2013-14ஆம் நிதியாண்டிற்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பவன்குமார் பன்சால் தாக்கல் செய்து கொண்டிருக் கிறார். அதன் முக்கிய அம்சங்கள் உடனுக்குடன் உங்களுக்காக…
17 ஆண்டுகளுக்குப் பின் ரயில்வே பட்ஜெட்டை காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் தாக்கல் செய்கிறார் குறிப்பிடத்தக்கது.
ரயில்வே நிதி ஆதாரத்தைப் பெருக்கி தன்னிறைவு பெற வேண்டும்.
ரயில்வேயின் தொடர் நட்டம் காரணமாக பயணிகளுக்கு குறைபாடு ஏற்பட்டது. இம்முறை அதனை களைய முயற்சிப்போம்.
செலவுகள் அதிகரிப்பு காரணமாக சரக்கு கட்டணம் உயர்த்தப் படுகிறது.
—————-
தமிழ்நாட்டில் 14 ரயில்கள் மற்றும் ரயில்கள் நீட்டிப்பு!
சென்னை – காரைக்குடி இடையே வாராந்திர ரயில் இயக்கப்படும்.
கோவையில் இருந்து மன்னார்குடிக்கு திருச்சி, தஞ்சாவூர், நீடா மங்கலம் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்.
கோவையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வாராந்திர ரயில்.
சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை, சேலம், கரூர், நாமக்கல் வழியாக பழனிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்.
சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக தஞ்சாவூருக்கு தினசரி ரயில்.
சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு விழுப்புரம், மயிலாடு துறை, தஞ்சாவூர் வழியாக புதிய ரயில்.
சென்னையில் இருந்து ரேணிகுண்டா, கச்சேகுடா வழியாக ஷிரடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்.
பழனியில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூருக்கு தினசரி ரயில்.
நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு மதுரை, திருச்சி வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி வழியாக கன்னியாகுமரிக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரயில்.
சென்னையில் இருந்து ஹவுராவுக்கு வாரம் இருமுறை ரயில்.
மங்களூரில் இருந்து தானே, கூட்டி, ரேகுண்டா, கோவை வழியாக காச்சிகுடாவுக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்.
சென்னை- பிகானீர் இடையே வாராந்திர ரயில்.
திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்.
கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இனி வாரத்துக்கு 4 நாள் இயக்கப்படும்.
மதுரை- கொல்லம் பயணிகள் ரயில் புனலூர் வரை நீட்டிக்க படுகிறது.
மதுரை – திண்டுக்கல் பயணிகள் ரயில் பழனி வரை நீட்டிக்கப்படும்.
காரைக்குடி – மானாமதுரை பயணிகள் ரயில் விருதுநகர் வரை நீட்டிக்கப்படும்.
கன்னியாகுமரி- திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் வாரத்தின் 7 நாளும் இயக்கப்படும்.
நாகர்கோவில்- கன்னியாகுமரி பயணிகள் ரயில் வாரத்தில் இனி 7 நாள் இயக்கப்படும்.
நெல்லை- நாகர்கோவில் பயணிகள் ரயில் 7 நாட்களும் இயக்கப்படும்.
சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் காரைக்குடி வரை நீட்டிக்கப் படுகிறது.
மங்களூர்- திருச்சி ரயில் புதுச்சேரி வரை நீட்டிக்கப்படுகிறது.
பெங்களூர் – நாகூர் பயணிகள் ரயில் காரைக்கால் வரை இயக்கப் படுகிறது.
மதுரை- டேராடூன் செல்லும் சண்டிகார் எக்ஸ்பிரஸ் இனி வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படுகிறது.
———————
புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியிடும் போது எதிர்க் கட்சி கள் தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்டனர். இருந்தாலும் அந்த கூச்ச லுடனேயே அறிவிப்பை வெளியட்டு ரயில்வே பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் பவன்குமார் பன்சால்.
இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
————–
58 ரயில் தடங்கள் நீட்டிக்கப்படுகிறது.
27 புதிய பாசஞ்சர் ரயில்கள் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த ஆண்டு 1,200 கி.மீ. ரயில் பாதை மின் மயமாக்கப்படும்.
—————–
67 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். தஞ்சை – பட்டுக் கோட்டை புதிய ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி இடையே புதிய ரயில் பாதை அமை க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பெங்களூரு – சத்தியமங்கலம் ரயில் பாதை பணிகள் விரைவு படுத்தப்படும்.
சரக்கு கட்டண வருவாய் 9 விழுக்காடு அதிகரித்து 93,554 கோடி யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
————–
அதிவிரைவு ரயில் கட்டணம் (சூப்பர் ஃபாஸ்ட்), முன்பதிவு மற்றும் தக்கல் கட்டணம் உயர்த்தப்படும்.
பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
-thanks to webdunia