Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டீசல் எஞ்சின் பராமரிப்பு செலவு ஏன் அதிகம் ?

பெரும்பாலும் கனரக வாகனங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப் படுகிறது. டீசல் எஞ்சின் முதலில் காற்றைமட்டும் சிலிண்டருக்குள் இழுத்து பிஸ்டனால் காற்று அழுத் தப்பட்டு, அதிக வெப்பமும் அடை யச் செய்கிறது. அவ்வாறு அழுத்த மும் வெப்பமும் அடைந்த காற்றி ன் ஊடே எரிபொருள் தெளிக்கப்ப டுவதால் காற்றும் எரி பொருளும் கலந்த கலவை மேலும் வெப்பமும் அழுத்தமும் அடைந்து வெப்ப சக்தியை இயந்திர சக்தி யாக மாற்றுகிறது.

டீசல் எஞ்சின் கார்களின் பராமரிப்பு செலவு அதிகமாக காரணம் என்ன? மற்றும் டீசல் எஞ்சின் ஆயுட்காலம் பெட்ரோல் எஞ்சினை விட ஏன் குறைவாக உள்ளது அறிந்து கொள்ளலாம் வாருங்க ள். 

டீசல் எஞ்சின் கார்கள் விலையும் கூடுதல் பராமரிப்பு செலவும் கூடுதல் ஆனால் டீசல் விலை குறைவு..  டீசல் விலை குறைவு என்பதால் மட்டும் டீசல் காரை நீங்கள் தேர்ந்தேடுத்தால் அது சரி யான தேர்வு ஆகிவிடாது என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.
 
டீசல் ஆனது பெட்ரோலைவிட மிக குறைவான நேரத்திலே குரூட் ஆயில் சுத்திகரிப்பில் பெறப்படுகி ன்றது. ஆனால் பெட்ரோல் மிக நுன்னிய முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுவதால் தேவையற்ற கசடுகள் இருக்கவே இருக்காது. அதனால் எஞ்சின் பாதிப்புகள் குறைவு.
 
டீசல் எஞ்சின் மிக அதிகப்படியான அழுத்தத்தை தாங்கி கொண்டு  டீசல் எஞ்சின் பாகங்கள் வேலை செய்யும். அதனால் மிக வலுகூட்டப்பட்ட பாகங்கள் பயன்படுத்தப் படுகின்றன ஆனாலும் பெட் ரோல் எஞ்சின் பாகங்களை விட அதிகமாக பாதிக்கப்படும் .
 
டீசல் எஞ்சின் பராமரிப்பு பெட் ரோலைவிட இருமடங்கு அதி கமாக இருக்கும். காரணம் அதிகப்படியான ஆயில் மாற்ற ம் தொடர்ந்து எஞ்சின் பரா மரிப்பு என செலவுகள் சற்று கூடுதலாக இருக் கும்.
 
சரியான தொடர் பராமரிப்பு டீசல் வாகனங்களில் செய்ய தவறி னால் செலவுக்கு பஞ்சம் இருக்கா து. 
 
அதுபோல டீசல் எஞ்சின்களின் உதிரி பாகங்களின் விலை பெட்ரோ ல் வாகனங்களின் பாகத்தைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும்.
 
உங்கள் டீசல் வாகனம் 4 இலட்ச கீலோ மீட்டரை கடக்கின்று என்றால் உங்கள் எஞ்சினை முழு மையாக ஓவர்ஹாலிங் செய்வது நல்லது.இதன் மூலம் உங்கள் வாகனத்தின் ஆயுள் அதிகரிக்கு ம்.
 
முறையான பராமரிப்பு செய்தா ல் பெட்ரோல் எஞ்சினைவிட மிக சிறப்பான ஆயுள் மற்றும் செயல்திறனை எதிர்பார்க்கலா ம்.
 
டீசல் எஞ்சின் ஆயுட்காலம் குறைய காரணம் முறையான பரா மரிப்பு இல்லாததே ஆகும்.

எமது கருத்துரை அமைப்பு disqus முறைக்கு மாற்றப்பட்டுள்ள தால் மிக எளிமையாக கருத்துரையில பல வசதிகளை பெறலாம் மற்று ம் சமூகதள கணக்கில் இருந்தும் கருத்துகளை பதியலாம்.
thanks to automobiletamilian

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: