ஆம்! மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தன் அற்புத நடிப்பால் எல்லோரையும் கவர்ந்த வர் சாரதா
நடிகை என்ற அந்த டாம்பீகமோ அல் லது ஒரு அலட்டலையோ இன்றள வும் இவரிடம் நான் கண்டதில்லை
1945′ல் ஆந்திர மாநிலம் தெனாலியி ல் பிறந்தார் சாரதா. இயற் பெயர், சரஸ் வதி தேவி சிறு வேடங்களில் முதலில் தோன்றினார்
அப்படி அவர் தெலுங்கு நகைச்சுவை மன்னன் பத்மனாபத்துடன் இத்தரு மித்ரலு படத்தில் நடித்தார் நாகேஸ்வரராவ்வின் தங்கை யாக .. நல்ல புகழை தேடி தந்தது. ஆம் முதன் முதலில் ஒரு முழு நீள பாத்திரம் செய்தது இந்த படத்தில் தான் பீ.பி.ஸ்ரீனிவாஸ் – சுசீலா பாடிய சக்கனிசுக்க சரசுக்கு ராவே பாமா/பாவா என்ற பாடல் மிகவும் பிரபல மான பாடல் (பதம்னாபம் – சாரதா)
இப்படி சிறுசிறு வேடங்கள் செய் து வந்த நிலையில் மலையாள படவுலகின் இயக் குனர்களின் பார்வையில் இவர் பட மலையா ள திரையுலகம் இவரை இருகை விரித்து வரவேற் றது .. இப்படி நுழைந்த இவர் மலையாள சேச்சியாகவே மாறிப் போனார் என்றா ல் அது மிகையில்லை
மலையாள உலகின் முன்னணி இயக்குனர்கள் அனைவரின் படத் திலும் நடித்தார் சாரதா ..
அதே போல் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அதாவது ஊர் வசி விருது முதலில் பெற்றவரும் இவர் தான். அதை மூன்று முறை பெற்ற வரும் இவரே.
முதலில் இந்த விருதின் பெயர் ஊர் வசி என்று இருந்தது பின்னர் தேசிய விருதாக மாறியது
ஷபானா ஆஸ்மியெல்லாம் இவருக்கு பின்தான் 3 முறைக்கு மேல் விருதுபெற்றவர்
அதுவும் யதார்த்தமாக நடிப்பதில் பெயர் போனவர் இவர் அத னால் தான் நாகேஸ்வரராவ்,என்.டி.ஆர் என்று எல்லோருடனும் ஜோடி சேர்ந்தார்
சிவாஜி இவருக்கு வாய்ப்பு கொடு க்க சொல்வாராம், நம்மவர்கள் மறு த்து விடுவார்களாம் இவர் அழகில் லை என்று காரணம் கூறி.. அப்படி யும் சிவாஜி குங்குமம், ஞானஒளி, என்னை ப்போல் ஒருவன் என தன் படங்களில் இவருக்கு வாய்ப்பு வழ ங்கத்தான் செய்தார் இவரும் அவரி ன் நம்பிக்கையை பொய்யாக்கியதி ல்லை
குறிப்பாக ஞானஒளியில் மண மேடை மலர்களுடன் தீபம் என்ற பாடலும், இவர் நடிப்பும் அபாரம்!
எம்.ஜி.ஆரின் தங்கையாக நினைத் ததை முடிப்பவன் படத்தில் இவர் நடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
இருந்தாலும் மலையாள உலகில் ஒரு 10 ஆண்டுகள் முண்ணனி நடிகையாகவும் சிறந்த நடிகையாகவும் விளங்கினார் . பிரேம் நசீர், மது,சத்யன் என எல்லா முண் ணனி நடிகர்களுடனும் நடித்து அவர்களை மிஞ்சும் நடிப்பை வழங்கினார்.
ஆடூர் பாலகிருஷ்ணனின் சுயம் வரம் திரைப்படத்திற்கு இவர் தேசிய விருது பெற்றார். அதே போல் துலா பாரம் படத்தில் இவரது நடிப்பு இன்ற ளவும் நம்மால் மறக்க முடியாத ஒன்று. சரி இவரது படப்பட்டியலை பார்ப்போம்.
இத்தரு மித்ருலு (1961)
வால்மீகி
ஆத்மபந்தவு
சகுந்தலா
காட்டுத்துளசி
காத்திருந்த நிக்காஹ்
திலோத்தமா
இனப்பிராவுகள்
திலோத்தம்மா
கண்மணிகள்
ராகம்
திரிவேணி
நதி
அர்ச்சணா
அதே சமயம் தெலுங்கில் நல்ல பெண்ணுரிமை பாத்திரங்கள் கிடைக்க ஆரம்பித்தன. இவரும் சோபன் பாபுவும் தெலுங்கில் ஒரு வெற்றிக் கூட்டணியாகவே திகழ்ந்தனர்.
மனுஷுலு மாறாலி
கார்தீக தீபம்
காலம் மாறிந்தி
சாரதா
பலிபீடம்
சம்சாரம்
ரகுராமுடு
மிஸ்டர் பாரத்
அம்மா ராஜினாமா -இதில் மிகவும் நன் றாக செய்திருப்பார். அரசியலிலும் நுழைந்தார். மேல் சபை உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டார்
நெடுநாட்களுக்கு பிறகு கிருஷ்ண வம்சியின் அந்தப்புரம் படத்தில் பிரகா ஷ்ராஜ்ஜின் மனைவியாக நடித்தார். இந்த பாத்திரத்திற்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று வம்சி அடம்பிடித்து இவரை மீண்டும் நடிக்க வைத்தாராம். இந்த படத்தில் ஒரு காட்சி என்னை உலுக்கியது. அது இவர் பிரகாஷ் ராஜ்ஜிடம் ஆவேசமாக பேசும் காட்சி. ஒரே டேக்கில் நடித் தாராம். கிருஷ்ணவம்சி அப்படி புகழ்ந்தார் இந்த அருமையான நடிகை யை.
மீண்டும் சில தெலுங்கு, மலையாள திரைப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்
நல்ல திறமையான நடிகைக்கு உதாரணம் சாரதா. Hollywood-ல் சொல்வது போல் actress என்றால் நடிகை என்று பொருள். 6 வயதானாலும் 60 வய தானாலும் நல்ல நடிகைகளை பாராட்டுவ தில் Hollywood -ல் தான்.
குறிப்பாக மெரில் ஸ்ட்ரீப், ஹெலன் மிர்ரன் .. நம் சாரதா அவர் களின் வரிசை யில் தான். மிகவும் அருமையான நடிகை. இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில் லை என்பதே உண்மை.
In our country, there is no respect for talented peoples. One can take an example of our favourite singer S Janaki not interested to receive the award given by the government.
Time to a think a lot.
குலதுகிட்ட கோபிச்சி கிட்டு கழுவாமல் போனால் யாருக்கு சேதம்