Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ச‌மயம் பார்த்து சந்திரபாபுவை பழி தீர்த்துக் கொண்ட‌ எம்.ஜி.ஆர்.

“செத்துட்டா? மன்னிச்சிரலாமா? அப்போ ஹிட்லரையும் மன்னிச்சிர லாமா?” என விஸ்வரூபம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். இறந்தவர்கள் கடவுள்களாக வணங்கப் படும் நம் சமூக வாழ்க்கையில் அவர்களின் பெரு மை பேசி, புகழ் பரப்ப மட்டுமே செய்கிறோ மேயொழிய அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் செய்துபோன பிழைக ளையும், அப் பிழைகள் நம்மிடையே விட்டு ச்சென்ற நிரந்தர வடுக்களையும் நாம் கவனத்தில் கொள்வதில்லை.

நமக்கு நம் சமகால அரசியல் வாதிகளின் குணங்களைப் பற்றி தெரிகிறது. ஆனால் நம் முந்தைய தலை முறை அரசியல்வாதிகள் மீதான நம்மது எண்ணம் பெரும்பாலும் ‘glorify’ செய்யப் பட்டதாகவே இருக்கிறது. முத்து ராமலிங்கம் (தே வர்), எம்.ஜி.ஆர், ராஜாஜி, பாலகங்காதர் திலகர் என இந்தப் பட்டியலின் நீளம் மிக மிக அதிகம். இந்த தலைவர்களின் ஒருசில முகங்கள் நல்ல வைகளாக இருந்திருக்க லாம். ஆனால் இற ந்துவிட்டா ர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அந்த நல்ல முகங்களை மட்டுமே பிரதானப் படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த க் குறிப்பிட்ட பதிவு எம்.ஜி.ஆரின் ஒரு உண் மை முகத்தைப் பற்றி.

சந்திரபாபு எனக்கு மிகவும் பிடித்த நடிகர், பாடகர், இசையமைப்பாள ர் (அவர் பாடிய நிறைய பாடல் களுக்கு Ghost music directorஆக இருந் திருக்கிறார்), நடனக் கலை ஞர். 46 வயதிலேயே இறந்துவிட்ட அவரைப் பற்றி பேசும்போதெல்லா ம் பெரியவ ர்கள், “பாவம். அவன கொன்னதே எம்.ஜி,ஆர்தான்” எனக் கூறக் கேட்டிருப்போம்.

சந்திரபாபு திரையுலகத்தில் கொடிகட்டிப் பறந்த காலம் அது. மன தில் பட்டதை ஒளிவுமறைவில்லாமல், எந்த மேற்பூச்சும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்லக் கூடிய கர்வ மிகு கலைஞன் சந்திர பாபு. சிலர் அவரது இந்த குணத்தை திமிராகவும், சிலர் பைத்தி யக் காரத்தனமாகவும் கூட வர்ணித்திரு க்கிறார்கள். ஆனால் உண்மை யில் சந்தி ரபாபுவின் இயல்பே அப்படித்தான்! ஒரு வேளை சோற்று க்குக் கூட வழியில்லாத நேரத்தில், சிகரட் வாங்கித்தருகிறேன் என யாரேனும் நண்பர்கள் சொல்லும்போது, “என் ப்ராண்ட் கோல்டு ஃப்ளாக். ஒன்னு பதினைஞ்சு பைசா. முடிஞ்சா அத வாங்கி க்கொடு. இல்லேனா வேணாம்” என்பாராம் ! அதனால் சந்திரபாபுவின் திமிர் இடை யில் வந்ததல்ல என்பதை நாம் தெரிந்து கொள் ளலாம்.

எம்.ஜி.ஆரை சின்னவர், வாத்தியார் என சினிமாத்துறை அழைத்துக் கொண்டிருக்க, ‘மிஸ்டர் எம்.ஜி.ஆர்’ என அழைத்த ஒரே ஆள் சந்திர பாபு. அப்போதைய சினிமா பத்திரிக்கைகளில் தான் அளித்த பேட்டிக ளிலும், கட்டுரைகளிலும் அப்படியே குறிப்பிட்டிருக் கிறார். “எம்.ஜி. ஆர் அனைவரும் தன்னை மட்டுமே புகழ வேண்டும். எல்லாவற்றி லும் தான் மட்டுமே தெரிய வேண்டும் என நினைப்பவர் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் சந்திரபாபு. சிவா ஜி நல்ல நடிகர் ஆனால் அவரைச் சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டத்தை அவர் விளக்க வேண்டும், ஜெமினி கணேசனின் பணம் சம்பாதிக்கும் தந்திர குணம் தனக்கு எப்படி உதவியது என்பது குறித்து கூட வெளிப்படை யாக எழுதி அவர்களின் கோபத்தை சம்பாதித்திருக்கிறார். ஆனால் வெளிப்படையாக கோபத்தை காட்டாத மனிதர் எம்.ஜி.ஆர். சந்திர பாபு மீது தனக்கு உள்ளுக்குள் கணன்று கொண்டிருந்த கோபத்தை, பழியை தீர்த்துக்கொள்ள எம்.ஜி.ஆருக்கு ஒரு அருமை யான சந்தர் ப்பம் ஏற்பட்டது. கர்வம் நிறைந்த வெள்ளந்தியான சந்திரபாபுவே அதற்கும் வழி அமைத்துக் கொடுத்தார்!

விஜி எனப்படும் வி.கோவிந்தராஜூலுவும், தயாரிப்பாளர் சுப்பையாவும் படம் தயாரிப்பதைப் பற்றி சந்திரபாபு விடம் பேசிக்கொண்டிருந்த போது, தன் மனதில் இருந்த மாடிவீட்டு ஏழை கதையைச் சொன்னார் சந்திரபாபு. மிகவும் புரட்சிகரமான கருத்துக்களை நகைச்சுவையாய் சொல்லும் கதையாக இருந்ததால் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்ட து. ஆனால் அப்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த எம். ஜி.ஆர் தான் கதா நாயகனாக நடிக்க வேண் டும் என்று கண்டிஷன் போட, சந்திர பாபுவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து எம்.ஜி,ஆரைச் சந்திக்கப்போனபோது இருவரும் ஏதே தோ பேசிவிட்டு, இறுதியில் விசயத்திற்கு வந்தார்கள். உடனே ஒப்பு க்கொண்ட எம்.ஜி.ஆர் தன் சம்பளமாக ஒரு பெரிய ஆறிலக்கத் தொகையைக் கேட்டார். அதில் பாதியை வெள்ளையா கவும், மீதியை கறுப்பாகவும் கொடுக்க வேண்டும் என்ற கண்டிஷனுடன். ( இதை எல்லாம் பிலிமாலயா பத்திரிக் கையில் தன் ‘மாடி வீட்டு ஏழை ‘ தொ டரில் எழுதியிருக்கிறார் சந்திரபாபு ) கண்டி ஷன்களுக்கு ஒப்புக்கொண்ட சந்திரபாபு பூஜை தேதியை அறிவிக்கும்போது முன் பணம் 25000 ரூபாயைக் கொடுக்கிறேன் என கூறிவிட்டு வந்தார்.

பின் விஜியும், சுப்பையாவும் சந்திரபாபுவையும் ஒரு பங்குதாரராக வற்புறுத்த கதை மேல் கொண்ட நம்பிக்கையில் சம்மதித்து அனைத் து பத்திரங்களிலும் கையெழுத்தும் போட்டார் சந்திரபாபு. தேதி குறிக்கப்பட்டு சந்திரபாபுவின் தோழி சாவித்ரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டார். கண்ணதாசன் இரண்டு பாடல்களை எழுதி 10000 ரூபாய் வாங்கிக் கொண்டார். அடுத்து எம்.ஜி. ஆருக்கு முன் பணம் கொடுக்கவேண்டிய கட்டம்.

இந்த காலகட்டத்தில் சுப்பையாவிடம் நிறைய பண ம் புழங்கியதால் ஒரே நேரத்தில் எட்டு படங்களை அறிவித்து யாருமே எதிர்பாரா வண்ணம் மொத்த மாக திவாலானார் சுப்பையா. வி.ஜியோ தலை மறைவே ஆகிவிட்டார்! அதிர்ச்சியடைந்த சந்திர பாபு சாவித்ரியிடம் 25000 ரூபாய் கடன் வாங்கி அதை எம்.ஜி.ஆரின் தோட்டத்தில் அவ ரைச் சந்தித்துக் கொடுத்தார். இந்த சம்பவத்தை சந்திரபாபு, “25000 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, “பாபு சார். அருமை யாகச் செய்துவிடுவோம். போய் வேலை யைப் பாருங்கள்” எனக்கூறி விட்டு ஒரு மரத்தடிக்குச் சென்று ரூபாய் நோட்டுக் களை இடுப்பில் செருகிக் கொண்டார். அவ்வளவுதான். அவர் வயிற்றில் என் பணம் சங்கமம் ஆகிவிட்டது” என எழுதி யிருப்பதைப் படிக்கும் போது நமக்கே வயிற்றைக் கலக்குகிறது.

பின்தான் எம்.ஜி.ஆரின் பழிவாங்கும் படலம் ஆரம்பித்தது. சந்திர பாபுவோ கடனுக்கு மேல் கடன் வாங்கி படத்தை வளர்க்க, எம்.ஜி. ஆரோ நான்கு நாட்கள் மட்டும் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டு பின் வருவதையே நிறுத்திக்கொண் டார். சந்திரபாபு அலையாய் அலைந்து ஒரு ஸ்டூடியோவின் வாசலில் எம்.ஜி.ஆரைக் கண்டு பிடித்து அவரிடம் பேசப் போயிரு க்கிறார். பாபுவைக் கவனித்துவிட்ட எம்.ஜி. ஆர் அங்கிருந்த அசோக னை அழைத்து அரைமணி நேரம் ஏதேதோ பேசி பாபுவை கவனிக் காதவர் போலவே அரை மணி நேரத்திற்கும் மேலாக கால்கடுக்க நிற்க வைத்திருக்கிறார். பின் ஒரு வழியாக ‘கால்ஷீட்டை எல் லாம் அண்ணன் தான் பார்த்துக்கொள் கிறார். அவரிடம் பேசிக்கொள்ளு ங்கள்” எனக் கூறி சென்று விட் டாராம் புரட்சி த்தலைவர்மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

பாபு தன் சொத்துக்கள் அனைத்தின் மீதும், புதிதாக 19 கிரவுண்டில் தான் கட்டிவந்த வீட்டின் மீதும் கடன் வாங்கி 3000 அடிவரை படத் தை எடுத்தபின் படம் எம்.ஜி.ஆரின் கால்ஷீட்டின்மையால் நின்றிருக் கிறது. ஆசை ஆசையாகக் கட்டிய இந்த வீட்டைப் பற்றி மனோரமா விடம் அடிக்கடி, “மனோரமா.. கீழேயிருந்து கார் நேரா ரெண்டாவது மாடிக்கு போய் நிக்கிற மாதிரி 19 கிரவுண்டுல ஒரு வீடு கட்டிட்டு இருக்கேன். அப்படி ஒரு வீட்டை எங்க யாவது பாத்தா சொல்லு.. குண்டு வச்சிடுவோம்..” என்று வேடிக்கையாகச் சொல்வாராம். “படப்பிடி ப்பு நாள் தள்ளிப்போக தள்ளிப்போக விநியோகஸ் தர்களு ம், கடன் கொடுத்தவர்களும் என் கழுத்தை நெறிப்பார்கள். தயவு செய்து எம்.ஜி.ஆரின் கால் ஷீட் கொடுங்கள்” என சக்கரபாணியைப் பார்த்துக் கெஞ்சிய சந்திரபாபுவிற்கு அவமரியாதையும், கெட்ட வார் த்தைகளில் அர்ச்சனையும் மட்டுமே கிடைத்திருக்கிறது. கோவமடைந்த சந்திரபாபு ஒருகட்டத்தில் பொ றுமையிழந்து அங்கிருந்த ‘சேர்’ஐ எடுத்து சக்கரபாணியை அடிக்கப் பாய்ந்திருக்கிறார். அன் றோடு அவ்வளவுதான்!! புகழின் உச்சியில், பணத்தின் உச்சியில் இருந்த சந்திரபாபு ஒட்டுமொத்தமாய் சரிந்து விழுந்து செத்ததற்கு முத்தாய்ப்பு இந்நிகழ்வு தான்.

சந்திரபாபு குடி விரும்பி. அதுவும் மேல் நாட்டு ஸ்டைலில் குடிப்பதை மிகவும் விரும்புகிறவர். ஆனால் அவரிடம் இரு ந்த ஒரு நல்ல பழக் கம், படப்பிடிப்பு நாளில் என்ன ஆனாலும் குடிக்க மாட்டார். அப்படி ப்பட்ட சந்திரபாபு முழுநேரக் குடிகாரனாக, போதை மருந்துக்கு அடிமையாக மாறியதை இப்படிச் சொல்கிறார், “தினமும் அளவோடு குடிப்பவன் நான். என்றைக்கு ‘மாடி வீட்டு ஏழை’ படம் எடுக்கத் துணி ந்தேனோ அன்றிலிருந்து மொடாக்குடிய னாக மாறி விட்டேன். பின் அதுவும் பத்தாமல் ‘பெத்தடின்’ எனும் போதை மரு ந்து க்கும் அடி மையாகிவிட்டேன்”.

எம்.ஜி.ஆரின் ஒரு முகம் இப்படியென் றால் சந்திரபாபுவின் வாழ்க் கையில் நடந்த இன்னொரு குட்டிச் சம்பவம் எம்.ஜி.ஆரின் இன்னொரு கோர முகத்தையும் காட்டுவதாய் இருக்கிறது.

மாடி வீட்டு ஏழை நட்டத்திற்குப் பின் சீரழியத்துவங்கிய சந்திரபாபு வின் வாழ்க்கை நாளடைவில் மொத்த மாகக் கெட்டது. போதைப் பழக்கத் தால் உடல்நிலை கெட, பட வாய்ப் புகளும் இல்லை. எப்போ தாவது ஏதாவது ஒரு படம் என வாய்ப்பு வந்தது. இரண்டு வருடங் கள் கழித்து எம்.ஜி.ஆருடன் ‘பறக்கும் பாவை’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. உணவுக்கே கஷ்டப்பட்ட நிலையில் அதற்கு ஒப்புக் கொண் டார் சந்திரபாபு.

ம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சந்திரபாபு மூவரும் அப் படத்தில் சர்க்கஸ் கலைஞர்கள். ஒரு காட்சியில் சந்திரபாபுவும், ஜெயலலிதாவும் ஒரு சுவர் மேல் ஏறி தப்பிப்பதைப் போல் காட்சி. சந்திரபாபு தவறி விழப் போக அவரை தாங்கிப் பிடித்து காப்பாற்றி யிருக்கிறார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப் பிற்கு ப்ரேக் விடப்பட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர், சந்திரபாபு, ஜெயலலிதா என மூவரும் சாப்பிட அமர்ந்திரு க்கிறார்கள். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திர்ருந்த எம்.ஜி.ஆருக்கு அவர் வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திர பாபுவுக்கோ வரவில் லை! “என்ன சாப்பிடலையா?” என கேட்ட எம்.ஜி.ஆர், “இன்னைக்கு என் சாப்பாட்டை சாப்பிடுங்கள்” என ‘ஒரு மாதிரி’யாகக் கூறி விட்டு எழுந்துபோயிருக்கிறார். ஏன் கோவ மாக இருக்கிறார் என குழம்பியி ருந்த சந்திரபாபுவிடம் “நான் உங்களைப் பிடித்து தூக்கினேன் இல்லையா? அது அவ ருக்குப் பிடிக்கவில்லை” என ஜெயலலிதா சொல்லி தெளிவித்திருக்கிறார்!!!!!

இதில் என்ன கொடுமை என்றால் சந்திரபாபு ஜெயலலிதாவின் குடு ம்ப நண்பர். சிறுவயதில் இருந்தே ஜெயலலிதா சந்திரபாபுவை “அங்கிள்” என்றுதான் அன்பொழுக கூப்பிடுவா ராம்! அப்படி உறவு கொண்டிருந்த ஒருவரைக் காப் பாற்றியதற்காகத்தான் எம்.ஜி.ஆரு க்கு அப் படி கோபம்!!

இதைப் படித்த போது இன்று தமிழக முதல்வராக, அமைச்சரவை யையே தன் காலடியில் கிடத் தியிருக்கும் ஜெயலலிதாவின் அந்த காலத்தைய வாழ்க்கையை நினைத்தபோது வேதனையும், பரிதாப முமே ஏற்படுகிறது.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு சந்திரபாபு வாழ்ந்தது மிக சொற்ப காலம்தான். சகலகலாவல்லவனாக விளங்கிய சந்திரபாபு நாற்பத்தி யாறு வயதிலேயே தன் உடல்வலுவை எல்லாம் இழந்து, ஒரு சொ த்தும் இல்லாமல் பிச்சைக்காரராக செத்தார்.

7.3.1984 அன்று அதிகாலை 3.30 மணிக்கு அவர் உடல் நிலை திடீரென்று மோசமாகியது. ரத்த வாந்தி எடுத்தார். அப்போது அவருடைய வேலைக்கார பையன் வந்து அவருக்கு உதவி செய்தான். அறையை சுத்தம் செய்துவிட்டு, சந்திர பாபுவின் முகத்தையும் துடைத்து விட்டான்.

‘நான் தூங்கப் போகிறேன், நீ கவலைப்படாமல் போய்படு’ எனறு அவனிடம் கூறி விட்டு, சந்திர பாபு படுத்துக் கொண்டார். 8ந் திகதி அதி காலை 5.00 மணி அளவில்அவர் மரணம் அடைந்தார். தூக்கத்தி லேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது கடைசி காலத் தில் அவரைப் பார்த் துக்கொண்ட மூன்று நண்பர்கள் தேங்காய் சீனிவாசன், எம். எஸ். விஸ்வ நாதன் மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி. அவரது இறுதிச் சடங்கையும் இவர்களே செய்தனர்.

எம்.ஜி.ஆரைப் பற்றிய சந்திரபாபுவின் அனுபவங் களை அவர் எழுத் திலேயே உணர்ச்சி பொங்க படிக்கும் போது, “what you see is the tip of an iceberg” என மனிதர்களின் குணத்தைப் பற்றி சிக் மண்ட் ஃப்ரா ய்டு சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது! மனிதர்கள் முழுமை யான புரிதலுக்கு அப்பாற்ப்பட்டவர்கள். அவர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என அவ்வளவு சுலபமாக அட்டவ ணைப்படுத்திவிட முடியாது! மனிதனின் குணம் ஆழமானது, புதிரா னது. அதை முற்றி லும் புரிந்துகொள்ள நிச்சயமாக வேறொரு மனித னால் முடியாது! ஏன்? சில நேரங்களில் அந்தந்த மனிதனுக்கே கூட அது முடியாத காரியம் தான்!!

(மேலும் தகவல்களுக்கு, ‘சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும்’-முகில். சிக்த் சென்ஸ் பதிப்பகம்’)

thanks to donashok

6 Comments

 • சிவா

  பறக்கும் பாவை படத்தில் நடித்தது ஜெயலலிதா அல்ல. சரோஜாதேவி

 • GK

  we cannot take this article as fully right information but basically chandra babu is drug addict and i heard that because of his friend ship only great actress savithri also became drug addict and loss her life.also one thing i would like to share that MGR never act in film also as a drug addict.
  GK

 • Maanu Mahi Bls

  “what you see is the tip of an iceberg” என மனிதர்களின் குணத்தைப் பற்றி சிக் மண்ட் ஃப்ராய்டு சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது! மனிதர்கள் முழுமை யான புரிதலுக்கு அப்பாற்ப்பட்டவர்கள். அவர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என அவ்வளவு சுலபமாக அட்டவணைப் படுத்திவிட முடியாது! மனிதனின் குணம் ஆழமானது, புதிரானது. அதை முற்றி லும் புரிந்துகொள்ள நிச்சயமாக வேறொரு மனிதனால் முடியாது! ஏன்? சில நேரங்களில் அந்தந்த மனிதனுக்கே கூட அது முடியாத காரியம் தான்!!

 • Yazhini

  மனிதர்கள் முழுமையான புரிதலுக்கு அப்பாற்ப்பட்டவர்கள்!!

 • Anonymous

  ஒரு மனிதனின் வீழ்ச்சிக்கு அவனது செயல்களே காரணம். சந்திரபாபு அவர்கள் போதைக்கு அடிமையானதுக்கு காரணம் எம்.ஜி.ஆர். அவர்களா? அவர் தான் சந்திரபாபு சாவுக்கு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
  நூற்றுக்கு நூறு எந்த மனிதனும் நல்லவர்களாக இருந்ததில்லை. மஹாத்மா என்று அழைக்கப்படுகிற காந்திஜி அவர்களை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்க துடிக்கிற மனிதர்கள் மத்தியில் எம்.ஜி. ஆர். போன்றவர்கள் எம்மாத்திரம்?………

 • Anonymous

  அடிமைப்பெண்…படம்..என்று நினைக்கிறேன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: