Monday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்

எந்த ஒரு நோயும் மனிதனை உடனே தாக்குவதில்லை. சிறுக சிறுக தாக்கியப் பிறகே வலுவடைகின் றது. இதன் ஆரம்ப கட்டங் கள் நமக்கு சில சமிக்கைகள் கிடைக்கவே செய்கி ன்றன. அவைகளை நாம் புரிந்துக் கொண்டால் நோய்க்கான காரணத் தை தெரிந்துக் கொண்டு அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்

முதலில் கைகளை எடுத்துக் கொள் வோம். கைகளில் உள்ள ஐந்து விரல் களின்மூலம் ஆறுவகை உறுப்புகளின் இயக்கத்தை தெரிந்துக் கொண்டு நோய்க்கான காரணத்தை விரைவில் ஒரு பைசா செலவில்லாமல் கண்டு பிடித்து விடலாம். நாடி பார்த்து 12 உறுப்புக ளின்நோய் அறிவது அக்கு பஞ்சர் ஆகும்.  இதனால்தான் ஏற்படுவதில் லை இந்த மருத்துவ த்தில் நோய் கண்டறிவதின் பிழை . இன்னும் சில வழிகளும் இருக்கின்றது நோய் கண்டறிய. அவை களில் ஒன்று தான் கை விரல்கள் மூலம் நோய் அறியும் நிலை .

கை பெருவிரல் (THUMP FINGER)

கை பெருவிரல் வெளிப்பக்க ஓரத்திலிருந்து வலி ஆரம்பித்து நேராக முழங்கை மேல் பக்கம் நடுவில் சென்று பிறகு மேலே வலி முடியுமா னால் அல்லது இதற்கு இடைஇடையே வலியோ மரமரப்போ இருக் குமானால் இது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.
     
ஆட்காட்டி விரல் (INDEX FINGER)

ஆட்காட்டி விரலில் ஆரம்பித்து முழங்கை வெளிப்பக்கமாக நேராக தோள்பட்டை மேல் சென்று மூக்கின் ஓரத்தில் முடியும். இந்த பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைக ளும் பெருங் குடல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.

நடு விரல் (MIDDLE FINGER)

நடுவிரல் இதயத்தின் மேல் உறையோடு சம்பந்தப்பட்டது. இதய நோயின் ஆரம்ப கட்டத்தில் அல்லது இதயத்தின் மேல் உறையில் ஏற்படும் பிரச்சினைகள் இந்த விரலில் ஆரம்பித்து உள்ளங் கை பக்கமாக வந்து கையின் நடுவில் நேராக சென்று அக்குளின் மேல் புறம் முடியும். இந்த பாதையில் அல்லது அதற்கு இடைப் பட்ட பகுதியில் ஏற்படும் உபாதைகள் அனைத்தும் இதய உறை (PERICARDIUM) பாதிப்பை அறிவுறுத் தும் அறிகுறிகளாகும்.

மோதிர விரல் (RING FINGER)

உடலில் வெப்ப நிலை மாறுபாட்டை அதனால் ஏற்படும் நோயின் அறிகுறிகளை மோதிர விரல் மூலம் அறிய லாம். இந்த விரலில் ஆரம்பித்து கையின் பின் புறமாக சென்று தோள் பட்டை மேல் புறமாக காது வழியாக போய் கண் அருகில் முடிகின் றது. இந்த பகுதியல் ஏற்படும் பாதிப்புகளும் இந்த பாதை செல்லும் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்புகளும் உடலில் உஷ்ண நிலையில் கோளாறு உள்ளதையே காட்டுகின்றன.
     
சுண்டு விரல் (SMALL FINGER)

சுண்டு விரல் நகக் கண்ணில் (மோதிர விரல் பக்கம்) வலி ஆரம் பித்து அது உள்ளங் கை பக்கமாக வந்து மணி க்கட்டு ரேகையின் ஓரமாக போய் அக்குலில் முடியுமானால் அது உறுதி யாக இதயத்தின் பாதிப்பைக் காட்டுகி ன்றது. சுண்டு விரல் நகக் கண் வெளிப் பக்கம் ஆரம்பித்து மணிக் கட்டு ஓரமாக போய் முழங்கை கீழாக சென்று தோள் பட்டையின் பின் பக்கமாக போய் காதின் ஓரத்தில் முடியும் பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிறுகுடல் பாதிப்பை வெளிப் படுத்தும் அறிகுறி களாகும்.

கவனம்

சுண்டு விரலில் ஏற்படும் வலியின் போதும் நடு விரலில் ஏற்படும் வலியின் போதும் அலட்சியமாக இரு ப்பது இதயத்தையும் இதயத்தின் மேல் உறையை யும் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதயத் தில் முதலில் பிரச்சினை வரும்போது அது நடு விரல் பாதையில் தான் அதிகமாக அறி குறிகள் தென்படும். அதன் பிறகே சுண்டு விரல் பக்கம் வலி ஏற்படும்.

சரிதானா?

நாம் இப்போது சிந்திப்போமானால் இது வரை நாம் செய்த செயல் கள் எந்த அளவுக்கு புறம்பானவை என்று அறியும் போது நமக்கே ஆச்சரியமா கவும் வெட்க மாகவும் தோன்றும். ஆம் கைவலிக ளுக்கு இத்தனை காரணங் கள் இருக்க இவை எதனையுமே கருத்தி ல் கொள்ளா மல் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு நம் மை நாமே ஏமாற்றிக் கொண்டது ஆச்சரியமானது ஒன்று மட்டு மல்ல மிக மிக அலட்சிய மான ஒன்று. இப்படி மாத்திரை சாப்பிடு வதன் மூலம் சாப்பிடு பவர் களுக்கு ஒரு தற்காலிக நிவாரணம் கிடைக்குமே ஒழிய நோய்(வலி) மீண்டும் மீண்டும் வந்துக் கொண்டேயிருக்கும். மாத்திரை சாப்பி ட்டால் மீண்டும் தற் காலிக சுகம் கிடைக்கும், அதேநேரத்தில் உள்பக்கமாக நோய் வளர்ந்துக் கொண் டே இருக்கும். நோய்க்கான காரணம் கண்ட றியப்பட்டு அது சரி செய்யப்படாத வரை நோயிலி ருந்து பூரண சுகம் என்பது கற்பனையே.

நடப்பதென்ன?

லி ஏற்படும்போது நீங்கள் மதிப்பு மரியாதையுடன் பணம் கொடு த்து வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் வலியை நீக்கு வதில்லை. அதற்கு பதிலாக வலிக்கின்றது என்ற செய்தி செல்கள் மூலமாக மூளைக்கு எட்டுவதை தடுத்து விடுகின்றது (மேலும் விவரத்திற்கு மூளைக்கு சுய அறிவில்லை என்ற முந்தைய தொடரை படியுங்கள்), அதனால் நமக்கு வலி தெரிவதில்லை.

உதாரணம்:

நம் உடலில் ஓர் ஆபரேஷன் செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம், மயக்க ஊசி போடா மல் செய்ய முடியுமா? முடியாது காரணம் வலியை தாங்க முடியா து, அதே நேரத்தில் ஆப்பரேஷன் செய்யும் பகுதியில் மயக்க ஊசி போட்டு விட்டு செய்யும் போது ஆப ரேசனை அவன் கண்கள் பார்க்கி ன்றன. ஆனால் வலி தெரிவதில் லை. எப்படி?

மயக்க ஊசி போட்டதால் அந்த பகுதி செல்கள் தற்காலிகமாக செயல் இழக்க செய்யப்படுகின்றன. அவை களால் பாதிப்பின் செய்திகளை மூளைக்கு தெரிவிக்க முடிவதில்லை. அதனால் வலியை உணர முடிவதில்லை. வலி நிவார ண மாத்திரைகள் இதே அடிப்ப டையில் செய்யப்படுபவைகளே.

எந்த உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருக் கின்றது என்பதை இந்த கட்டுரை மூலம் நாம் தெரிந்து க் கொள்ள முடியும். 

நன்றி => டாக்டர் A. ஷேக் அலாவுதீன், MD., (Chin.Med), A.T.C.M (CHINA)

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: