
அதுதான் ஆன்மிகத்தில் நாம் முதல் கடவுள் பற்றியோ, ஆன்மா பற்றியோ பேசுவது இல்லை. விழிப்புணர்வை பற்றியே பேசுகி றோம். எப்போதும் விழித்துதிரு. அதில் நிலைத்திரு.
தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் – பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்….