Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்தம் எப்போ எப்படி வந்தது?

முத்தம் என்ற வார்த்தையே சிலருக்கு மூர்ச்சையை ஏற்படுத்தும். அன்பு, பாசம், காதல், நேசம் இப்படி எத்தனையோ வார்த்தைகளில் சொல்வதை முத்தம் என்ற ஒரு செயலி ன் மூலம் நிரப்பிவிடலாம். முத்தம் பற்றி பல சுவாரஸ்யமான விசயங்கள் உள்ள ன. முத்தம்கொடுப்பவருக்கும் சரி, அதை பெற்றுக்கொள்பவருக்கும் சரி ஒரே மாதிரியான மகிழ்ச்சியை ஏற்படு த்தும். அந்த முத்தம் பற்றி கிஸ்டரி என்ற புத்த மே எழுதியுள்ளார் ஒருவர் அதைப் பற்றி நீங்களும் தெரிஞ்சுக்க வேணாமா? படி ங்களேன்.
முத்தம் (kiss) என்ற வார்த்தை
ஜெர்மனியில் உள்ள kussjan என்ற வார்த்தையின் ஒலியில் இருந்து தான் வந்துள்ளது என்கிறார் அந்த எழுத்தாளர். முத்தம் தோன்றியது பற்றி தெளிவான வரலாறு இல் லை என்றாலும், கி.மு. 1500வது ஆண் டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்திய ர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 30, அதேசமயம், ரோமானியர் கள் கண்டு பிடித்ததோ 3 வகை முத்த த்தை மட்டுமே.
ப்ரெஞ்ச் கிஸ்

உதட்டுடன் உதடு பொறுத்தி கொடுக்கப் படும் ப்ரெஞ்ச் கிஸ் இந்தியாவில் இங்கிலீஸ் கிஸ் என்று கூறப்படுகிறது. 1990ல் நடைபெற்ற திருவிழா ஒன்றில் 8 மணிநேரத்தில் 8001 ஜோடிகள் முத்தம் கொடுத்தனராம். சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 16 பேர் முத்தம் கொ டுத்துள்ளனர்.

பல ஊர்களில் பல முத்தம்
நேபாள நாட்டில் 1562ஆம் ஆண்டில் பொது இடங்களில் முத்தம் கொடுத்தால் மரண தண்டனையாம். காதலர்களை உடனடியாக கொலை செய்திரு க்கின்றனர் பாவிகள். ரோமானி யர்களைப் பொறு த்தவரை, ஒருவருக்கு ஜலதோஷம் பிடித் திருந்தால் அவரது மூக்கில் கழுதையை முத்தமிட வைப்பார் களாம். அப்படி செய்தால், ஜல தோஷம் போய் விடும் என்பது அவர்களது நம்பிக்கை.
பனிப்பிரதேச ஜில் முத்தம்
எஸ்கிமோ முத்தம் மிகவும் பிரபலமானது. பனிப் பிரதேசங்களில் வசிக்கும் இனுயுட் இன மக்கள் ஒருவர் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த மூக்கோடு மூக்கு உரச நெற்றி அல் லது கன்னத்தில் அழுத்தமாக முத்தமி டுவது வழக்கம். இதை அவர்கள் கலா ச்சார மாகவே பின்பற்றி வருகின்றனர்.
கடிதங்களில் முத்தம்
அதேபோல வெளிநாடுகளில் கடிதம் எழுதுவோர் கடிதத்தின் முடி வில் எக்ஸ் (X) குறியிடுவது வழக்கம். அதாவது முத்தத்தைப் பரி மாறிக் கொள்வதன் அடையாளமாக அதை வைத்துள்ளனர்.

காலியாகும் கலோரி
முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உட லில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமி டத்திற்கு 22 கலோரி வரை குறையு மாம். அதே சமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறைகிறது என்று மற்றொரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முத்தக் காட்சி ரெக்கார்டுகள்
உலகிலேயே முதல் முறையாக முத்தக் காட்சிஇடம்பெற்ற படம் ஹாலிவுட் படம்தான். 1896ம் ஆண்டு முதல் முத்தக் காட்சி ஹாலிவுட் படம் ஒன்றில் இடம் பெற்றது. அதேபோல முதல் முறையாக பிரெஞ்சு முத்தம் இடம் பெற்ற ஆண்டு 1961ம் ஆண்டா கும். அதே போல 1926ம்ஆண்டு ஜான் பாரிமோர் என்ற ஹாலிவுட் கலைஞர் நடித்த படத்தில் கிட்டத்தட்ட 127 முத்தக் காட்சிகள் இடம் பெற்றிரு ந்ததாம். இன்று வரை இதுதான் முத்த ரெக்கார்டாக உள்ளது
உயிரிழப்பு அபாயம்
சீனாவில் ஒரு பெண் மிகவும் ஆழமான முத்தத்தை வாங்கியபோது அவளது காது செவிடாகி விட்டதாம். ஜப்பானில் ஒரு பெண் ஆழமான முத்தம் வாங்கி உயிரை இழுந்துவிட்டாள். உறவின் உச்ச க்கட்ட நிலையில் ஆண் கொடுத்த முத்தம் அவளின் உயிரை காவு வாங்கி விட்டது. வாயோடு வாய் பொருத்தி, உதடுளை இறுக்கமாக கவ்வியபடி ஆழமாக முத்தம் கொடுக்கும் போது வாய்க்குள் காற்று புக முடியாத நிலை ஏற்படுகிறது. இது பிரச் சினையைத் தரும் என்பது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பரிமாறப்படும் பாக்டீரியாக்கள்
ரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் சராசரியாக 336 மணிநேரம் முத்தமிடு வாக தெரிவிக்கிறார் அந்த எழுத்தா ளர். முத்தம் கொடுப்பதன் மூலம் 278 வகை பாக்டீரியாக்கள் இடம் மாறு கின்றன. இது நோய் பாதிப்பை ஏற்ப டுத்தும். அதேபோல் முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன என்பது இன்னொரு எச்சரிக்கைச் செய்தி. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே முத்தம் கொடுப்பவரோ பெறுபவ ரோ வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
 
முத்தக் காட்சி ரெக்கார்டுகள்
உலகிலேயே முதல் முறையாக முத்தக் காட்சி இடம்பெற்ற படம் ஹாலி வுட் படம்தான். 1896ம் ஆண்டு முதல் முத்தக்காட்சி ஹாலிவுட் படம் ஒன்றில் இடம் பெற்றது. அதேபோல முதல் முறையாக பிரெஞ்சு முத்தம் இடம் பெற்ற ஆண்டு 1961ம் ஆண்டாகும். அதே போல 1926ம்ஆண்டு ஜான் பாரி மோர் என்ற ஹாலிவுட் கலைஞர் நடி த்த படத்தில் கிட்டத்தட்ட 127 முத்தக் காட்சிகள் இடம் பெற்றிருந் ததாம். இன்று வரை இதுதான் முத்த ரெக்கார்டாக உள்ளது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: