Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காவல் நிலையத்தின் (போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய (அவல‌) நிலை..!

எந்தவொரு பிராந்தியத்திலும் அதை நிர்வகிப்பதற்கான அதிக பட்ச அதிகாரம் குவிந்திருக்கும் இடம். அங்குள்ள காவல் நிலை யம். தமிழகத்தில் அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் துறை டாஸ்மாக் என்றால், அரசின் பணியாளர்களுக்கு அதிக வரு மானம் ஈட்டித்தரும் துறைகளி ல் முதலிடம் பிடிப்பது தமிழகக் காவல் துறை. ஆம்! நம்புங்கள், பத்திரப்பதிவுத்துறை, விற்ப னை வரித்துறைகளைவிட காவல்துறையில் ‘மேல்’ வருமானம் அதிகம். தமிழகத்தில் ஒரு காவல் நிலையத்தின் பணிகள் என்ன, அதன் அதிகார எல்லை என்ன, வரம்பு மீறும் எல்லைகள் எவை …?

தமிழகத்தில் மொத்தம் 1,296 காவல் நிலையங்கள், 196 மகளிர் காவல் நிலையங்கள், சுமார் 250 ஐ.பி. எஸ். அதிகாரிகள், ஒரு லட்சம் காவலர் கள்… பிரமாண்ட ஆலமரமாகக் கிளை பரப்பி இருக்கும் காவல் துறையில் கட்டப்பஞ்சாயத்தும் லஞ்சமும் கூடப் பிரமாண்டம்தான். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எப்படி எல்லாம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்?

ஃபர்ஸ்ட் இன்கம் ரிப்போர்ட்!

முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆர்… போலீஸாரைப் பொறுத்த வரை பொன்முட்டையிடும் வாத்து. காவல் நிலைய நடை முறை களில் முதல் நடைமுறையே எஃப்.ஐ.ஆர். பதிவுதான். அதில் இருந் தே தொடங்குகிறது வசூல் வேட்டை. காவல் நிலையத்தில் ஒரு வர் அளிக்கும் புகாரைப் பெற்றுக்கொண்டு ஆய்வாளர் அல்லது நிலைய எழுத்தர் உடனடியாக ரசீது (சி.எஸ்.ஆர்.) கொடுக்க வே ண்டும். புகாரின் தன்மையைப் பொறுத்து அன்றைய தினமே எஃப்.ஐ.ஆர். பதியப்பட வேண்டும்.

ஆனால், உண்மையில் நடப்பது என்ன? புகாரைப் பெற்றுக்கொண்டு உடனே புகாரி ல் சம்பந்தப்பட்ட எதிர்த் தரப்பை அழைக்கி றார் கள். பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். புகார்தாரர், எதிர்த்தரப்பு … இவர்களில் யாரிடம் அதிக பேரம் நடக்கிறதோ, அவர்க ளுக்குச் சாதகமான வகையில் புகார் பதிவு செய்யப்படும் அல்லது பதிவு செய்யப்படாம லேயே போகும். ஒருவேளை போலீஸ் வற் புறுத்தி யும் புகார்தாரர் புகாரை வாபஸ் வாங்க மறுத்தால், அதற் கெல்லாம் அசரவே மாட்டார்கள்.

எதிர்த் தரப்பிடம் ஒரு புகாரை வாங்கி, ஒரிஜினல் புகார் கொடுத் தவர்மீதே வழக்குப் பாய்ச்சி அதிரவைப்பார்கள். ‘ஏன்தான் காவல் நிலையத்துக்குச் சென்றோமோ’ என்று விரக்தியில் நொந்தே போவார் புகார்தாரர். இந்த எஃப். ஐ.ஆரை எப்படியும் வளைக்கலா ம். அது நிலையத்தின் அனுபவசா லிக்குக் கைவந்த கலை. உதாரண மாக, ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் வழக்குக்கு செக்ஷன் 506 (2) என்று பதிவுசெய்தால் ஜாமீன் கிடைக்காது. அதையே வெறும் மிரட்டல் என்று செக்ஷன் 506(1)ல் பதிவு செய்தால் ஸ்டேஷனில் இரு ந்து கையை வீசிக் கொண்டு வீட்டு க்குச் சென்று விடலாம். இப்படி ஒரு எண்ணை மாற்றி எழுதினா லே, வழக்கின் மொத்த ஜாதகத்தையே மாற்றிவிடலாம்.

கைதுக்கும் காசு!

திந்த எஃப்.ஐ.ஆர்.மீது குற்றம்சாட்டப்பட் டவரைக் கைதுசெய்யவும் கைது செய்யா மல் இருக்கவும் பணத்தைத் தண்ணீரா கச் செல வழிக்க வேண்டும். புகார்தாரர், குற்றம்சாட்டப்பட்டவர் இருதரப்பில் யாரி டம் அதிக பேரம் படிகிறதோ, அவருக்குச் சாதகமாக நடவடிக்கை பாயும். குற்றம் சாட்டப்பட்ட நபர் முன் ஜாமீனுக்கு விண் ணப்பித்தால், அதை ஆட்சேபிக்காமல் இருக்கவும் பணம் வேண் டும்.

ரெக்கவரி ரீல்!

மேற்கண்ட வகை வருமானம் எல்லாம் சட்டம் – ஒழுங்கு போலீஸாருக்கு மட்டும்தான். இவர்களுக்கு அன்றாட வருமானம் என்றால், குற்றப் பிரிவு போலீஸாருக்கு இர ண்டொரு மாதங்களுக்கு ஒருமுறைதான் வருமானம். ஆனால், செம லம்ப் வருமானம். திருடுபோன சொத்துகளை மோப்பம் பிடித்து, துப்பு த்துலக்கி மீட்கும் கடமை ஆற்றும் போலீஸா ருக்கு ஒவ்வொரு வழக்கு ம் புதையல் வேட்டைதான். 100 பவுன் திருடு போய் விட்டதாகப் புகார் அளித்தால், உடனே எஃப்.ஐ.ஆர். போடமாட்டார்கள். ஆனால், உடனடியாக வியர்க் கவிறுவிறுக்க தேடுதல் வேட்டை நடத்துவார் கள்.

எந்தத் திருடன், எந்த ஏரியாவில், எந்த ஸ்டைலில் தேட்டை போ டுவான் என்பதெல்லாம் ஸ்டேஷன் காவலர்களுக்கு அத்துப்படி. திருடனை அமுக்கிப் பிடித்து, ‘சிறப்பு விசாரணை’ மூலம் நகை யை எங்கே பணமாக்கினான் என்று ஆதியோடு அந்தமாக உண் மையைக் கறந்துவிடுவார்கள். அண்ணா நகர், அமைந்தகரை தொடங்கி ஆம்பூர் வரை, தான் கைவரிசை காட்டிய இட ங்களை அவன் பட்டியல் இடுவான். அப்போது போலீஸ் உண்மையில் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஏரியா காவல்நிலையத்திலும் அவன் மீது தனித்தனி எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, ஒவ்வொரு எஃப்.ஐ.ஆருக்கும் இறுதி அறிக்கை தயார் செய்து, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கித்தர வே ண்டும். அந்தந்த நிலைய விசாரணை அதிகாரி, அவரது எல்லை யில் திருடுபோன சொத்துகளை மீட்டு, நீதிமன்றம் மூலம் பாதிக் கப்பட்டவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும்.

ஆனால், உண்மையில் என்ன நடக்கிற து? திருடன் நகையை விற்ற நபர்களி டம் அதட்டி மிரட்டி தங்கத்தை மீட்பா ர்கள். இப்படி 10 வழக்குகளுக்கான மொத்த திருட்டுச் சொத்தையும் ஒன்று திரட்டினால், 200 பவுனுக்குக் குறையா மல் கிடைக்கும். பிறகு, புகார்தாரரை க் கூப்பிட்டு பஞ்சாயத்து பேசுவார்கள்.

”அந்தப் பய எல்லாத்தையும் வித்து சாப்புட்டுட்டான். உங்களப்பார்த்தா ரொ ம்பப் பரிதாபமா இருக்கு. அதுவும் அடுத்த மாசம் பொண்ணு க்குக் கல்யாணம்கிறீங்க…

நாங்க வேணா ஒண்ணு செய்யறோம். வேற கேஸ்ல கொஞ்சம் நகை சிக்கி இருக்கு. அது முப்பது பவுன் தேறும். நீங்க ஒரு அம வுன்ட் கொடுத்தா, அதை எடுத்து உங் களுக்குச் சரிக் கட்டிடலாம்” என்பார் கள். ஆட்களின் வசதியைப் பொறுத்து, லட்சங்களை யோ ஆயிரங்களையோ பெற்றுக்கொண்டு… கட்டக்கடைசியா கத் தான் எஃப்.ஐ.ஆர். பதிவார்கள். 100 பவுனுக்கு 30பவுன் திருடு போனதாகப் பதிவுசெய்து… அதையும் வெற்றிகர மாக மீட்டுக்கொடுத்ததாக பத்திரிகை யாளர்களை அழைத்துப் பேட்டி கொடு ப்பார்கள். லாபம், 170 பவுன் ப்ளஸ் சில லட்சங்கள்! நாம் இதை நம்ப முடியாமல் பழுத்த அனுபவம் உள்ள சில கிரிமினல் லாயர்களிடம் விசாரித்தபோது, ‘இது அனை த்தும் 100 சதவிகிதம் உண்மை தான்!’ என்றுஆமோதித்தார்கள். அட… ஆண்டவா!

ஏன் இந்தக் கொள்ளை?

காவல் நிலையங்களில் ஏன் இந்த அடாவடி வசூல்? இதில் ஒரு சின்ன உண்மை என்ன வென்றால், தங்கள் சுயலாபத்துக்கு மட்டுமே காவலர்க ள் இப்படி வசூல் வேட்டை நடத்துவ து இல்லை. காவல் நிலையத்தின் நிர்வாகச் செலவினங்களைச் சமாளி க்க இதைத்தவிர வேறு வழியில்லை என்று நேர்மையாகச் செயல்படும் பல காவலர்களே சொல்கி றார்கள்.

விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபர், ஸ்டேஷனில் இரு க்கும்வரை அவருக்கு உணவு, காபி, டீ முதலிய அத்தனையும் அந்தந்த காவல் நிலையத்தின் பொ றுப்புதான். இப்படி விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபரின் மூன்று வேளை உணவுச் செலவு க்கென அரசு வழங்கும் தொகை 10 ரூபாய் மட்டுமே. குற்றவாளியை விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லுதல், சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் செல் லுதல் போன்ற போக்கு வரத்துச் செலவுக்கு அரசு பஸ் கட்டணம் மட்டு மே அரசின் அளவு கோல்.

விழிபிதுங்கும் கூட்டநெரிசலில் நகரப்பேருந்துகளில் அக்யூஸ் டை அழைத்துச்செல்ல முடியுமா? ஆட்டோ தான் ஒரே வழி. கடை நிலைக் காவலர்கள் தங்கள் கைக் காசு மூலம்தான் அதைச் சமாளிக்க வேண்டும்.

இதைக்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், உயர் அதிகாரிகள் இழுத்து விடும் செலவுதான் பலரை மூச்சு முட்ட வைக்கும். உயர் அதிகாரி துப்பு துலக்கவோ.. மோப்பம் பிடிக்க வோ ஏரியாவுக்கு வந்தால், அந்த ஊரின் நட்சத்திர ஹோட்டல் அறை, அவரது போக் குவரத்துக்கு ஏ.சி. கார், சாப்பாடு, சரக்கு முதல் ‘மேற்படி’ச் செலவு வரை அனைத்துமே அந்தப் பகுதியின் காவல் நிலையப் பொறுப்புதான்.

காவல் நிலைய ஜீப்புக்கு அரசு மாதம் ஒன்றுக்கு 160 லிட்டர் டீசல் ஒதுக்கீடு செய்கிறது. இதை அந்தந்தப் பகுதியில் இருக்கும் அரசு பெட்ரோல் பங்க்குகளில் நிரப்பிக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த நிலையத் தின் உயர் அதிகாரிகள் தனது சொந்த வாகனத்துக்கு ஸ்டேஷன் ஜீப்பின் பதிவு எண்ணைக் கொடுத்து எரிபொருள் நிரப்பிக்கொள்வார். அப்படி யெனில் ஸ்டேஷன் ஜீப்புக்கு? ஏரியா பெட்ரோல் பங்க்கில் மாமூலுக்குப் பதில் டீசல். இதுவும் இன்ன பிறவுமாக அனுதினமும் குவியும் செலவுகளைச் சமாளிக்கவே காவலர்கள் இப்படி வாய் ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் வசூல் மேளா நடத்துவதாக நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் கணக்குகளை எல்லாம் கூட் டிக் கழித்துப் பார்த்தாலும் அந்தச் செல வுகளெல்லாம் போலீ ஸார் அடிக்கும் கொள்ளையில் ஒரு சதவி கிதம்கூட இல்லை.

