Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் துணையிடமிருந்து விவாரத்து பெற . . .

இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்கு நடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையில்லாதது .
‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்ப ந்தம் மட்டுமே’ என்பதை புரிந்து கொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத் தன்மை யோ, புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண் டால் ‘மணவிலக்கு’ என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது. இரு மனங்கள் இணையும் திரு மணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்தி ற்கு முன்னரே பிரிவது அனைவருக்கு ம் நலம் பயக்கும். ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்தி ற்கு முன் மணம் செய்து கொள்ள விருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. உரிய காரணம் இன்றி பிரியும் துணை யை மீண்டும் அழைக்க ‘மண வாழ்வு ரிமை மீட்பு சட்டம்’ பயன்படுகி றது.
பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவ தைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுப்பவர்களுக்கும் சட்டம் வழி காட்டுகிறது.சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய வர்களுக்கான மணமுறிவு உரிமை களை விளக்குகின்றன.

சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி

1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொ ருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,

2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,

3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்,

4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,

5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்,

6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,

7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy), விலங்குக ளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,

8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்ட னை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை பெறுதல்

ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப் பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.

 இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ / மனைவி யோ இல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக் கார ணமாக கூறி மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், திருமணத் திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்த கணவன்,

1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத் தொழி லை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண் டாலோ,

2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,

3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன் மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),

4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறா ன புணர்வு, விலங்குக ளுடன் புணர்தல்,

5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண் ணை கொடுமை செய்தாலோ,

6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,

7. ஆண்மையற்று இருந்தாலோ

… மனைவி, மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக் கான சட்டமும் மண விலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல்லை அற்றதாக உள்ளது.

மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே “தலாக்” எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவ னாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலா க்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண் களுக்கு இருக்கிறது. இதில் நீதி மன்றம் தலையிடுவதில்லை.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண் களின் உரிமைகளை பாதுகாக்க வேண் டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர் கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் படி

  1. நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய் விட்டால்,
  1. மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இர ண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத் தவறினால்,
  1. கணவனுக்கு ஏழு ஆண் டுகளோ, அதற்கு அதிக மாகவோ சிறைத் தண்ட னை விதிக்கப்பட்டால்,
  1. கணவனுக்கு விதிக்கப்பட்ட திரு மணக் கடமைக ளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழ ந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,
  1. கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்க ப்பட் டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந் தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லா மலிருந்தா ல் …

…பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.

 இத்தகைய வழக்கு விசாரணைகளை பொது வில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்த வும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடா மல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர் கள் உடன்படும் நிலையில் வழக்கு விசார ணை யை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.

இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வரு வாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரரு க்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.

உங்கள் துணையிடம் இருந்து விவாகரத்து கோரும் நீங்கள், உங்களது எதிர்காலம் மற்றும் உங்களது குழந்தைகளின் எதிர்கால த்தை சற்று சிந்தித்து விட்டு முடிவெடுக்க‍ வேண்டுகிறோம்.

பி. சுந்தரராஜன், வழக்க‍றிஞர்

One Comment

  • RAVISANKAR

    ‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே’ என்பதை புரிந்து கொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத் தன்மை யோ, புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண் டால் ‘மணவிலக்கு’ என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது.
    I think that the thinking noted above is totally erroneous. Marriage leads to reproduction and the quality of the children born is a combination(good as well as bad) of the various qualities of the genes carried over in both the families for the past several generations.If there is no “DEIVIGAM” the marriage can not be successful and good progenies with favourable combination of good genes(here the Karma philosophy and God’s blessings to get rid of old karmas is very relevant) will not be born.This DK style thinking with EVR’s immature and anti-god thinking and funny theories have only led to the serious cultural and social degradation being seen in Tamilnadu now.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: