1983 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 3ஆம் தேதி தெலுங்கில் ‘சாகர் சங்கமம்’ என்ற பெயரில் வெளிவந்து, வெற்றி பெற்ற திரைக்காவியம். இது ‘சலங்கை ஒலி’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு செய்யப்பட்ட அதே ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அன்று வெளி வந்து தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்களை அள்ளியது. இதில் கமல்ஹாசன், ஜெயப்பிரபா, சரத்பாபு உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற தகிட தகிட என்று தொடங்கும் திரைப்பாடலுக்கு கமல்ஹாசன் அவர்கள் கிணற்றின் மீது எந்த வித பிடிமானமும் இல்லாமல் நடனம் ஆடியிருப்பார். இவரது இந்த நடனம் கமலை கலையுலகத்தில் தனி ஒரு இடத்தை பெற்றுத்தந்தது. அத்தகை சிறப்பு வாய்ந்த திரைக்காவியத்தை யூடியூப்பில் கண்டேன். அதை அப்படியே உங்களது கண்களுக்கும் விருந்தாகவும், உங்கள் மனதுக்கு இதமளிப்பதாக இருக்க இதை பகிர்ந்தேன்.