Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெட்ரோல் & டீசல் சேமிக்க சில‌ வழிமுறைகள்

1. வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பு மிகவும் அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும். நிறுவனத்தார் கொடுத்த காற்றழு த்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும்.
2. புதிய டயர்கள் மாற்றும்பொழுது வாகன தயாரிப்பாளர் பரிந்து ரைத்த டயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

3. காலை நேரங்களில் மட்டும் எரிபொருளினை நிரப்ப முயற்சியு ங்கள். எரிபொருளின் ஸ்பெசிபிக் க்ராவிட்டி(specific gravity) காலை நேரங்களில் அதிகமாக இருக்கும்.

4. எரிபொருள் கலனில் எப்பொழுதும் அறை பங்கிற்க்குமேல் எரிபொருள் இருக்கும்படி பார்த் துக்கொள்ளுங்கள். இதனால் எரிபொருள் சரியான அழுத்ததில் செல்ல பெரிதும் உதவும்.

5. வாகனத்தின் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். சரியான கால இடைவெளியில் பராமரித்தால் தேவையற்ற செலவுகளை தவர் க்கலாம். வாகனத்தின் செயல்திறனும் சிறப் பாக இருக்கும்.

6.எக்காரணம்கொண்டு தயாரிப்பாளர் பரிந்து ரைக்காத எரிபொருள், அடிட்டீவஸ் பயன் படுத்தாதீர்கள்.

7. வாகனத்தை இயக்கும் பொழுது தேவையான அளவே அக்ஸி லேட்ர்களை கொடுங்கள். திடீரென அதிகப்படியான அக்ஸிலேட்ர் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல் லது. பிரேக் பிடிப்பதில் கவனம் கொள்ளுங்கள் அக்ஸிலேட்டர் கொடு த்தவுடன் உடனடியாக பிரேக் கொடுக் காதீர். சிக்னல்களில் திடீரென வேகம் எடுக்காதீர்கள். சீரான வேகத்திலே வாகனத்தை இயக்குங்கள்.

8. அதிவேகம் மிகுந்த ஆபத்தானவை அதேபோல எரிபொருளும் அதிகம் தேவைப்படும். டாப் க்யரிலும் மெதுவாக செல்வது எரி பொருளை சேமிக்க உதவும்.சராசரியாக 50-60 கீமி வேகத்தில் பயணிக்க முயலுங்கள்.

9. 2 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தால் வாகன த்தை அனைத்து விடுங்கள்.

10. க்ளட்ச் மீது க்யர் மாற்றும்பொழுது மட்டுமே காலினை பயன் படுத்தவும்.

11. தொடர்ந்து நிலையான வேகத்தை பயன்படுத்துங்கள்.

– thanks to automobiletamilan

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: