ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத் தில் இருந்து 7 செயற்கை கோள்களை ஏவ இந்தியா திட்டமிட்டது.
பி.எஸ். எல்.வி.-சி20 ராக்கெட் மூலம் ஏவப்படும் இந்த செயற்கை கோள்களில் 2 செயற்கை கோள்கள் கனடா நாட்டிற்கும், 2 செயற் கை கோள்கள் ஆஸ்திரியா நாட்டிற்கும், ஒரு செயற்கை கோள் இங்கிலாந்து நாட்டிற்கும், ஒரு செயற்கைகோள் டென்மார்க் நாட்டிற்கும் சொந்த மானவை.
மற்றொன்று இந்தியா-பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப் பட்டுள்ள ‘சரள்’ செயற்கை கோள் ஆகும்.
இந்த ராக்கெட் ஏவுவதற்கான 59மணிநேர ‘கவுண்ட் டவுன்’ 23-ம் தேதி காலை தொடங்கியது. இன்று மாலை 5.56 மணிக்கு பி.எஸ். எல்.வி.-சி20 விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது.
ஆனால், வளி மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 5 நிமி டம் தாமதமாக, மாலை 6.01 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.