Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தக்க‍ வயதில் திருமணம் அவசியம்

கல்விக்கடன் அடைப்பு, பெற்றோரின் பராமரிப்பு, உடன்பிறப்புக்கு உறுதுணை, ஒப்ப‍னை, ஹோட் ட‍ல்களில் அடிக்கடி சிற்றுண்டி உபசாரம், தோழமைக்கு உபசரி ப்பு, உல்லாச பயணங்கள், அலங்கார ஆடம்பர நகை, நடை, உடை இவற்றால் சேமிக் க‍ முடியாததாலும், பெற்றோர் களால் திருமண சுமைக்கு தோள் தர இயலாமையினாலு ம், கல்யாண முருங்கைகளாக கன்னியர் கூட்ட‍ம் கூடி வருகிறது.

கல்யாண தரகர்களால் ஒரு சிறிய அளவு பற்றாக்குறை, பள்ள‍த் தாக்கு இடைவெளிபோல் படம் படித்துக் காட்ட‍ப்பட்டு, திருமணங் கள் திசை திருப்ப‍ப்படுகின்றன•

மிக எளிய ஒரு வேளை திருமணம், சம பாதி திருமண செலவுகள் பகிர்தல், பகட்டு ஏதுமற்ற‍ அழைப்பு கள், பட்டுகளின் வெட்டு கூட்ட‍ம் குறைந்து திருமணம் நிகழ்வுற சமுதாய மாற்ற‍ம் தேவை.

ஏழடி வைத்து கைப்பிடிப்பவர்களுக்கு எழுத படிகள் உயர, எளிமையே வாழ்க் கையை சாஸ்வதமாக்கித் தரும் முதலடி.

தக்க‍வயது திருமணம் அதை தக்க‍வைக்க‍ உதவுவதோடு, சந்ததி தழைக்க‍வும், அவர் கட்கு காலாகாலத்தில் சந்நிதி திறக்க‍வும் வகைகோலும் அல்லவா.

– கௌரி கிருஷ்ணன், நாட்டியக் கலைஞர்
(நம் உரத்த‍ சிந்தனை மாத இதழிலிருந்து. . .)

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: