Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோடை கால வியாதிகள் வராமல் இருக்க‍ எச்சரிக்கையான எளிய வழிகள்!

ஹாங்காங்கின் மக்காவ் தீவுகள், ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா, சுவிஸ் நாட்டின் பனி மலைகள், நம்முடைய ஊட்டி… இக்கோடை விடுமுறைக்கு நீங்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் திட்டமிட்டு இருக்க லாம்; ஒருவேளை எங்கும் செல்லாமல் ஊரிலேயே கழிக்கவும் திட்டமிட்டு இருக் கலாம். ஆனால், உக்கிரமான வெயிலை எதிர்கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறீர்க ளா?

கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்கள், அதைத்தீர்க்கும் வழி முறை கள்குறித்துப் பொதுநல மருத்துவர்களிடம் பேசினோம். ”கோடைக் காலத்தில் சின்னம்மை, வயிற்று ப்போக்கு போன்ற தொற்று வியாதிகளும், நீர் அளவு குறைவதால் ஏற்படும் டிஹைட்ரேஷ ன், உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நீர்க் கடுப்பு போன்ற பிரச்னைகளும் தாக்க அதிக மாக வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் பொது மருத்துவர் ஜி.ஹேமநாதன். ”பொதுவாக மனித உடல் நல்ல நிலை யில் இருக்கத் தேவையான வெப்ப நிலை 25 டிகிரி செல்ஷியஸ். ஆனால், இப்போதோ வெப்ப நிலை 35 – 40 டிகிரியை சர்வ சாதாரணமாகத் தொடுகிற து. இந்த நிலையில் உடலைக் குளிர்ச்சிய டையச் செய்ய அதிக அளவில் வியர்வை வெளி வரும். இதனால், அதிக அளவில் தண் ணீர் குடிப்போம். எல்லா இடங்களிலும் பாதுகாப் பான நீர் கிடைப்பது இல்லை. அவ சரத்துக் குக் கிடைக்கும் தண்ணீரைக் குடிப் பதால் நீர் மூலம் பரவும் வியாதிகளுக்கு ஆளாக வேண் டி இருக்கிறது” என்று எச்சரி க்கிறார்.

காலரா

விப்ரியோ காலரா என்ற பாக்டீரியாத் தொற்றால் ஏற்படும் நோய்தா ன் காலரா. இது அசுத்தமானத் தண் ணீர் மற்றும் பாதுகாப்பற்ற உணவி ன் மூலமாகப் பரவும். காலராவின் முக்கிய அறிகுறி, வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி. உடலில் இருந்து மிக அதிக அளவில் நீர் மற்றும் எலெக் ட்ரோலைட் என்னும் வேதிப் பொருட் கள் வெளியேறும் போது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். தண்ணீர் மற்றும் உணவு மூலம் வயிற்றுக்குச் செல்லும் இந்தக் கிருமியை இரைப் பையில் உள்ள அமிலங்களே அழித்துவிடும். அதி ல் இருந்தும் தப்பித்துச் செல்லும் சில கிருமிகள் சிறுகுடலில் பதுங் கிக்கொண்டு பல்கிப் பெருகும். இந்தக் கிருமித் தொற்று நான்கு மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் சிறுகுடலில் வளர்ச்சி அடைந்து வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். வயிற்றுப்போக் கு ஏற்பட்டுச் சரியான சிகிச்சை மேற்கொள்ள வில்லை எனில், 18 மணி நேரத்தில் தொடங்கி சில நாட்களுக்குள் உயிரிழப்பையே ஏற்படுத்தி விடக்கூடும். நீர்ச்சத்து வெளியேறிக்கொண்டே இருப்பதைத் தடுக்க, நோயால் பாதிக்கப்பட்டவ ருக்கு ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சர்க் கரையும் கால் ஸ்பூன் உப்பும் சேர்த்துக் கலக்கிக் கொடுக்க வேண்டும். இளநீர், பழ ச்சாறு குடிக்கக் கொடுக்கலாம். டாக்சிசைக்ளின் என்ற மாத்தி ரையை மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம்.

சின்னம்மை

எளிதில் பரவும் தன்மைகொண்டது சின்னம்மை. இது ‘வேரிசில்லா சோஸ்டர் வைரஸ்’ என்ற கிருமியால் பரவு கிறது. முதலில் உடலில் அரிப்பு ஏற்படும்; அதன் பிறகு நீர்க்கட்டி தோன்றும். காற்று மூலம் பரவும். தும்மினாலோ, நேரடித் தொடர் பாலோ ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்குப் பரவும். அரிப்பு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பும் அரிப்பு வந்த ஆறு நாட்களுக்குப் பிறகு ம் நோய் பரவுதல் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் மட்டும் நோயாளியைத் தனியாக வைத்திருக்க வேண்டு ம். இது தானாகவே சரியாகிவிடும். இதன் வீரியத்தைக் குறைக்க ஆன்டி வைரல் மருந்துகள் உள்ளன. வீட்டில் ஒருவருக்கு அம்மைத் தொற்று வந்துவிட்டால், வீட்டில் உள்ள மற்றவர்கள் தடுப்பு ஊசி போட் டுக்கொள்ளலாம். ஏற்கெனவே அம்மை வந்தி ருந்தால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். அவர்களுக்கு மீண்டும் அம்மை வர வாய்ப்புக் குறைவு. நோய் எதிர்ப்பு சக்தி யாரு க்குக் குறைவாக இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாம் இந்த நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். சின்னம்மைப் பாதிப்புக்கு ஆளானவ ருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நல் ல ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளையும் நீர்ச் சத்து மிக்க பழங் களையும் சாப்பிடக் கொடுக்கலாம்.

மஞ்சள் காமாலை

வெயில் காலத்தில் கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதால் வரும் நோய் இது. மஞ்சள் காமாலையை நோய் என்ப தைவிட, காய்ச்சலைப்போல் இதுவும் ஓர் அறிகுறி என்றே கூறலாம். மஞ்சள் காமாலை வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. உடலில் ஏற்படும் மாற்றங் கள் காரணமாகவோ, வைரஸ் கிருமித்தொற்று காரணமாகவோ மஞ்ச ள் காமாலை வரலாம். வைரஸ் கிருமித்தொற்றால் மஞ்சள் காமா லை வருவதற்குத் தண்ணீர் மாசுபாடே காரணம். தண்ணீரில் பரவும் ஏ மற்றும் ஈ வைரஸ்கள்தான் மஞ்சள் காமாலை வருவதற்கானக் காரணம். வைரஸ் தொற்றைத் தடுக்கத் தடுப்பு ஊசிகள் உள் ளன. என்ன காரணத்தால் மஞ்சள் காமாலை வந் துள்ளது என்ப தைக் கண்டறிந்து டாக்டர் சிகிச்சை அளிப்பார்.

எலிக் காய்ச்சல்

மழைக் காலத்தில் அதிகமாக இந்த நோய் பாதிப்பு இருக்கும் என் றாலும், கோடையில் சிறிய மழை பெய்தாலும் இதன் பாதிப்பு மிகுதி யாக இருக்கும். இதன் மருத்துவப் பெயர் ‘லெப்டோஸ்பைரோசிஸ்’. எலிகளின் சிறு நீர் மூலம் இந்த நோய் பரவும். எலியின் சிறு நீரை மிதிக்கும்போது அதில் உள்ள கிருமிகள் தோல் வழியாக ஊடுருவி மனித உடலுக்குள் சென்று விடும். இந்த நோய்க் கிருமிகள் மனித உடலில் தொற்றிக்கொண்டால், ஏழு முதல் 10 நாட்களில் ரத்தத்தில் நன்கு வளர்ந் துவிடும். அதன் பிறகே பாதிப்பு வெளியே தெரியும். இந்த நோய் வந்தால், காய்ச்சல் மற்றும் தலைவலி இருக்கும்; கண்கள் சிவந்துவிடும். சரியாகச் சாப்பிட முடியாது, வாந்தி வரும், கால்களில் வலி உண்டாகும். சிலருக்கு இந்த நோய் மஞ்சள் காமா லையையும் ஏற்படு த்தும். குடும்பத்தில் ஒருவருக்கு இந்நோய் வந்தா ல், மற்றவர்களுக்கும் பரவ வாய்ப் பு இல்லை.

தொற்றா நோய்கள்

கோடைக் காலத்தில் தொண்டை வறண்டுபோய் வறட்டு இருமல் அதிகம் ஏற்படும். இந்த நேரத்தில் குளிர் ந்த நீர் குடித்தால், சளியோடு காய்ச்சலு ம் உண்டாகும்; உடலில் நீர்ப் பற்றாக் குறை ஏற்படும். இதனால், சிறுநீரகப் பிர ச்னைகள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. இதே போல், வறண்ட வானிலை காரண மாகக் காற்றில் அதிகமாக இருக்கும் மகரந்தத் தூளினால் பலருக்கு ஒவ்வா மை ஏற்படலாம். வெயில் காலத்தில் தூக்கம் அதிகமாக இருக்காது. வியர்வை காரணமாகத் தூக்கம் இன்மை, அதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம்.

வெயில் கால நோய்களில் இருந்து தப்பிக்க டாக்டர் அளிக்கும் டிப்ஸ்:

வியர்வை அதிகமாக வரும்போது, வியர்க் குருவும் வருகிறது. மலேரியா என்ற கிருமி யால் வியர்க்குரு ஏற்படும். இதைத் தவிர்க்க தின மும் இரண்டு முறை குளிக்க வேண்டும். வியர்க்குரு பவுடரையும் பயன்படுத்தலாம்.

நன்கு கொதிக்கவைத்து, ஆறவைக்கப்பட்ட தண்ணீரையே குடிக்க வேண்டும்.

நாள் ஒன்றுக்குக் குறைந்தது இர ண்டரைமுதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். வெளி யில் சென்று வந்த உடன் குளிர்ந்த தண்ணீரைக் குடிக்கக் கூடாது; வெது வெதுப்பான தண்ணீ ரை அருந்தலாம்.

காபி, ஆல்கஹால் போன்ற பானங் கள் சிறுநீர்க் கழித்தலை அதிகப்படுத் தும். இதனால், உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படலாம். எனவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

குடியிருப்புகளின் அருகே கொசுக்கள் உற் பத்தியாவதைத் தடுக்க வேண்டும். பயன் படாதவை என்று தூக்கிப்போடும் தேங்கா ய்ச் சிரட்டை, டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும்

தண்ணீரில்தான்  கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அதனால், சுற்று வட்டாரத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: