
பெண் விடுதலை
“ஆடை அணிகலன் ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித் திருப்பதும்
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும்
கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி”
மண்ணுக்குக் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை!
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே!
ஊமையென்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு!
புலனற்ற பேதையாய்ப பெண்ணைச் செய்தால்அந்
நிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே!”
புல் விளைந்திடலாம்! நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை
நல்லறிவுடைய மக்கள் விளைவது நவிலவோ நான்!
எண்ணும்படி அமைத்தீர்! இப்படியே பெண்ணுலகம்
ஆகும்நாள் எந்நாளோ அந்நாளேதுன்பமெல்லாம்
போகும்நாள் இன்பப் புதிய நாள் என்றுரைப்போம்!”
சமுதாயச் சீர்திருத்தம்
இளமைத்திருமணத்தை எதிர்க்கும் புட்சிக்கவிஞர், விதவைத் திருமணம் வேண்டுமென்கிறார். கைம்பெண் நிலைக்குக் கழிவிர க்கம் ஒன்று “கோரிக்கையற்றுக் கிடக்கு தன்னே இங்கு வேரிற் பழுத்த பலா” என்று கூறி,
“ஆடவரின் காதலுக்கும் பெண்கள் கூட்டம்
அடைகின்ற காதலுக்கும் மாற்றமுண்டோ?
பேடகன்ற அன்றிலைப் போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல் செயப் பெண் கேட்கின்றான்?
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின்மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ?”
சாதியும் சமயமும்
“சாதிப் பிரிவு சமயப் பிரிவுகள்
நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்
மூடப் பழக்க வழக்கங்கள் எல்லாம்
முயற்சி செய்தே ஓடச் செய்தால்”
சமூகமும் நாடும் விடுதலை பெறும் என்பது கவிஞரது எதிர் பார்ப்பு. “கவிஞரின் மிக இளமைக் காலத்திலேயே எழுதப்பெற்ற இந்நூலில் பெண் விடுதலை பேசப்படுகிறது. பெண்ணடிமை செய்கின்ற தமிழ்நாட்டைக் கண்டு கவிஞர் எந்த அளவு சீற்றம் கொள்கிறார் என்பதை அறிய முடிகிறது”. இந்நாட்டின் சமுதாயக் குறைகள் 1936-ஆம் ஆண்டிலேயே கவிஞனை எங்ஙனம் விழிப்பு அடையச் செய்தன என்பதை அறிய முடிகிறது.
தமிழ்
பாண்டிய, சோழ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களின் பல நூற்றாண்டு கால ஆட்சியில் வட மொழி தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள, தமிழானது பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. மேலும் புதியவரவான ஆங்கில ஆதிக்கத்தின் கீழ்ப் புதிய சமுதாயநிலைமைகளும் பொருளாதார உறவுகளும் தோற் றம் பெற்றன.
நன்னிலை உனக்கெனில் எனக்குந்தானே “
தொழிலாளர்:
பளபளக்கும் பாட்டாடை உடுத்தும் ஆலை முதலாளிகளின் மன தில் வஞ்சகமும் சூழ்ச்சியும் பிறர் உழைப்பை உறிஞ்சும் கயமைத் தனமும் நிறைந்திருக்க, உழைக்கின்ற பாட்டாளி மக்களோ அழுக்குத் துணியில் இருந்தாலும் அவர்தம் நெஞ்சத்தில் அறம் நிறைந்து இருக்கும் என்பதை,
“அழுக்குத் துணிக்குள்ளே
அறத்தோடு பிணைந்துள்ள
அவ்வுயிரே என்றன் ஆருயிராம்!”
எனப் பாரதிதாசன் அழகாக் குறிப்பிடுவதைக் காணலாம்.
இயற்கையின் அழகைக் காணும் பொழுதும் அதனை எடுத்துரைக் கும் போதும் அதிலும் உழைப்பாளர் களின் துயர வாழ்வை எடுத் துரைக்கும் பாரதிதாசனின் பரந்த மனத்தை நாம் பல இடங்களில் காணலாம்.
பொதுவுடைமைச் சமுதாயத்தைத் தமிழ் மண்ணில் உருவாக்க விழைந்த பாரதிதாசனின் மனமானது இங்குள்ளஜாதி, சமய மூடத் தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதிலேயே முதல் கவனம் செலுத்தவேண்டிய நிலையில் இருந்தது என்பதையும் நாம் அறிய முடிகிறது. உயர்ந்த வாழ்க்கையை அடைவதற்கான நெறியான து உயர்ந்த பண்புகளை உள்ளடக்கியதாக அமைகிறது. அவற்றை எடுத்துரைக்கும் முகமாய் பாரதிதாசன் தம் பாடல்கள் அமைந்து ள்ளன.
தமிழர் தாம் இழந்திருந்த கலை இலக்கிய, பண்பாட்டுச் சிறப்புக ளையும் வரலாற்றுப் பெருமைகளையும் தம் பாட்டுத் திறத்தால் மீட்டுத் தர வேண்டும் என முழக்கமிட்டவர் பாரதிதாசன்.
வாழ்வின்விழுமியங்களை எடுத்துரைப்பனவாக அமையும் பாரதி தாசனின் படைப்புகள் தமிழர் தம் வளமான வாழ்க்கைக்குச் சிறந் த வழிகாட்டியாக அமைவன என்பதில் அய்யமில்லை.