மார்ச் 2013 (இந்த) மாத நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
நாடாளுமன்றம் என்பது தேச மக்களின் இதயத் துடிப்பு, ஆட்சியின் நாடிப்பிடிப்பு, தேசத்தின் எதிர்காலம் குறித்த கருத்துக் கணிப்பு. இந்த நோக்கங்கள் அனைத்தும் இப்போது அடியோடு தொலைந்து போய் விட்டன•
ஒத்தி வைப்பதற்காகவே கூட்டப்படு ம் நாடாளுமன்றம் உலகிலேயே இந்திய நாடாளுமன்றம்தான். கடந்த இரண்டா ண்டுகளில் நடைபெற்ற அத்த னை நாடாளுமன்றக் கூட்ட த்தொடர்களும் கூச்சல், கலாட்டா, கைகலப்பு என்று யுத்தக் களமாகவே மாறியது ஜன நாயகத்தின் அவலமில்லையா?
கூத்தடிக்கத்தான் கூட்டத் தொடர் என்றால், இனி இந்த நாட்டில் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடக்காமலே இருக்கட்டும். மக்களின் வயிற்றெரிச்சலா வது அடங்கும்.
நம் தேசத்தின் மற்றொரு சாபக் கேடு, வேலை நிறுத்தங்கள். பிப்ரவரி மாதம் நடை பெற்ற இரு நாட்கள் வேலை நிறுத்தத்தால் நம் நாட்டுக்கு 26 ஆயிரம் கோடி இழப்பாம். (2 ஜியை விட குறைவு தான்).
பஸ்ஸை நிறுத்து . . . இரயிலைக் கொளுத்து. . எல்லா வற்றையும் முடக்கு. . . வீட்டுக்குள் முடங்கு. . . முடிந்தால் திறந்திருக்கிற கடை களை நொறுக்கு (சாராயக் கடைக ளுக்கு அன்றுதான் ஏக வருமான மாமே) இதுதான் நம் நாட்டு வேலை நிறுத்தம்.
ஆனால் ஜப்பானில் வேலை நிறுத்தம் எப்படித் தெரியுமா? ஷூ கம் பெனிகள் அனைத்தும் வேலை நிறுத்த தினத்தன்று வலது அல்லது இடது கால் ஷூவை மட்டுமே தயாரிக்குமாம். கடிகார நிறுவனங்கள் நிமிட முட்களை மட்டுமே தயாரிக்குமாம். அதாவது வேலையும் நடக்கும் அதே சமயம் எதிர்ப்பும் இருக்கும். அதனால்தான் குட்டி நாடான ஜப்பான் வல்லரசாகியிரு க்கிறது. வல்லரசாக வேண்டிய நாம் வல்லூறுகளின் அரசாயிருக்கிறோ ம்.
அப்படியானால் போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும், கூடாதா? என்று கேட்கலாம். எந்த பின்புலமும் இல்லாத சசிபெருமாள் என்ற தனி மனிதர் சென்னையில் நடத்திய உண்ணா விரதப் போராட்டம் உலகின் கவனத் தை ஈர்த்திருக்கிறது. இது போன்ற அறவழிப் போராட்டங் களே அரசை, ஆட்சியாளர்ளை அதிகாரிகளை ஆட்டம் கொள்ள வைக்கும்.
எனவே வைத்து வேட்டுப் போராட்டக்காரர்களே! சசி பெருமானாய் மாறுங்கள். போராட்டத்திற்கான வழிமுறைகளை மாற்றுங்கள் அப்பாவி இந்தியனின் நேரதை, உழைப்பைக் காப்பாற்றுங்கள்.
இந்த வைர வரிகளின் உரிமையாளர்
உதயம் ராம் (நம் உரத்த சிந்தனை) => கைபேசி 94440 11105
very good article new law to be formed, if Parliament not functioned regularly govt to be dismissed.hats of to excellent patriotic article
GK
This Article should be given as a Pamphlet to every Indians.
Wow! Wonderful Lines.
I appreciate Mr. Sathyamoorthy for his voice.
கூத்தடிக்கத்தான் கூட்டத் தொடர் என்றால், இனி இந்த நாட்டில் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடக்காமலே இருக்கட்டும். wow! Nethiyadi
பொறுப்பாய் இருக்க வேண்டியவர் பொறுப்பாய் இல்லாமல் இருந்தால் நமக்கு
வெறுப்பாய் அவர்கள் மீது இருக்கும் – அதனால் நாம் உடனே
நெருப்பாய் மாறி, அவர்களை
சுறுசறுப்பாய் பணியாற்ற வைப்பது நமது கையில்தான் உள்ளது
இந்த வரிகளை படித்து விட்டு, இதை எழுதிய உதயம் ராம் அவர்களை கைபேசி மூலமாக தொடர்புகொண்டபோது, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகவே செய்தி வருகிறது. ஆகவே நண்பர் சத்தியமூர்த்தி, திரு. ராம் அவர்களை தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க வேறு ஏதேனும் தொடர்பு எண்கள் குறிப்பிட்டால், நன்றாக இருக்கும்.