Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியம் – பிரச்சனைகளுக்கு காரணம் பெண்களே

பெண்களின் மனோபாவங்கள்:

ஒரு குடும்பம் சிறந்து விளங்குவதற்கு ஒரு பெண்தான் பெரும்பா லும் காரணமாக இருக்கிறாள் அதே நேரம் அந்த குடும்பம் சீர் குலையவு ம் அந்த பெண்ணே காரணமாகி விடு கிறாள்.  இதற்கு அவளது குணாதிசிய ங்கள் முக்கிய பங்கு வகிக்கி ன்றன.

பொதுவான குணாதிசியங்கள்:

எல்லா பெண்களுக்குமே எதிர்பார் ப்புகள் அதிகம் இருக்கும்.   எதிர் காலத்தை பற்றிய கனவுகள் இருக் கும். பல பெண்களும்  விரும்பு வது துடிப்பான, விவேகமான, படித்த, கொஞ்சம் அழகான (ரொம்ப அழகா இருந்தா ஆபத்துதானே), நகை சுவையுடன் பேசக் கூடிய (மனைவியுடன் மட்டும்), உயரமான (மனை வியை விட கொஞ்சம் அதிகமாக), புத்திசாலியான  (மனைவிக்கு  முன்னால் இல்லை), சிக ரட், தண்ணி அப்படினா என்ன என்று கே ட்க கூடிய அப்பாவியா  (டார்ச்சர் தாங்க முடியாம தண்ணி அடிக்க தொ டங்கினா, பரவாயில்லை, பொறுத் துக்கலாம்). அப் புறம் முக்கியமான ஒரு விஷயம் என்ன ன்னா கை நிறைய சம்பளம் (கணவன், மனைவி இருவர் கையும் சேர்ந்தால் போல நிறையணும்). இவ்வளவு தாங்க பெண்களின் எதிர்பார்ப்பு எல்லாம்.

விருப்பங்களும், எண்ணங்களும்  ஒவ்வொருத்தருக்கும் ஏற்ப மாறுபட லாம், ஆனால் எதிர்ப்பார்ப்பு என்பது கண்டிப்பாக இருக்கும். எதிர் பார்ப்பி ல் ஏதாவது ஒன்று  குறைந்தாலும் அவள் மனதிற்குள் வெறு மை சூழ்ந்து விடும்.  இதுதான் இன்றைய பெண்க ளின் மன போக்கு.  இது மிகவும் ஆபத் தான ஒன்று தான்.  

முந்திய தலைமுறையினர் கிடைப்பதை வைத்து மனதிருப்தியுடன் குடும்பத்தை நடத்தினர்.  கணவனின் எண்ணத்திற்கு ஏற்ப தங்களு க்கு ஏற்புடையது இல்லை என்றாலும் சமாளித்தனர், அதனால் அவர்களின் திரு மண வாழ்க்கை வெள்ளிவிழா கொண்டா டும் அளவிற் காகவாது வந்தது.  ஆனால் இப்போது பல திருமணங்கள் முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடுவதற் குள் கோர்ட்டில் முடிந்து விடுகிறது.   இந் நிலை கவலை படகூடிய ஒன்று என்பதை யாரும் மறுக்கமுடியாது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற போக்கு தான்.   

ஆண்கள்தான் காரணம் என்று அவர்களை குறை சொல்வதை விடு த்து தங்களால் முடிந்தவரை பிரச்சனை களை சரி செய்ய முயல வேண்டும்.  முக் கியமாக பிறர் சொல்வதை கேட்காமல் சுயமாக முடிவு எடுக்க பழகி கொள்ள வேண்டும். பலர் ஆலோசனை சொல் கிறேன் என்று அவர்கள் வாழ்வில் நடந்த சிலவற்றை முன் உதார ணமாக சொல்லி நம்மை குழப்பி விடுவார்கள்.  ஆனால்  சம்பந்த ப்பட்ட பெண்ணோ அல்லது ஆணோ நிச்சயமாக அந்த பிரச்னையை பற்றி மட்டும்தான் யோசிப்பார்கள், ஆக ஒரு நல்ல தீர்வு கண்டிப்பாக கிடைக்கும். மற்றவர்களுக்கு இவர்கள் பிரச்ச னை சாதாரண ஒரு சம்பவம் ஆனால் இவர்களுக்கு அது வாழ்க்கை அல்லவா ?

பிறரின் சொல்படி நடக்கும் மனோபாவம்:

இப்ப பல பெண்களும் நன்கு படித்து உலக அனுபவம் பெற்றவர்களாக இருந்தும் திரு மணம் என்று வந்தவுடன் பலரது ஆலோ சனைக்கு செவி சாய்ப்பவர்களாகி விடுகிறார்கள்.   

காதல் திருமணம் செய்தவர்களுக்கு திருமணம் முடியும் வரை யார் சொல்வதும் காதில் விழாது. ஆனால் திருமண வாழ்க்கையில் சின்ன பிரச்சனை வந்தால் போதும் அவன் மேல் தவறு என்று அவளும்,   இவள மேல்தான் தவறு  என்று அவனும் மாறிமாறி குறைசொல்ல ஆட்களை வலிய தேடி போய் சொல்வார்கள். கேட்பவர்க ளும் வாய்க்கு வந்ததை சொல்லி பிரச்சனையில்  கொஞ்சம் எண்ணையை ஊற்றி விட்டு செல்வார்கள்.
 
பெற்றோர்கள் வரன் பார்த்து நடத்திவைக்கும் திருமணங்களில் பெண்ணிற்கு நல்லது பண்ண வேண்டுமே என்ற எண்ணத்தில் அவர் கள் நடந்து கொள்ளும் சில விதங்கள் அந்த பெண்ணின் வாழ் கை யையே சீரழிப்பதை அவர்கள் உணருவதே இல்லை. வரன் பார்க்க தொடங்கும்போதே தரகரி டம் அவர்கள் வைக்கும் முதல் கோரிக் கையே  மாமியார் , நாத்த னார் மாதிரி எந்த பிக்கல், பிடுங்கலும் இல்லாத வீடா இருந்தா நல் லது என்பதுதான்…?! (இப்படியே இவர்கள் மகனுக்கு வரும் பெண் வீட்டாரும் இருந்து விட்டால் ஒன்று அந்த பையனுக்கு கல்யாணம் ஆக பல வருடம் ஆகும் அல்லது தாய் உட னே சாக வேண்டும் )  

இதை கேட்கும் பெண்ணின் மனநிலை என்ன ஆகும்….?   அந்த நிமிட மே அவள் மனதில் மாமியார், நாத்தனார் என்பதின் அர்த்தம்  பிக்கல், பிடுங்கல் தான் என்ற விஷ விதை மறைமுகமாக ஊன்றபட்டு விடுகிறது.  ஒரு வழியாக சம்பந்தம் இருவீட்டார்க்கும் பிடித்துபோய் நிச்சயத்தின் போது  அந்த மாமியார் கேட்கும் வரதட்சணையால் அந்த விதைக்கு நீர் ஊற்றபடுகிறது.   பின்னர் திருமண நாள் நெருங்கும் நேரத்தில் அந்த பெண் ணின் உறவினர்களாலும், அக்கம் பக்கத்து நண்பர்களா லும் (நல்லது செய்வதாக  நினைத்து கொண்டு ) பல அழிவுரைகள் மன்னிக்கவும் அறிவுரை கள் வழங்க படுகின்றன.  அதில் சில வசன ங்களை பார்ப்போம்:  

i )  ‘மாமியார்கிட்ட கொஞ்சம் கவனமா இருந்துக்கோ..!’   ( ஏன்னா அவங்க பூதம் பாரு, தூக்கிட்டு போனாலும் போய்டுவாங்க! ) சில நேரம் இப் படி சொல்றவங்களே ஒரு பெண்ணுக்கு  மாமியாரா கூட இருக்க லாம்…..!!

ii ) ‘நாத்தினார கிட்ட சேர்க்காத.!’  ( ஏன் தொ த்து வியாதியா?) ‘ உங்க வீட்டு விசயத்தில அவள் தலையிடாம பார்த்துக்கோ…!’ (உன க்கு உன் பிறந்த வீட்டில் எவ்வளவு உரிமை  இருக்கோ அந்த அளவு உரிமை அவளுக்கு அவளது பிறந்த வீட்டில் இருக்ககூடாதா ?)

iii ) அடுத்த ஆபத்து கணவனுக்கு! ‘ உன் கண வனை உன் கைக்குள்ள போட்டுக்கோ, முந் தானையில முடிஞ்சி வச்சுக்க ‘ ( அவ்வளவு குட்டியாவா இருப்பாரு..!! )

iv ) ‘கடைசியா முக்கியமா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ  அவ்வளவு சீக்கிரம் தனி குடித்தனம் போற வழிய பாரு ‘ ( நீ சீரா கொண்டு வந்த பொருட்களை வித்து தின்னுடு வாங்க) ‘புத்திசாலியா பொழைச்சுக் கோ, நான் சொல்ல வேண் டியதை  சொல்லிட்டேன் அப்புறம் உன் சாமார்த் தியம் ‘ கடைசியா கொஞ்சம் பொடி வச்சு (அது என்ன பொடி ? தெரிந்தவர் கள் சொல்லவும்)  சொல்லிட்டு  சென்று விடுவார்கள்.  

அந்த பெண்ணும் தன்னை எப்படி புத்தி சாலி என்று நிரூபிப்பது, எப்படி சாமார்த்தசாலி என்று பெயர் எடுப்ப து என்பதை பற்றி யோசிக்கும்போதே ஏற்கனவே போடப்பட்ட விதை நன்கு ஆழ ஊன்றி துளிர்விட ஆரம்பத்திருக்கும். இப்படி இந்த வித த்தில் ஒரு பெண்ணை திருமணதிற்கு தயார் படுத்தினால் அவளது எதிர் காலம் என்னாகும் என்று யாரும் ஒரு நிமிடம் கூட நினைத்து பார்ப்பது இல்லை.   திரு மணதிற்கு பின் ஏதாவது பிரச்ச னை என்றா ல் இந்த நலம் விரும்பிகள் எங்கே என்று கண்ணில் விளக்கெண் ணை போட்டு கொண்டு தான் தேட வேண் டும்.  அப்படியே தென்பட்டாலும் நீ தாம்மா பார்த்துக் கணும் என்று சொ ல்லி நாசுக்காக நழுவி விடுவார்க ள்.  சில பெற்ற வர்களும் மகளே உன்  சமத்து என்று   சொல்லிவிட் டால் அந்த பெண்ணின் நிலை என்ன….?   இது இன்றும் பல வீடுக ளில் குடும்பங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது…

திருமணதிற்கு பிறகும் தொடரும் அவலம்

திருமணதிற்கு பின் புகுந்த வீட்டில் புகும் பெண்ணின் கண்களுக்கு அங்குள்ள அனை வருமே எதிரிகளாகவே தெரியும். யாரிடமும் சரியாக பேசி பழகாமல் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள்ளே முட ங்கிவிடுகிறாள்.  கணவன் இருக்கும் நேர த்தில் மட்டும்தான் அவளது பேச்சையும், சிரிப்பையும் மற்றவர்கள் கேட்க முடியும். புது பெண்தானே  போகப்போக சரியாகி விடும் என்று பிறரும் சமாதானம்  செய்து கொள்வார்கள் ( இவள் மனதில் விஷம் என்ற மரம் தற் போது கிளை பரப்பி செழித்து  வளர் ந்திருப்பதை அறியாதவர்க ளாய்!! )

அந்த மாமியாரும், நாத்தனாரும் ஒருவேளை நல்லவர்களாக இருந் தாலும் இந்த பெண்ணை பொறுத்தவரை கெட்டவர்கள்தான் (அப்படி தானே அவ ளுக்கு சொல்ல  பட்டிருக்கிறது) புகுந்த வீட்டினரை தனது நாக்கு என்னும் விஷ கொடுக்கால் சமயம் கிடைக்கும் போ தெல்லாம் கொட்ட தவறுவதே இல்லை.  சில நாட்களில் எடுத்ததுக்கெல்லாம் குற் றம் குறை சொல்லி தன் கணவனை அந்த குடும்பத்திடம் இருந்து பிரித்து தனி குடித்தனம் கொண்டு போய் விடுகிறாள்.

கணவனும் அப்படி போனாலாவது சண்டை குறையுமே என்றுதான் போகிறான். அங்கும் சச்சரவு  தொ டர்ந்து கொண்டுதான் இருக்கும் (எதையும்  குறை சொல்லி பழகி விட்டதால்)  காலம் கொஞ்சம் கடந் த பின்தான் கணவனும் தன் தாயை தவிக்கவிட்டு வந்ததை உண ர்ந்து மனம் குமைகிறான். அவனுடைய இயலாமை வெறுப்பாக மனைவியி ன் மீது திரும்ப வீடு நரகமாகிறது,  கணவன், மனைவி உறவு பாதிக்கபடுகிறது.

ஆக இப்படிப்பட்டநிலை உருவாக காரணமாக அமைவது அந்த பெண்ணின் நிலையற்ற  மனநிலைதான்.  மற்றவர்கள்  ஆயிரம் சொ ன்னாலும் கேட்கிறவர்களுக்கு புத்தி எங்கே போனது..?  தன் வாழ்க்கை எப்படிப்பட்ட நிலையில் அமைய வே ண்டும் என்பதை படித்த அந்த பெண் தான் முடிவு  செய்யவேண்டும் .  மற்ற வர்களின் ஆலோசனையை கேட்டா லும் தனக்குள் அதை பொருத்தி ‘சரி யாக இருக்குமா?’  என்று சீர்தூக்கி பார்க்கும் மனபக்குவம் இல்லாமை தான் கணவன் மனைவி உறவுகெட காரணமாகிவிடுகிறது.  இதுதான் இன்று பலரின் அனுபவம். 

–  கௌசல்யாராஜ்

One Comment

  • Kumaran

    All are GOLDEN LINES in this article.

    If every women thinks like this, then there will be no divorce in our country.

    Even Men should understand women’s feelings and try to avoid fights between them.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: