Wednesday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நன்றி! நன்றி!! நன்றி!!!

நம் உரத்த சிந்தனையின் 29ஆவது ஆண்டு விழா, உங்களின் பேராதருவுடன் மிகவும் சிறப்பான முறையில் இன்று (24-0-2013) நடைபெற்றது.

விழாவில் இயக்குனர் திரு பாக்யராஜ், கவிப்பேரரசு வைரமுத்து, திருப்பூர் கிருஷ்ணன், மாம்பழம் சந்திர சேகர் மற்றும் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று, சிறப்புரையாற்றினர்.

இடையிடையே சமூக சேவை புரிந்தவ ர்களுக்கும், உரத்த சிந்தனை மாத இதழின் வெற்றிக்கு பாடுபட்ட செயல் வீரர்களுக்கும் பிரபலங்களின் திருக் கரங்களால் விருது, சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

மேலும் விழா நடைபெற்ற மாம்பலம் சந்திரசேகர் கல்யாண மண்ட பத்தில், 300ம் அதிகமானோர் திரண்டு வந்து கண்டுகளித்தனர். விழவிருக்கு வந்திருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நம் உரத்த சிந்தனை மற்றும் விதை2விருட்சம் சார்பில், எங்களது நெஞ்சார்ந்த நன்றிக ளை தெரிவித்து கொள்கிறோம். இதுபோன் றே தங்களின் நல்லாதரவு தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கி றோம்.    

மேலும் ஒரு ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகையும், திருநங்கைகளுக்கா ன நிதி உதவியும் கவிப்பேரசு திரு வைர முத்து அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் 

விழாவில் நடைபெற்ற மிக சிறப்பான நிகழ்வுகளை காணொளியாக நீங்களும் கண்டுகளிக்க  உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விரைவில் வெளியிடுகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து க்கொள்கிறோம் 

இப்படிக்கு
தங்கள் நட்பினை என்றென்றும் விரும்பும்
நம் உரத்த சிந்தனை மற்றும் விதை2விருட்சம்

One Comment

  • GK

    Thanks a lot for your support sathya great job and i have read your story in “uratha sinthanai” annual malar. its very really nice one, spelling is very important in all languages, you have given excellent story, pls keep on going all the best.
    regards
    GK

Leave a Reply