Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மது அருந்துவதனால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன‌ நல பாதிப்புகள்

மது அருந்துவதனால் ஏற்படக்கூடிய உடல் நலப் பாதிப்புகள்

மது அருந்துவதனால் ஏற்படக்கூடிய உடல் நலப் பாதிப்புகளில் கல்லீரல் இழை நார் வளர்ச்சி, கணைய அழற்சி, காக்காய் வலிப்பு (epilepsy), பன்மை நர ம்புகள் இயக்கத்தடை (polyurethane ), மதுசார் மறதிநோய், இதய நோய்கள், ஊட்டச் சத்துக் குறைபாடுகள், வயிற்றுப் புண், பால்வினை செயல் பிறழ்ச்சி, போன்ற வை ஏற்படுவதுடன், இறுதியில் சில சமயம் இறப்பும் ஏற்படும். மேலும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் கடு மையான புலன் உணர்வு சார்ந்த பிரச்சனைக ளையும் எதிர் கொள்ள நேரிடுகிறது. அறிவாற்றல் இழப்பு மற்றும் உளத் தளர்ச்சி போன்ற வியாதி களில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு நிகழ்வு கள் மதுவை அருந்துவதால் ஏற் படுவதாகும். மேலும் அறிவாற்ற ல் இழப்பு போன்ற நோய்கள் வருவதற்கு குடிப்பழக்கம் இரண் டாவது இடத்தை பிடிக்கும் கார ணியாக இருக்கிறது. உடல் நலத் தைப் பாதிக்கும் இதர காரணிகளி ல் இதய குழலிய வியாதி (cardiovascular disease), அகத்துறி ஞ்சாமை (malformation), மது சார்ந்த கல்லீரல் நோய், மற்றும் புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான மிகையான சூழி டர் இருக்கின் றது. தொடர்ந்து மது அருந்துவதால் மைய நரம்பு மண்டலமும் புற நரம்பு மண்டலமும் கூடச் சேத மடையலாம். பொதுவாக குடிகாரர்கள் இறப்பதற்கு கார ணம் இதயகுழலிய கோளாறுகள் தான் என அறியப் பட்டுள்ளது. அதி கரித்த குடிப் பழக்கத்தால் ஆண்க ளைவிட, பெண்களிலேயே அதிகள வில் சிக்கல் கள் ஏற்படுவதாகவும், குடியினால் ஏற்படும் இறப்பும் பெண்களி லேயே அதிகம் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

மது அருந்துவதனால் ஏற்படக்கூடிய மன நல பாதிப்புகள்

நீண்ட காலத்திற்கு மதுவைத் தவறாகப் பயன்படுத்தினால் பல வகையான மன நல பாதிப்புகளுக்கு ஆளாகலாம். இது தொடர்ந் தால், அதன் காரணமாக நீண்ட-கால பாதிப் புகள் உடலில் நச்சுத் தன்மையைக் கூட்டுவ தோடு, மூளையின் செயல் பாட்டையும் பாதிக்கும். அதனால் உளவியல் ரீதியாக மனநிலை மிகை யாகப் பாதிக்கப்படலாம். பொதுவாக குடிப்ப வர்களிடையே தவிப்பு/ மனக் கலக்கம், அதிகரித்த மனச்சோர்வு போன்ற மனநிலைச் சீர்கேடு கள் காணப்படும். குடிப்பவர் களுக்கிடையே 25 விழுக்காடு மக்க ள் கடுமையான மனநலச் சீர்கேடுகளால் அவதியுறுகின்றனர். மேலும் மது அருந்துதலை நிறுத்த முனையும் பொழுதும், இது போன்ற மனநலப் பாதிப்பிற்கான அறிகுறிகள் முதலில் தோன்றுவதால் மனநிலை மேலும் சீர்குலையும், ஆனால் தொ டர்ந்து மது குடிப்பதைத் தவிர்ப்பதால், சிறுகச் சிறுக மாற்றங்கள் ஏற்பட் டு, இந்த அறிகுறிகள் மொத்தமாக மறைந்து விடும்.

கடுமையான மது அருந்தும் தவறான போக்கினால் உளப்பிணி, குழப்பம் மற்றும் மூளை உறுப்பில் ஏற்படும் சீர்கேட்டு நோய்க் குறித்தொகுப்பு போன்ற பாதிப்புகள் தூண்டப்படலாம். மேலும் அதனால் மனப்பித்து போன்ற கடுமையான மன நலச் சீர்கேடுகள் கண்டுபிடிக்க இயலாமல் போகலாம். தொடர்ந்த குடிப் பழக்கத் தால், மூளையின் (neuro chemical) நரம்பு வேதியியல் முறைமை பழுதடைந்து அச்சத்தால் ஏற்படும் சீர்குலைவு நிலை மைக்குக் கொண்டு விடலாம். அச்சத்தால் ஏற் படும் சீர்குலைவு மது குடிப்ப தை நிறுத்தும்போதும் ஏற்பட்டு, நிலை மை மேலும் மோசமாக லாம்.

பெரும் மனத்தளர்ச்சி கோளாறுகளும், குடிப்பழக்கமும் ஒன்றுட ன் ஒன்று தொடர்புடையதாய் இருப்பது நன்றாக கண்டறியப்பட்ட ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட முதன் மையான நோயுடன், வேறு ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட நோய்களோ இணைந்திருக்கும் நிகழ்வுகளில், மது அருந்துவதை நிறுத்துவதால் ஏற்படக் கூடிய மனத்தளர்ச்சி நிலையையும், அவ்வாறில்லாமல் மது நிறுத்தத்துடன் தொடர்பற்று ஏற்படக் கூடிய மனத்தளர்ச்சி நிலையையும் வேறுபடுத்தி அறிய முடியும். மது நிறுத்தத்துடன் தொடர்பற்ற மன த்தளர்ச்சி நிலை முதன்மை யானதாகவும், மது நிறுத்தத்துடன் தொடர்புள்ள மனத்தளர்ச்சி இரண்டாம் நிலையினதாக வும் இருக்கும் குடிப்பழக்கத்திற்கு அடிமை யானவர்கள், வேறு மருந் துகளும் பயன் படுத்துபவ ராயின் மனத் தளர்ச்சிக்கான சூழிடர் மேலும் அதிகரிக்கும்.

மனநல பாதிப்புக்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் வேறுபட்டு இருப்பது அறியப்பட்டிருக்கின்றது. பெண்களில் குடிப்பழக்க மன நலச்சீர்கேடு கொண்டவர்களில், பொது வாக மனத்தளர்ச்சி (Depression), மனக் கலக்கம் (Anxiety), அச்சத்தாலேற்ப டும் கோளாறுகள் (Panic disorders), மன அழுத்தத்தின் பின்னர் ஏற்படக்கூடி ய கோளாறுகள், ஆளுமைச் சிதைவுக் கான ஆரம்பம் போன்றன இணைந்து காணப்படும்.

ஆண்களில் தற்காதல் ஆளுமைச் சிதைவு, சமூகத்துக்கு எதிரான ஆளுமைச்சிதைவுகள், மனப்பித்து , கவனப் பற்றாக்குறையால் ஏற்படும் மிகை இயக்கம் போன்ற நிலைகளுடன் இணைந்தி ருக்கின்றன.

(இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: