Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“பாதுகாப்பு என்பது பெண்கள் கையில்தான் உள்ளது!” – நடிகை ஹன்சிகா

தமிழில் நம்பர்-1 நடிகை யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை யும் சொல்லும் ஹன்சிகா என்று. 2013ல் யார் ஹீரோயினாக நடித்த படங்கள் அதிகம் வெளியாகும் என்று கேட்டால் அதற்கு பதிலும் ஹன்சிகா மோத்வானி தான். ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை யார் என்று கேட்டால் அதற்கு பதிலும் ஹன்சிகாதான். 21 குழந்தைகளின் தாய் எந்த நடிகை என்று கேட்டால் அதுவும் ஹன்சிகாதான். இப்படி எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதிலாக வந்து நிற்கிறார் ஹன்சிகா. சேட்டை, வாலு, வேட்டை மன்னன், சிங்கம்-2, பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, வாலிபன் என மொத்தம் 7 படங்களில் நடித்து வருகிறார். இவை வரிசைகட்டி ரிலீசாகப் போகிறது. எனவே இந்த ஆண்டு ஹன்சிகா ஆண்டாக இருக்கப்போகிறது. அவரது சிறப்பு பேட்டி இதோ…

* சின்ன குஷ்புவாக இருந்த நீங்க இப்போது இலியானா மாதிரி ஒல்லி ஆகிட்டீங்களே எப்படி?

ஒரு நாள் அம்மா “உடம்பை குறைச்சுக்க, இதுக்குமேல ஒரு இன்ஞ் குண்டானகூட பப்ளி மாஸ் மாதிரி ஆயிடுவ”ன்னு சொன்னாங் க. கண்ணாடி முன்னால நின்னு பார்த்தேன். அவுங்க சொல்றது சரிதான்னு தோணிச்சு. டயட் கன்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சேன். சாப்பாட்டை குறைச்சு வேலைய அதிகமாக்கினேன். கொஞ்சம் கேப் கிடைச்சாலும் ஜிம்முக்கு ஓடிடு வேன். அதனால உடம்புல உள்ள கொழுப்பெல்லாம் குறைஞ் சிடுச்சி அவ்ளோதான்.

* தமிழில் இப்போ நீங்கதான் நம்பர்-1 தெரியுமா?

இந்த நம்பர் விளையாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதைப் பற்றி நான் சிந்திப்பதும் இல்லை. சின்ன குழந்தையாக இருந்தபோதே நடிக்க ஆரம்பிச்சிட்டேன். இந்தி, தெலுங்கு, கன்னடம்னு சுற்றி, இப்போ தமிழ் நாட்டு மக்களுக்கு என்னை ரொம்ப பிடிச்சி போயிட்டதால இங்கேயே தங்கிட்டேன். நான் இங்க நடிக்கத்தான் வந்திருக் கேன். நான்தான் நம்பர்-1 என்று பெருமை பேசிக்கொள்ள அல்ல. சிறந்த நடிகை, பண்பான நடிகை, என்ற பெயரே நிரந்தரமானது. அதை காப்பாற்றிக் கொண்டாலே போதும்.

* அப்படின்னா புகழ் உங்களுக்கு பிடிக்காதா?

புகழ் என்பது மாயை, இன்று நம்முடையது, நாளை யாருடைய தோ யார் அறிவர். புகழின் உச்சியிலும் பணிவுதான் நம்மை நிலைத்து நிற்க வைக்கும். புகழ் மயக்கம் என்பது ஒரு வித போதை. அதுவே அதிகமானால் விஷமாகி  விடும்.

* ஹாலிவுட் நடிகைகள் 60 வயதை தாண்டியும் நடிக்கிறார்கள். இந்திய நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலே சினிமாவை விட்டு விலகி விடுகிறார்களே?

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ரேவதி, குஷ்பு, ஸ்ரீதேவி என திருமணத்துக்கு பிறகும் இங்கு சாதித்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். இங்கிலீஷ் விங்கிலீஷ், கஹானி பாருங்க எங்க சீனியர் எப்படி கலக்கி இருக்காங் கன்னு தெரியும்.

* உங்கள் அழகின் ரகசியம் என்ன?

எல்லா பேட்டியிலும் தவறால் இடம்பெறும் கேள்வி இது. இதுல பெரிய ரகசியமெல்லாம் எதுவும் இல்லீங்க. அழகுங்குறது பார்க்குறவங்க பார்வையை பொறுத்தது. நிறைய பேர் பார்வையில நான் அழகாத் தெரியுறேன் அவ்ளோதான். என் அழகை பற்றி பேசி பெருமைப் பட்டுக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. எனக்கும் பொருந்தும் ஆடைகளை தேர்வு செய்து அணிவது என் உடலை அழகாக காட்டுவதாக நினைக்கிறேன். மனசு சந்தோஷமா இருந்தா முகம் அழகா இருக்கும். முகம் அழகா இருந்தா எல்லாமே அழகாத் தெரியும்.

* தமிழ், தெலுங்கில் பிசியாக இருக்கீங்க, இந்தி, கன்னடத்தில் ஒரு படத்தோடு விலகிட்டீங்களே?

நான் விலகவே இல்லை. இங்கேயே அதிக படங்கள் நடிப்பதால் அங்கு நடிக்க இயல வில்லை. நல்ல வாய்ப்புகள் அமையும்போது எந்த மொழியிலும் நடிப்பேன்.

* தெலுங்கு சினிமா, தமிழ் சினிமா என்ன வித்தியாசம்?

மொழியைத் தவிர எந்த வித்தியாசமும் எனக்கு த் தெரிவில்லை. இரண்டு மொழி டெக்னீஷ யன்களும், ரசிகர்களும் ரொம்ப அன்பானவங்க.

* இவ்வளவு பிசியாக இருந்தும் 21 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறீங்களே?

அதற்கு காரணம் என் அம்மா. அவு ங்க சமூக சேவைகளில் அக்கறை உள்ளவங்க. வெளியில தெரியாம நிறைய விஷயங்கள் செய்து கிட்டிரு க்காங்க. சும்மா பணம் சம்பாதிச்சா போதாது மனசுக்கு நிறைவா எதாவது செய்யணும்னு சொன்னா ங்க. அதனால்தான் இது. கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் குழந் தைங்கள பார்க்க போயிடுவேன். என்னை விட அம்மா அதிகமா செய்றாங்க. நான் நடிகைங்கறதால வெளியில தெரியுது.

* இன்றைய சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

பாதுகாப்பு என்பது பெண்கள் கையில் தான் உள்ளது. எந்த சூழ்நிலையையும் துணிச்சலுடனும், புத்திசாலித்தனமாக வும் கையாள வேண்டும். அலுவலக பணிகள் தாமதமாகி விட்டால் அதன் பிறகு அடிக்கடி வீட்டில் உள்ளவர்க ளுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அது உங்களை உங்கள் பெற்றோருடன், இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். எந்த சவாலையும் எதிர் கொள்ளலாம்.

ஆஹா… அடுத்த குஷ்பு ரெடியாகுறாங்களே…!

– dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: