கர்நாடக இசையிலும், திரை இசைப் பாடல்களிலும் இசை ரசிகர் களை மட்டுமின்றி பாமர மக்களையும் தனது வயலின் இசையால் மயக்கிய வயலின் சக்ரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன் அவர் களின் பிறந்த தினம்
1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவ கங்கை மாவட்டம் குன்ன க்குடியில் இராம சாமி சாஸ்த்திரி – மீனாட்சி ஆகியோ ருக்கு வைத்தியநாதன் பிறந் தார். கர்நாடக இசைக் கலை ஞரான தனது தந்தை இராம சாமி சாஸ்த்திரியிடம் இளம் வயதிலேயே கற்கத் தொடங்கிய வைத்தியநாதன், வாய்ப்பாட்டுடன் வயலின் இசைக்க வும் கற்றுத் தேர்ந்தார்.
12 வயதிலேயே இசைக் கச்சேரிகளில் பங்கேற்று சாதனை புரிந்த வைத்தியநாதன், கர்நாடக இசையில் சிறந்து விளங்கிய வித்தகர் களான அரியாக்குடி இராமா னுஜ ஐயங்கர், செம்ம ங்குடி சீனிவாச ஐயர், மஹா ராஜபுரம் சந்தானம், சித்தூர் சுப்ரமணிய பிள்ளை ஆகியோ ருடன் இணைந்து பல கச்சேரி களில் பங்கேற்றார்.
கர்நாடக இசைக்கலைஞர்கள் மட்டுமின்றி, நாதஸ்வர மேதைக ள் திருவாடுதுறை டி.என். இராஜரத்தினம் பிள்ளை, திருவென் காடு சுப்ரமணிய பிள்ளை ஆகியோருடன் இணைந்து ரசிகர்களை மகிழ் வித்தார்.
தனித்தும் இசைக் கச்சேரிகளை நடத்திய வைத்தியநாதன், கர் நாடக இசையை பாமர மக்களும் ரசிக்கும் வண்ணம், அவர்கள் மிகவும் ரசிக்கும் சிறந்த திரையிசைப் பாடல் களையும் இடையிடையே வாசித்து மகிழ்வி த்தார். இசை வித்தகர்களில் இருந்து பாமர மக்கள் வரை தமிழ்நாட்டின் மூலை முடுக்கு களிலும் வைத்தியநாதன் என்றால் இசை மழை என்று பெருமை பேசும் அளவிற்கு இளம் வயதிலேயே புகழ் பெற்றார்.
திரையிசையமைப்பதிலும் பங்கேற்று வந்த குன்னக்குடி வைத்தி யநாதனை தனது வா ராஜா வா படத்தின் இசை யமைப் பாளராக அறிமுகம் செய்தார் ஏ. பி. நாகராஜன். அந்த படமும், பாடல்களும் மக்க ளிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து திருமலை தென்குமரி, தேவர் பிலிம்ஸ் தயாரித்த தெய்வம் படங்களுக்கு இசையமைத்தார் வைத்திய நாதன்.
தெய்வம் படத்தில் கர்நாடக இசை மேதை மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே முருகையா என்ற பாடல் மிக வும் பேசப் பட்டது. அப்பாடலை விழாக் காலங்களில் தமிழகம் முழுவதும் பயணித்து மதுரை சோமு பாடினார். அப்பாடலை தனது வயலினில் இசைத்து தனது வாழ்வின் இறுதிக் காலம் வரை மக்களை மகிழ்வித்து வந் தார் வைத்தியநாதன்.
22 தமிழ் திரைப்படங்களுக்கு இசை யமைத்த குன்னக்குடி வைத்திய நாதனுக்கு, திருமலை தென் குமரி திரைப்படம் சிறந்த இசையமைப்பா ளருக்கான விருதை பெற்றுத் தந்த து. தமிழக அரசின் கலைமாமணி விருதும் அளிக்கப்பட்டு பெருமை படுத்தப்பட்டவர் வைத்தியநாதன்.
தவிலுடன் வயலின்!, வயலின் வாசிப்பில் பல புதுமைகளைச் செய்த வைத்தியநாதன், தவில் கலைஞர் வலையப்பட்டி சுப்ரம ணியத்துடன் இணைந்து 3,000 கச்சேரிகளை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, அயல் நாடுகளுக்கும் சென்று வயலி ன் இசைக்கச்சேரிகளை நடத்தி யுள்ள வைத்தியநாதனுக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதளித்து பெரு மைபடுத்தியது.
சங்கீத நாடக அகாடமி, சங்கீத மாமணி, கர்நாடக இசை ஞானி போ ன்ற பெருமைமிக்க விருதுகளையும் வைத்தியநாதன் பெற்றுள் ளார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலராகவும், திருவையாறு தியாக ராஜர் விழாக் குழுவின் தலைவராக 28 ஆண்டு களும் பணியாற்றியுள்ளார்.
குன்னக்குடி வைத்தியநாதனுக்கு மனைவி பாகீரதி, சேகர், சீனி வாசன், ஸ்ரீதர், பால சுப்ரமணியன் ஆகிய 4 மகன்களும், மகள் பானு மதி இராமகிருஷ்ணனும் உள்ளனர்.
thanks to Gopal Krishnan RadioMarconi on facebook