Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (10/03/13): “என் கழுத்தில் தாலி ஏறும்வரைதான் அவளுக்கு தடுக்க உரிமை உண்டு.

அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு —

முகம் பார்த்திடாத மகளின் பிரச்னைக்கு தீர்வு அளிப்பீரா? நான் ஒரு ஆசிரியை. என் கணவரும் ஆசிரியர் தான். எனக்கு ஒரு ஆண் குழந் தை இரண்டரை வயதில் உள்ளது. மணமாகி மூன்றரை ஆண்டுகள் கூட ஆகவில்லை. இருவருக்கும் சமமான படிப்பு, பதவி இருந்தும், ஒரு பாவையின் சூதினால் நான் பாதி வழியில் பரிதவித்து நிற்கி றேன். அந்தப் பாவையும் ஒரு ஆசிரியை தான்.

என் கணவரும், அவரது குடும்பத்தின ரும் என்னை பெண் பார்த்து, “பூ’ வைத்த பின், ஆறு மாதங்களுக்கு பிறகு தான் என் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன், என் பணி மாறுதலு க்காக அவர் அதிக முயற்சி செய்தார். அதன் பலனாக, திருமணத்துக் கு ஒரு மாதம் இருக்கையில், அவர் பணிபுரியும் இடத்திற்கு அருகி லேயே எனக்கு பணி மாறுதல் கிடைத்தது.

“பூ’ வைத்த பின், அவர் எனக்கு கடிதம் எழுதினார். வீட்டிற்கும் வரு வார். கடிதத்திலும் நேரில் பேசும் பொழுதும் மாறுதல் சம்பந்தமாகத் தான் விஷயம் இருக்கும். எல்லை மீறி ஒரு தவறான வார்த்தை கூட பேசியதில்லை.

இந்நிலையில் என் திருமணம் நடந்தது. முறைப்படி மாமியார் வீடு வந்தடைந்தேன். திருமணமான மூன்றாவது நாள், ஒரு பெண் தனி யாக எங்கள் வீட்டிற்கு வந்தாள். அவளை அறிமுகப்படுத்துகையில், “இந்தப் பெண் என்னுடன் பணிபுரிந்தவர்’ என அவர் கூறினார். காபி கொடுத்தேன். சிறிதுநேரம் அவருடன் பேசிவிட்டு சென்று விட்டாள். அப்போது அவள் கழுத்தில் தாலி இல்லை.

என் மணவாழ்க்கை மகிழ்வாய் தொடர்ந்தது. ஒரே ஊரிலேயே நாங் கள் தனிக்குடித்தனம் உள்ளோம். என் மாமனார் சமீபத்தில் இறந்தார். அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் முடிந்த பின், மாமியார் வீட்டிலிருந்து என் வீட்டிற்கு வந்து விட்டேன்.

அதற்கு அடுத்த நாள் என் கையில் காபி வாங்கி குடித்த அந்தப் பெண், ஒரு பெண் குழந்தையோடு வந்திருந்தாள் என்றும், அவளை என் கணவர்தான் மணமுடித்து (என் திருமணத்திற்கு பிறகு) உள்ளார் என்றும் அறிந்தேன்.

என் கணவரிடம் கேட்டதற்கு ஒத்துக் கொண்டார். நான் அழுதேன். அரசாங்க வேலை கிடைப்பதற்குமுன் என் கணவரும், அவளும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகையில் காதல் ஏற்பட்ட தாம்.

ஒரே நேரத்தில் இருவருக்கும் அரசாங்க வேலை கிடைத்த உடன், இருவரும் வெவ்வேறு திசையில் பிரிந்தாலும், காதல் மட்டும் தொட ர்ந்துள்ளது.

எனக்கு, “பூ’ வைத்த அன்றே அந்த பெண்ணுக்கு விஷயம் தெரியு மாம். அதன் பின்பும் இவருடன் அவள் உறவு வைத்தது ஏன் என்று தெரியவில்லை? அவள் வேறு இனத்தைச் சேர்ந்தவள்.

காதலிக்கும் போது தடையாக இல்லாத ஜாதி, கல்யாணம் என்ற போது தடையாக உள்ளது என இவர் கூறியிருந்தால் கூட, அவள் ஏன் அன்றே போலீஸ்வரை செல்லவில்லை? ஒரு ஆடவனுடன் காதல் என்ற பெயரில் சுற்றியவள், கரம் பிடிக்க போலீஸ் வரை செல் லாதது ஏன்?

என் கழுத்தில் தாலி ஏறும் முன், அவள் வந்து தடுத்திருந்தால், இன்று என் வாழ்வு சந்தோஷமாகியிருக்கும். அந்தப் பெண் நான் வேலை பார்த்த பள்ளிக்கு அருகில் தான் வேலை பார்த்துள்ளாள்.

எனக்கு மணமான பின், என் வாழ்வில் குறுக் கிடாமல் சென்றிருக்க லாம்.

என் கழுத்தில் தாலி ஏறும் வரை தான் அவளுக்கு தடுக்க உரிமை உண்டு. அதன்பின் குறுக்கிட உரிமை இல்லை. திருமணத்திற்கு முன் பே படுக்கையை பகிர்ந்திருந்தால் கூட அவளுக்கு என் வாழ்வில் நுழைய இடம் இல்லை. என் கணவர் அவளையே திருமணம் செய் திருக்க வேண்டும்; இல்லையெனில் திருமணத்திற்கு பின் அவளுட னான தொடர்பை விட்டிருக்க வேண்டும்.

அவருடன் மேற்படி விஷயத்தைக் கூறி சண்டையிட்டதில், “நீ வளை காப்புக்கு சென்றிருந்த போது அவளுடைய சகோதரர்கள் என்னை அடித்து அந்த கல்யாணத்தை யாருக்கும் தெரியாமல் செய்து வைத் து விட்டனர். உன்னிடம் இதைச் சொன்னால் ஏற்க மாட்டாய் என்று எண்ணி, உன்னிடம் மூன்று ஆண்டுகளாக மறைத்தேன்…’ என்றார்.

அவர் கூறும் சமாதானத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந் நிலையில் விஷயம் தெரிந்து நான் அழுகையில், அவரும் என்னுடன் அழுதார். நான் அவரோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், என் பெற்றோரிடம் கூட விஷயத்தைச் சொல்லவில்லை…

என் கணவரும், “இவ்விஷயத்தை உன் வீட்டில் சொல்ல வேண்டாம்’ என்றார். 20 நாட்கள்தான் என்னால் மறைக்க முடிந்தது.

என் அழுகையைக் கண்டு என் பெற்றோர் விஷயத்தைக் கறந்து விட்டனர்.

என் வாழ்வுக்காக, அவர்கள் இவருடன் பேசியதில் ஒரு மாதம் தவ ணை கொடுத்தனர். அந்த ஒரு மாதத்தில் வழக்கறிஞரை அவர் சந்தித்து பேசி, நிமிர்ந்து கொண்டார்.

நாங்கள் கேஸ் போட்டால், அவள் இவரைப் பார்த்து, “இவர் யாரென் று எனக்குத் தெரியாது’ என்று கூறிவிடுவாளாம். அவரும் (என்னைக் காட்டி) “இவள் தான் என் மனைவி, அவள் யாரென்று எனக்கு தெரியாது…’ என்று கூறிவிடுவாராம்.

எங்களிடம் வேறு ஆதாரங்கள் இல்லை. இப்பொழுது ஆறு மாதமாக நான், என் பையனுடன் தனியாக வாழ்கிறேன். அவர், அவளோடு வாழ்கிறார்.

என் வாழ்வை இழந்து, நான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழ ந்து பரிதவிக்கிறேன். விதியை எண்ணி கண்ணீரின் துணையோடு ஒரு மழலையோடு மயங்குகிறேன். இதற்கு மேல் நான் எடுக்க வே ண்டிய முடிவுகளை தயை கூர்ந்து தங்கள் பதிலில் எதிர்பார்க்கிறே ன். இந்த மகளுக்கு உங்களுடைய ஆலோசனை கட்டாயம் தேவை.

இப்படிக்கு உங்கள் மகள்.

அன்புள்ள மகளுக்கு —

உன் கடிதம் கண்டேன். வரப்போகும் மருமகனைப் பற்றி உன் பெற் றோர் தீர விசாரிக்காமல், உன்னை மணம்செய்து கொடுத்தது பெரிய தவறு.

நிறைய பெற்றோர் அரசு உத்யோகத்துடன் கூடிய மாப்பிள்ளை என்றால், எப்படியாவது தம் பெண்ணை கட்டிக் கொடுத்து அனுப்பி விட வேண்டும் என்றுதான் நினைக்கின்றனரே தவிர, மாப்பிள்ளை யின் பின்னணி பற்றி யோசிப்பதே இல்லை.

நீயே, உன் கடிதத்தில் மிகத் துணிச்சலாக ஒரு வார்த்தை எழுதி யிருக்கிறாய்…

“என் கழுத்தில் தாலி ஏறும்வரைதான் அவளுக்கு தடுக்க உரிமை உண்டு. அதன்பின் குறுக்கிட உரிமை இல்லை. திருமணத்திற்கு முன் பே படுக்கையை பகிர்ந்திருந்தால் கூட அவளுக்கு என் வாழ்வில் நுழைய இடம் இல்லை. என் கணவர் அவளையே திருமணம் செய் திருக்க வேண்டும். இல்லையெனில் திருமணத்திற்குப்பின் — அவளு டனான தொடர்பை விட்டிருக்க வேண்டும்…’

— இவ்வளவு தீர்மானமாக பேசும் நீ, அவருடன் சண்டையும் போட்ட — எதற்காக உன் கணவரை அவள் வீட்டுக்கே அனுப்பி வைத்தாய்? உனக்கு உரிமையான பொருளை அழுது ஆர்ப்பாட்டம் செய்தாவது, உன் வசம் வைத்திருக்க வேண்டாமோ?

உன்னுடைய திருமணம் சட்டப்படி பத்திரிகை அடித்து, உறவினர் முன்னிலையில் நடந்திருந்தால், இரண்டாமவள் உன் கணவரின் முதல் காதலியாக இருந்தாலும் கூட செல்லாது.

அவருடைய அண்ணன்கள், என்னதான் மிரட்டி அடித்து உதைத்து தாலிகட்ட வைத்திருந்தாலும், அவள் உன் கணவரை பொறுத்தவரை சின்னவீடுதான். எப்போது அவர், தன் தவறை உணர்ந்து அழுதாரோ, அப்போது நீ சொல்ல வேண்டியதை இதமாய், பதமாய் சொல்லி, இவ ருடைய காற்றுகூட அந்த பக்கம் போகாதவாறு தடுத்திருக்க வேண்டும்.

ஆனால், இப்படியெல்லாம் சொல்கிறேனே தவிர, விருப்பம் இல்லாத கணவனை, முரட்டுக் காளையை கொட்டிலில் கட்டிப் போடுவதைப் போல உன் பக்கம் நிறுத்தி வைத்து தான் என்ன பிரயோஜனம்?

அவர் சொல்வதுபோல, போலீஸ், விசாரணை என்று வந்தால், “எனக்கும், இவளுக்கும் எந்த ஒரு உறவும் இல்லை… இவளை எனக்குத் தெரியவே தெரியாது’ என்று அவர் கூறினால், அது அந்தப் பெண்ணுக்குத் தானே அவமானம்.

யோசித்துப் பார்… நாளைக்கு நகைப்புக்கு இடமாகப் போவது அவர் கள் இருவருடைய வாழ்க்கையும் தானே அல்லாது உன்னுடைய தல்ல! எந்த ஒரு புருஷனையும் அல்லது மனைவியையும், நாம் இருவரும் கணவன்-மனைவியாகி விட்டோம். ஆதலால், நீ என் னைத் தான் விரும்ப வேண்டும் என்று கட்டளை இட்டு, பிரியத்தை வரவழைக்க முடியாது.

அதை விடவும் மிகச்சிறந்த வழி, போனதெல்லாம் போகட்டும் என்று உன் குழந்தையுடன், உன் உத்தியோகத்துடன் நீ தனித்து வாழ முயற் சிப்பது தான்.

ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொள். எந்தக் காரணத்தைக் கொண்டும், விவாகரத்து பத்திரத்தில் கையெ ழுத்துப் போட்டுத் தராதே.

அப்படி உன் கணவர் நிர்ப்பந்தித்தால், இப்படிசொல்…

“நான் ஒன்றும் நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு வரவில் லை. என் வரையில் நான் அப்பழுக்கில்லாதவள் என்பதையும், இந் தப் பிள்ளை உங்களுக்குப் பிறந்தது தான் என்பதையும், ஆதாரத்து டன் எந்த கோர்ட்டில் வேணுமானாலும் ஏறி சொல்ல முடியும்.

“எனக்கு கணவன் என்கிற உறவுதான் இல்லாமல் போய்விட்டது. ஆனால், சட்டப்படியும், தர்மப்படியும் என் மகனுக்கு நீங்கள்தான் அப்பா. ஆதலால், உங்களுடைய வாரிசு ஆன அவனை, நான் நல்ல முறையில் வளர்ப்பேன். அதே சமயத்தில், உங்களுடைய சொத்தோ, ஓய்வு பெறும் போது கிடைக்கும் தொகையோ எதுவானாலும் அவ னுக்குத் தான் வந்து சேர வேண்டும்.

“ஆதலால் நீங்கள் எங்கே வேண்டுமானாலும், எவருடன் வேண்டு மானாலும் இருந்து தொலையுங்கள். நாளைக்கு உங்கள் மகன் பெரியவனாகி, “அப்பா எங்கே?’ என்று கேட்கும் போது, உங்களைக் காட்டி, நீங்கள் எனக்கு செய்த துரோகத்தையும் சொல்வேன்’ என்று சொல்.

அதோடு நிறுத்திக் கொள்ளாதே… இனி எந்தக் காலத்திலும் உன் கணவன் அவளை விட்டு விட்டு உன்னிடம் வந்தாலும், இரக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளாதே. பெண்களின் இந்த இளகிய மனதுதான், ஆண் களை மேலும் மேலும் தவறு செய்ய ஊக்குவிக்கிறது.

“என்ன… கொஞ்ச நாள் அழுவாள், ஆர்ப்பாட்டம் செய்வாள். அப்புறம் தானே சரியாகி விடுவாள்…’ என்கிற நினைப்பை உன் வரையில் பொய்யாக்கு.

சகலத்தையும் இழந்து, திரும்பி வந்தால், பரிவுடன் ஏற்று, மிச்சம் இருக்கிற நகைநட்டுக்களையும் எடுத்துக் கொடுக்க நீ ஒன்றும் கண்ணகி இல்லை; அவன் ஒன்றும் கோவலன் இல்லை.

நமக்குத் தேவை பாரதி கண்ட புதுமைப்பெண்ணே தவிர, சிலப்பதி காரம் இல்லை. வாழ்ந்துகாட்டு.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: