எவன் தன்னையே , கடவுளாகிய சொரூபனிடத்தில் தியாகம் செய்கின்றானோ அவனே சிறந்த பக்திமான் .
ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றும் இடம் கொடுக்காமல் ஆத்ம நிஷ்டாபரன யிருப்பதே தன் னை ஈசனுக்கு அளிப்பதாகும்.
ஈசன் பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும் அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்கிறார். சகல காரியங் களையும் ஒரு பரமேஸ் வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிற படியால், நாமும் அதற்கு அடங்கி யிராமல் , “இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் “‘ என்று ,சதா சிந்திப்பதேன்?
புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக் கொண்டு போவது தெரிந்திருந்தும் அதிலேறிக் கொண்டு போகும் நாம் , நம்முடைய சிறிய மூட்டையையும் அதிரப் போட்டுவிட்டு சுகமாயிராமல் அதை நமது தலையில் தாங்கிக் கொண்டு என் கஷ்டப்பட வேண்டும். ?
thanks to GK on facebook