காவலர்கள் அனைவருமே ஊழல் புரிவது இல்லை. ஆனால், காவல் பணியை தங்கள் உயிர் மூச்சாக நினைத்துச் செயல்படுப வர்கள் சுமார் 30 சதவிகிதத்தினர் மட்டுமே. அதுவும் இன்றைய சூழலில் நேர்மை என்பது உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே, அது வும் ஓரளவுதான் சாத்தியம். ஒரு ஆய்வாளர் தன் அளவில் மட்டுமே நேர்மையாக இருக்க முடியும். மற்றபடி தனது காவல் நிலைய எல்லைக்குள் போலீ ஸார் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க முடியாது. ஏனெனில், அந்தப் பணம்தான் ஒரு காவல் நிலையத்தை நிர்வகிக்கும் என்கிற யதார்த்த உண்மை அவருக் குப் புரிந்திருக்கும்.

போலீஸாருக்கு டூட்டி நேரம் எல்லாம் எதுவும் கிடையாது. 24 மணி நேரமும் வேலை நேரம்தான். காவல் நிலைய ஆட்களின் எண்ணிக் கையைப் பொறுத்து, அவர்களுக்குள் வேலை நேரத்தைப் பிரித்துக்கொண்டு தூக்கம், சாப்பாடு மற்றும் குடும்பத் துக்கு மிகச்சொற்ப நேரத்தை ஒதுக்கி க்கொள்வார்கள். காக்கிச் சட்டை யின் கம்பீரத்துக்கும் அங்கீகாரத்துக்கும்… அதற்கு மேல் கிடைக்கும் வருமானத் துக்கும் இவர்கள் கொடுக்கும் விலையும் மிக அதிகமே.

நன்றி: டி.எல்.சஞ்சீவிகுமார், ஆனந்தவிகடன்.

3 Comments

  • ஆனந்த விகடனில் வெளிவந்த இந்த இடுகையை நான் பகிர்ந்துள்ளேன். இந்த இடுகையை பகிர்ந்ததனால், நாங்கள் காவல் துறைக்கே எதிரி என்றோ அல்ல‍து ஒட்டு மொத்த‍ காவல்துறைக்கே களங்கம் விளைவிப்ப‍தாகவோ அர்த்த‍ம் இல்லை. நான் படித்த‍ இந்த இடுகையால் தவறு செய்யும் ஒரு சில காவலர்களில் ஒரிருவராவது திருந்த வேண்டும் என்ற நல்ல‍ நோக்க‍த்துக்காகவே!

   மேலும் உலகிலேயே அதிக மன அழுத்த‍ம் உள்ள‍ அரசு வேலை எது என்று நடத்த‍ப்பட்ட‍ ஆய்வு ஒன்றில், அதிக மன அழுத்த‍மும் மன உளச்ச‍லும் உள்ள‍ அரசு வேலை, காவலர்கள் வேலைதான் என்று தெரிவித்துள்ள‍து.

   மேலும்

   காவலர்களுக்கு பணிச்சுமைகளையும், அவர்களுக்கு இருக்கும் மன உளச்ச‍ல் பற்றிய அதாவது காவலர்களுக்கு அவர்களது பணியில் இருக்கும் துயரங்களை பட்டியலிட்டு, vidhai2virutcham@gmail.com என்ற எங்களது மின்ன‍ஞ்சலுக்கு அனுப்பி வைப்பீர்களானால் அதையும் நாங்கள் விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட தயாராக உள்ளோம்.

   என்றென்றும் தங்களது நட்பினை விரும்பும்
   விதை2விருட்சம் குழுவினர்

 • மிக அருமையாக சொல்லி இருக்கீங்க….பகிர்வுக்கு மிக்க நன்றி…..

  நன்றி,
  மலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: