Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தங்கத்தின் தரத்தை சோதித்து அறிய அர்த்த சாஸ்திரம் சொல்லும் வழி

சகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய சாணக்கிய சாஸ்திரம்!
ஜெகாதா10

“யதா ஹ்யாஷ்ரோத்ரிய:

ஷ்ராத்தம் நஸதாம் போக்து மர்ஹதி/

ஏவமஷ்ருத ஷாஸ்த்ரார்த்தோ

நமந்த்ரம் ஷ்ரோது மர்ஹதி//

உத்தமர்கள் வீட்டில் சிரார்த்த உணவைச் சாப்பிடுவதற்கு வேதம் கற் காதவனுக்கு அருகதை கிடையாது. அதைப்போல அர்த்த சாஸ்திரத் தை அறியாதவனுக்கு மந்திரா லோசனையைக் கேட்கும் அருகதை கிடையாது.”

சாணக்கிய முனிவர் அவ்வாறு கூறியது ம் சந்திரகுப்த மௌரியருக்குச் சுருக்கெ ன்றது.

சாணக்கிய முனிவர் எப்போது குத்தலா கப் பேசுவார், எப்போது குற்றப்படுத்திப் பேசுவார், எப்போது கோபமாகப் பேசு வார் என்பதை அறிந் தவராயிற்றே!

ஒற்றர் படைத்தலைவரை வைத்துக் கொண்டு மந்திராலோசனை யாக பல்வேறுவிளக்கங்களை சாணக்கிய முனிவர் பேசிக் கொண் டிருக்கும் அந்தப் பொழுதில்,அரண்மனைப் பொற்கொல்லனை அங் கே வரும்படி அனுமதியளித்ததை மனதில் வைத்துக்கொண்டுதான் முனிவர் அப்படிப் பேசினாரோ என்று மௌரிய மன்னர் திருதிரு வெனவிழித்தார்.

அரச மாதேவிக்கு சில சிறப்பான ஆபரணங் களைச் செய்துகொண்டு வரும்படிசந்திரகுப்த மௌரியர் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந் தார். அதன்படிஅந்தப் பொற்கொல்லனும் செய்து கொண்டு வந்திருந் தபடியா ல் முனிவர் இருப்பதைமறந்து உள் ளே வரும்படி கூறி விட் டார்.

அல்லது ஒருவேளை அர்த்த சாஸ்தி ரம் அறியாத ஒற்றர் படைத் தலைவ னை முனிவர் குத்திக் காட்டுகிறாரா என்று சந்திரகுப்த மௌ ரியர் குழம்பினார்.

சாணக்கிய முனிவரின் மூச்சும் ரத்த ஓட்டமும் அர்த்த சாஸ்திரம் தான். மகதநாடு முழுவதும் தன்னுடைய அர்த்த சாஸ்திரத்துக்கு முன்னுரி மையும்முக்கியத்துவமும் கொடுத்து கௌரவப்படுத்த வேண்டும் என்று எண்ணுபவர் அவர்.

சந்திரகுப்த மௌரியர், ஒற்றர் படைத் தலைவர், பொற்கொல்லர் மூவரும் குற்றம்செய்தவர்களைப்போல ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌனம் சாதித்ததை சாணக்கிய முனி வரும் ஓரக்கண்ணால் கண்டு கொண்டார்.

“ஒட்டு மொத்த மக்கள் அனைவரின் பங்களிப்பும் அர்த்த சாஸ்திரத்தில் உள் ளது.ஒவ்வொருவரும் தங்கி, அவரவர் உலக வாழ்க்கையின் ஒழுங் கைக் கற்று ஓய்வுஎடுத்துக் கொள்ளும் தனித்தனி அறைகள் இங்கு ண்டு. உங்கள் அறையை நீங்கள்சுத்தம் செய்ய அர்த்த சாஸ்திரம் துணை செய்யும்…” என்று வாய்க்குள்ளேயே முனங்கு வதுபோல சாணக்கிய முனிவர் அப்போது கூறினார்.

தன்னுடைய கோபத்தை சாந்தப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக வே அவர் அவ்வாறுகுரலைக் கட்டுப்படுத்திப் பேசுகிறார் என்பது மௌரிய மன்னருக்குப் புரிந்தது.

“மன்னிக்க வேண்டும் முனிவர் பெருமானே! அரச மாதேவிக்குச் செய்து கொண்டுவந்த ஆபரணங்க ளைப் பார்க்கும் ஆவலில் இந்த இட த்திற்குப் பொருத்தமில்லாதபொற் கொல்லரை வரவழைத்து விட்டே ன்” என்று சந்திர குப்த மௌரியர் மன்னிப்புகோரினார்.

“தவறு மன்னா. பொற்கொல்லனுக்கும் அவனை ஆட்சி செய்யும் உனக்கும் சேர்த்துதான் அர்த்த சாஸ்திரம் பேசுகிறது. அர்த்த சாஸ்திர ம் அறியாமல் அவன்பொற்கொல்லனாக இருக்க முடியாது.

நான் கூறும் உலோக அர்த்த சாஸ்திரத்தை, மௌரிய மன்னா நீயும் கேள். அதனைக்கற்றுத் தெரிந்து இவன் கொண்டு வந்த ஆபரணங் களைப் பரீட்சை செய்து பார்.

கிஞ்ஜால்க வர்ணம், மருது, ஸ்நிக்தம்

அநாதி, ப்ராஜிஷ்ணு, சஷ்ரேஷ்டம்,

ரக்தபீதம், மத்யமம், ரக்தமபரம், ஷ்ரேஷ்டா நாம்

தாமரைத் தண்டிலுள்ள நாரின் நிறம் கொ ண்டதும், மிருதுவானதும், கரடுமுரடற்றது ம், தட்டினால் சத்தம் கேட்காததும், ஒளி யோடிருப் பதுமானஇத்தகைய தங்கம்தான் உயர்ந்தது. சிவப்பும் வெளுப்பும் கலந்த நிறத் தில்இருக்கும் தங்கம் நடுத்தரமானது. சிவப்பாக இருப் பது அதைவிட தாழ்ந்த தங்கம்.

பாண்டு நிற வெண்மையில்- அதாவது வெள்ளையில் சிறிது பச்சை கலந்தாற்போலிருக்கும் தங்கம், வேறு ஏதோ ஒரு பொருள் அதனுட ன் கலந்திருப்பதால் நல்ல நிறத்தை இழந்து காணப்படுவது.

எந்தப் பொருளைக் கலந்ததால் அது நிறமிழந்ததோ அந்தப் பொருளு க்கு நான்குமடங்கு ஈயத்தைக் கொண்டு அந்தத் தங்கத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

ஈயம் கலந்ததால் அது சுக்கலாகிப் போனால் காய்ந்த வறட்டி நெரு ப்பின்மீது வைத்துப் புடம் போட வேண்டும்.

இன்னும் சொல்கிறேன் கேள்! மஞ்சளைப் பிளந்தால் நடுவில் காணப்படும் நிறம் போல சுத்தமான தங்கம் இருக்கும். இதில் கால் உளுந்து அளவு தாமிரத்தைக் கலப்பது தொட ங்கி இவ்வாறே தாமிர அளவை அரை உளு ந்து, முக்கால் உளுந்து எடை கூட்டிக் கொ ண்டே போய், நான்கு உளுந்து எடை தாமிரம் கலப்பது வரை மொத்தம் 16 நிறங்கள் தங்கத் துக்கு ஏற்படும்.

உரசிப் பார்க்கும்போது கல்லின்மீது பரிசீலி க்க வேண்டிய தங்கத் தைக் கோடாகக்கீறி, அதன்பிறகு சுத்தமான தங்கத்துக்குச் சமமா ன கோடு இருப்பதை நன்குபரிசீலித்துத் தெரி ந்துகொள்ள வேண்டும். உரசும் கல்மேடு- பள்ளமற்றதாக சமபரப் போடிருக்க வேண்டும். கோடு அழுத்தமாக இருந்தாலும் மிகவும் மேலோட்டமாக இருந்தா லும் நகங்களிலிருந்து தாதுப்பொடி அந்த கீற்றின்மீது விழுந்தாலும் அது நல்ல தங்கம் அல்ல.

கோமூத்திரத்தில் ஊறப்போட்டு பதமான ஜாதி குங்கலிகம் என்னும் பொருளை உள்ளங்கையில் அல்லது விரல்களில் பூசிக் கொண்டு தங்கத்தைத் தொட்டுப் பார்க்கவேண்டும். தொட்டதும் அது வெளுத் து விட்டால் அது நல்ல தங்கம் அல்ல.

உரசும் கல்லில் இழுத்த கோடு பொடிக ளாக- மென்மையான ஒளியோடு வழுவ ழுப்பாக இருந்தால் அந்தத் தங்கம் உயர்ந்த தங்கம்.

அலங்காரம் செய்யும் தங்கத்தின் மூன்று பங்கை, முப்பத்தியிரண்டு பங்குவெள்ளை வெள்ளியோடு கலந்தால் அது இளஞ்சிவப் பு நிறமாக ஆகும். அவ்வாறே தாமிரத்தோ டு கலந்தால் மஞ்சள் நிறமாக ஆகும்.

சாதாரணத் தங்கத்தை சைந்திக மண்ணால் மெருகேற்றி, அதில் சுத்த தங்கத்தை மூன்று பங்கு கலந்தால் மஞ்சளாக மாறும்.

வெள்ளை வெள்ளி இரண்டு பங்கும் அலங்கரிக்க வேண்டிய தங்கம் ஒரு பங்கும் கலந்தால் பயற்றம் பருப்பு நிறம் கிடைக்கும்.

அலங்கரிக்க வேண்டிய தங்கத்தைப் பாதியளவு இரும்பால் பூசினால் கருப்பாகும்.இதே தங்க த்தை இருமடங்கு ரசா யனக் கலவையில் ஊற வைத்தால் அதன் நிறம் கிளிச்சிறகுகளின் நிற மாக மாறும். இப் படி நிறம் மாறும்போது முதலில் இந்தக்கலவை கள் எந்த அளவுக்கு உலோகத்தோடு ஒட்டும் என்பதை சோதித்துப் பார்த்துக்கொள்ள வே ண்டும்.”

சாணக்கிய முனிவர் சொல்லச் சொல்ல மன்னன் மட்டுமல்லாது, அந்தப் பொற்கொல்லனும் பிரமித்துப் போனான். அவர்களது பிரமிப் பை கடைக்கண்ணால் பார்த்தபடியேசாணக்கிய முனிவர் மௌரிய மன்னரை ஏறிட்டு நோக்கினார்.

“சந்திரகுப்த மௌரியா! மகத நாட்டின் மன்னன் என்ற முறையில் தங்கத்தின்மீதானகண்காணிப்பையும் அதன் மோசடிகளையும் நீ அறிந்து வைத்திருக்க வேண்டும்.

உளுந்து எடை தங்கம் நிறம் குறைந் தால் அந்தப் பொற்கொல்லனு க்கு 250 வெள்ளிக்காசுகள் அபராதம் விதிக்க வேண்டும். எடையில் உளுந்து அளவு குறைந்தால்அதற்கும் அதிகமாக அபரா தம் விதிக்க வேண்டும்.

தராசிலோ எடைக் கற்களிலோ மோச டி இருந்தால் 1000 வெள்ளிக் காசுகள் அபராதம் விதிக்க வேண்டும்.

தங்கசாலை அதிகாரிக்குத் தெரியாமல் வேறொரு இடத்தில் வேலை செய்யும் பொற்கொல்லனுக்கு 12 வெள் ளிக்காசுகள் அபராதம். செய்வித்தவனுக்கு இரண்டு மடங்கு அபராத ம்.

பொற்கொல்லர்கள் தராசு, எடைக்கற்கள் முதலானவற்றை எடை பார்க்கும் அதிகாரியிடமிருந்தே வாங்க வேண்டும். அப்படிச் செய்யா விட்டால் 12 வெள்ளிக் காசுகள்அபராதம் விதிக்க வேண்டும்.

தப்பான தராசுகளால் மோசடி செய்வதற்கு துலாவிஷமம் என்று பெயர். தங்கத்திருட்டுக்கு இதே போன்று அபசாரணம், விஸ்ராவ ணம், பேடகம், பிங்கம் என்று வேறுமோசடி முறைகளும் உள்ள ன.

இரண்டு பங்கு வெள்ளி, ஒரு பங்கு செம்பு கலந்தால் இதற்குத் திரி புட கம் என்று பெயர். சுத்தமான தங்க த்தில் இதனைக் கலந்துவிட்டு அந்த அளவு நல்லதங்கத்தை எடு த்துக் கொள்வது திரிபுடக அப சாரிதம் எனப்படும். வெறும் செம்பை மட்டும் கலந்துவிட்டு நல்ல தங்கத்தை எடுத்துக் கொள்வது சுல்பாப சாரிதம்எனப்படும்.

வெள்ளியையும் இரும்பையும் சம பாகமாகக் கலப்பதற்கு வேல்ல கம் என்று பெயர்.இதைக் கலந்துவிட்டு அதே அளவு தங்கத்தை எடு த்துக் கொள்வதற்குவேல்லகாபசாரிதம் என்று பெயர்.

தங்கத்தையும் செம்பையும் சமஅளவு கல ந்து அதை வைத்துவிட்டு நல்ல தங்கத் தைஎடுத்துக் கொள்வதற்கு ஹேமாபசா ரம் என்று பெயர் . இவ்வகைகளில் கெட்ட தங்கத்தைவைத்து விட்டு நல்ல தங்கத் தை எடுத்துக் கொள்ளும் மோசடிக்கு பொ துவாக அபசாரணம் என்று பெயர்.

தங்கசாலை அதிகாரி புதியதையும் பழைய தையும் நிறம் மாறிய பொருளையும் பரீட்சி த்துப் பார்த்து, அதற்கேற்ப நஷ்டத்துக்குப் பரிகாரம் தேட வேண் டும்…”

அரண்மனைப் பொற்கொல்லனின் மடியிலிருந்த ஆபரணப் பொரு ட்கள், சாணக்கியமுனிவரின் அர்த்த சாஸ்திரம் கேட்டு அப்போது தங்களுக்குள்ளேயே அதிரத்தொடங்கியதை அந்தப் பொற்கொல்ல னின் காதுகள் மட்டும் ரகசியமாகக் கேட்கத்தொடங்கின!

– நக்கீரனில் மீண்டும் ஒலிக்கும்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: