Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்றாலே, அது வக்கீல் மூலமாக அனுப்பப்படும் நோட்டீஸ் என்றே நாம் நினைக்கிறோம். அது தவறு. அதாவது எதிர் தரப்பினர் மீது, அவரது செயலுக்கு எதிப்பு தெரிவித்து எடுக்கப்படக்கூடிய சட்ட நடவ டிக்கை பற்றிய அறிவிப்பு கடிதம் தான் அது. அதை நாமே அனுப்பலாம். நமக்கு அது பற்றிய விபரம் தெரியாத பட்சத்தில், வழக்கறிஞர் மூலமாக அனு ப்பவேண்டும்.

நமது நாட்டு சட்டப்படி, வழக்கு தொடுப் பவர் ( Petitioner / Complainant) மற்றும் எதிர் தரப்பினர் (Opposite Party)-தான் வழக்கு நடவடி க்கையில் நேரடியாக பங்கேற்க வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. இதில் வழக்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பி னருக்கோ போதுமான சட்ட அறிவு இல் லாத நிலையில் வழ்க்கறிஞர் மூலமாக செய்ய வேண் டும்.

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்பது நாம் அனுப்பும் நோட்டீஸ் மற் றும் வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ், இவை இரண் டையுமே குறிப்பிடும் சொல்லாகும். வழக்கறிஞர்மூலம் அனுப்பப் படும் நோட்டீஸ் அட்வகேட் நோட்டீஸ் ஆகும்.

லீகல் நோட்டீஸ் தயாரிப்பது எப்படி?

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியிருக்கிறீர் கள் என வைத்துக்கொள்வோம். அத்ற்கு ஒரு வருட உத்திரவாதம் உற்பத்தியாளரால் வழ்ங்கப் பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். வாங்கிய ஒரு சில நாட்களி லேயே அது பழுதடைந்து விடு கிறது. நீங்கள் எந்த கடைக்காரரிடம் வாங்கினீர் களோ, அவரிடம் புகார் செய்கிறீர்கள். அவர் அங்கீ காரம் பெற்ற சர்வீஸ் டீலராக இருந்தால் அவரே பழுது பார்த்து கொடுப்பார். அப்படி இல்லை என் றால் கம்பெனியின் சர்வீஸ் செண்டர் முகவரியை தருவார். அங்கு புகார்செய்கிறீர்கள். அவர்கள் பழு து பார்த்து த்ருகிறார்கள். மறுபடியும் குறுகிய கால த்தில் பழுது ஏற்படுகிறது. மீண்டும் பழுது பார்க்கப் படுகிறது. பழுதடைவது தொடர்கிறது. இதனால், உங்களால் தொடர் ச்சியாக மிஷினை பயன்படுத்தாத நிலை. இந்நிலையில், உங்களு க்கு விற்ப னை செய்யப்பட்ட பொருள் தரம் குறைந்தது அல்லது உற்பத்தியில் குறைபாடுள்ள பொருள் (Manufacturing Defect) என கருதுகிறீர்கள். அதனால் அந்த மிஷினுக் கு பதில் வேறு மிஷின் தருமாறு கேட் கிறீகள். கம்பெனிக்கரர்கள் அவ்விதம் செய்ய மறுக்கி றார்கள். அதனால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர போகிறீ ர்கள். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்களுக் கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

இந்த விஷயத்தில், விற்பனையாளரை பொறுத்த வரையில் அவர் மீது எவ்வித தவறும் கிடையாது. எனவே வழக்கில் அவரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சேர்த்தாலும் தவறு கிடையாது.

***********

லீகல் நோட்டீஸ் —————————————————————————————————BY REGISTER POST WITH A/D, OR BY FAX OR E-MAIL

அனுப்புநர்: ( இது உங்கள் முகவரி)
எ.  மணியன்,
14, 18 வது மெயின் ரோடு,
அண்ணா நகர்
சென்னை -600 040.

பெறுநர்:
xxxxxxx Electronics Pvt Ltd,
Chennai – 600 004

சட்ட பூர்வ அறிவிப்பு

தங்கள் நிறுவன தயாரிப்பாகிய XXXYY-0087 மாடல் வாஷிங் மெ ஷின் ஒன்றை M/s.xxxxxxxx , xxxxxxxxxxxx, xxxxxxxxxxx, zzz zzzzzzzzzzz, Chennai என்ற டீலரிடம் 15-11-2012ல் வாங்கியுள்ளேன். பில் நம்ம்பர். 5678/15-11-2012. மேற்படி மிஷின் இரண்டு மாத காலத் தில் மூன்று முறை பழுது ஏற்பட்டு, தங்கள் சர்வீஸ் செண்டரால் சரிசெய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. 25-11-2012 – சர்வீஸ் கால் நம்பர்: CHN 56600
2. 15 -01-2013 – சர்வீஸ் கால் நம்பர்: CHN 90780
3. 10-02-2013 – சர்வீஸ் கால் நம்பர்: CHN 102330

இதனால் என்னால் தொடர்ந்து உபயோகிக்க இயலவில்லை. இவ் விதம் அடிக்கடி பழுது ஏற்பட காரணம், எனக்கு விற்பனை செய்யப் பட்ட மெஷின் உற்பத்தி குறை பாடான ஒன்றாகும். எனவே உடனடி யாக மேற்படி மெஷினுக்கு பதில், வேறு ஒரு மெஷின் மாற்றித்தரு ம்படி தங்களிடம் கூறியதற்கு மறுத்து விட்டீர்கள்.

எனவே, மேற்படி மெஷினை மாற்றி தர வேண்டும் என,தங்கள் நிறு வன்த்தின் மீது மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இரு க்குமானால் , இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும். அவ்விதம் தெரியப் படுத்தாத பட்சத்தில், மேற்படி குற்றசாட்டை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் பிரசணை யை சுமுகமாக தீர்க்க விரும்ப வில்லை எனவும் முடிவு செய்து, முறைப்படி வழக்குதாக்கல் செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

இப்படிக்கு
( கையொப்பம்)
(எ. மணியன்.)

நாள்: 03-03-2013

சட்ட‍ம் நமக்காக‌

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: