Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – ஆலூ பராட்டா

தேவையானப் பொருட்கள்

    உருளைக்கிழங்கு – 4
    கோதுமை மாவு – 4 கப்
    உப்பு – தேவையான அளவு
    மஞ்சள்தூள் – தேவையான அளவு
    பச்சைமிளகாய் – 1
    சீரகம் – ஒரு தேக்கரண்டி
    மசாலாத்தூள் – ஒரு தேக்கரண்டி
    மிளகாய்த் தூள் – அரைத் தேக்கரண்டி
    சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
    சோம்புத்தூள் – சிறிது
    கொத்தமல்லி தூள் – அரைத் தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் – ஒன்றரை தேக்கரண்டி
    எண்ணெய் – 2 மேசைக்கரண்டி + பரோட்டா சுடுவதற்கு

செய்முறை:

கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும் பிசைந்த மாவின் மேலே ஒரு மூடி அல்லது ப்ளாஸ்டி ரேப்பரை போட்டு மூடி வைத்து ஊறவிடவும்.

தேவையான மசாலாத் தூள்கள் மற்றும் இதர பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். உருளைக் கிழங்கை கழுவி தோ லோடு குக்கரில் போட்டு, சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவை யான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ள வும். கிழங்கு வெந்ததும் தோலை நீக்கி விட்டு நன்கு மசித்துக் கொள் ளவும்

பின்னர் மசித்த உருளைகிழங்கில் அனைத்து தூள்களையும் சேர்த்து, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும், அத்துடன் மசித் து வைத்துள்ள உருளைக் கிழங்கு கலவையை கொட்டி நன்கு கிளறவும். மசாலா வாசனைபோகும் வரை கிளறி , பின்னர் இறக்கி வைத்து ஆற விடவும்.

பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவில் இருந்து ஒரு ஆரஞ்சு அளவு எடுத்து, கோதுமை மாவில் லேசாக தேய்த்து, பின்னர் வட்ட மாக சப்பாத்திப் போல் தேய்க்கவும். அதன் மத்தியில் ஒரு கரண்டி அளவு உருளை மசாலாவை வைக்கவும்.

மசாலா கலவையை வைத்து எல்லா ஓரங்களையும் மையப் பகுதியை நோக்கி மடித்து மசாலா தெரியாதவாறு மூடவும். இத னை வெறும் கோதுமை மாவில் லேசாக தேய்த்துக்கொண்டு, மீண்டும் சப்பாத்திப் போல் தேய் க்கவும். இந்த முறை மிகவும் எச்சரி க்கையாக தேய்க்க வேண் டும். அழுத்தி தேய்த்தால் உள் ளே வைத்துள்ள மசாலா வெளி யில் வந்துவிடும். இதேபோல் அனை த்து மாவையும் ஸ்டப்டு பரோட் டாக்களாக செய்து கொள் ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு தவாவை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, தேய்த்து வைத்துள்ள பரோட்டாக்க ளில் ஒன்றை எடுத்துப் போட்டு, தீயை குறைத்து வைத்து வேக வைக்கவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

முதலில் குறைவான தீயிலும், பின்னர் தீயை கூட்டி வைத்து சுற்றி வர எண்ணெய் ஊற்றி மேலேயும் சிறிது எண்ணெய் ஊற்றி வேகவிடவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுத்து விட வும். இப்படியே அனைத்து பரோட்டாக்களையும் வேகவைத்து எடுக்கவும். சுவையான ஆலு பரோட்டா தயார்!

– தமிழ்தோட்ட‍ம் கதிஜா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: