உரத்த சிந்தனையின் 29 ஆவது ஆண்டு விழாவின் போது, வெளி வந்த ஆண்டு மலரில் உங்கள் அன்பு நண்பன் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (நான்) எழுதிய “வரம்” என்ற சிறுகதை இடம் பெற்று உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த வரம் சிறுகதையை இங்கு பகிர்கிறேன்.
ஒரு ஊரில் ஒரு முனிவர் இருந்தார். அவர் வாய்பேச முடியாத மாற்று த்திறனாளி ஆவார். அவரது எளிமையான தோற்றமும், அவர் அப் பகுதி மக்களிடம் பழகும் முறையாலும் கவரப்பட்ட அப்பகுதி மக்கள் இவரை அன்போடு தன் வீட்டு உறவாக எண்ணி அன்றாடம் வணங்கி வந்தனர். இந்த வாய் பேச முடியாத முனிவருக்கும் இவரது சிஷ்ய கோடிகளுக்கு தினமும் ஒரு வீடு என்றமுறை வைத்து இருந்து உணவு அளித்து உபசரித்து, அவரது ஆசியும் பெற்று வந்தனர். மேலும் வாய்பேச முடியாத அந்த முனிவர், தனக்கு வேண்டியதை அல்லது விருப்பங்க ளை ஓர் ஓலைச்சுவடியில் எழுதி அதை தனது சிஷ்யர்களிடமும் அல் லது தன்னை நாடி வரும் அப்பகுதி மக்க
ளிடம் காண்பித்து, படிக்கச் சொல்லி தனது வேண்டியதை அல்லது விருப்ப ங்களை பெற்றுக் கொள் வார் அல்லது நிறை வேற்றிக் கொள்வார்.
திடீரென ஒரு அதிகாலை பொழுதில் ஓர் ஆசை முனிவருக்கு உதித்தது. தான் மரண மில்லாத வாழ்க்கை வாழவேண்டும் மென்பதே! அந்த ஆசை. மரணம் இல்லாத வாழ்க்கை வேண்டி இறைவனை வேண்டி கடுந்தவம் புரிய இருப்பதை வழக்கம்போல் ஓர் ஓலைச் சுவடியில் எழுதி தனது சிஷ்யர்களுக்கும், அவர்கள் மூலமாக அப் பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தினார்.
அவ்வாறே தானும், மரணமில்லாமல் வாழும் வரம் வேண்டி இறைவனை துதித்து, பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். இவரது கடுந்தவத்தினை கண்ட இறைவன் ஒருநாள் மனம் இறங்கி, அந்த வாய்ப்பேச முடியாத அந்த முனிவர் முன் தோன்றி, பக்தா என்னை நினைத்து நீ புரிந்த கடுந்தவத்தால் யாம் மனமகிழ்ந்து உன் முன் தோன்றினோம் என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்டார். அதற்கு அந்த வாய்ப்பேச முடியாத அம்முனிவர், தனது வழக்கமான பாணியில் ஓர் ஓலையில் எழுதி அதை இறைவனிடம் கொடுத்து படிக்குமாறு செய்கை செய்தார். இறைவனும் அந்த ஓலையை படித்த உடன், நீ கேட்ட வரத்தினை உனக்கு அளித்தோம் என்று கூறி மறைந்தார்.
வரம் கொடுத்த இறைவன் மறைந்த அடுத்த விநாடி முனிவரும் இறந்து விட்டார். அங்கே இருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி அடைந் தனர். என்ன இது சாகா வரம் பெற்ற முனிவர் இப்படி இறந்து விட்டாரே! ஒரு குழப்பத்தில் ஆழ்ந்தனர். இறைவன் மறைந்த இடத்தில் முனிவர் எழுதி க்கொடுத்த ஓலை கீழே விழுந்து கிடைந்தது. அதை எடுத்த சிஷ்யக் கோடி களில் ஒருவர் அதை படித்து பார்த்தார். அதில் சாகா வரம் வேண்டும் என்று எழுதுவதற்கு பதிலாக சாக வரம் வேண்டும்
அதாவது சாகா என்ற வார்த்தையில் வரும் “கா” நெடிலுக்கு பதிலாக “க” குறிலை குறிப்பிட்ட தனால் அதன் அர்த்தமே மாறி, சாகா வரம் வாங்க நினைத்த அந்த வாய்ப்பேச முடியாத அந்த முனிவர் சாக வரம் வாங்கி உயிரையே விட்டார். எனபது அப்போதுதான் புரிந்தது.
இந்தக்கதையில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் சொல்லுங்கள்.
ஒருமொழியை பேசும்போது எழுதும்போதும் பிழையில்லாமல் பேச அல்லது எழுத வேண்டும். பிழையாக பேசி னாலோ அல்லது பிழையாக எழுதினாலோ அதன் அர்த்தங்களே மாறி பிழையாக எழுதியவருக்கே அல்லது பேசியவர்களுக்கே அது அது வினையாக முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக மேற்காணும் சிறுகதையை நான் எழுதியிருந்தேன்.
– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
very good story Sathya. All the best!
very good story, Sathya. All the Best!