Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“சாதாரண மாணவன் அல்ல திலீபன்” (மாணவர் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட‍ லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரில் இந்த திலீபனும் ஒருவர்)

மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்த 8 மாணவர்களில் ஒருவரான திலீபன், சாதாரண மாணவன் அல்ல ஒரு சாதனைத் மாணவன் (தமிழன்)

மாணவர்களை தப்பா யூஸ் பண்றீங்க ……
மாணவர்களுக்கு அரசியல் வேணாம்….
பிள்ளைங்க அப்பா அம்மாவ நெனச்சிங்களா…..
உங்க புள்ளைங்கள போராட்டத்துக்கு அனுப்புவின்களா….
படிக்கிற புள்ளைங்களுக்கு அரசியல் தேவையா….

இப்படி பல விதமான கருத்துகள் இருந்து அறிவாளிகளிடம் இருந்து கேட்கப்படுகிறது..

திரும்பத் திரும்ப ஒன்னு மட்டும் சொல்றேன் இப்போ நடக்கும் மாணவர் போராட்டம் எந்த அரசியல்வாதியாலும் தூண்டப்பட்டது அல்ல அல்ல, அல்லவே அல்ல, அது தானாக உணர்வு பூர்வமாக எழுந்த எழுந்த ஒன்று.

அதற்க்கு ஆதாரமாக பல ஆதாரங்கள் இருந்தாலும் என்னால் , எனக்கு தெரிந்த வரையில் சிலவற்றைச் சொல்கிறேன் இப்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி இட்ட லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் என்பதை யாரும் மறுக்க முடியாது…

ஒரு பானைச்சோற்றுக்கு ஒருசோறு பதம் போல் இன்றையதினம் தமிழ்நாடு முழுதும் நடைபெறும் மாணவர் போராட்டத்துக்கு ஆணிவேராய் இருக்கும் லயோலா மாணவர்கள் 8 பேரில் ஒரு வரான தம்பி திலீபனை பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வது அவசியம்…

தாயின் கருவில் இருக்கும் போதில் இருந்தே தமிழை சுவாசமாய் சுவாசித்தவன் தான் இந்த திலீபன்…

அதற்கு ஆதாரமாய் பின்வரும் தகவல்கள் …

1330 அருங்குறட்களையும் முற்றோதல் செய்தமைக்காக தமிழக அரசின் குறள் பரிசு ரூ.10,000 பெற்ற திருக்குறள் திலீபனின்

கவனகம் மற்றும் நினைவாற்றல் நிகழ்ச்சி

பதினாறு கவனக நிகழ்ச்சி

1. குறள்கவனகம்
2. பறவைக்கவனகம்
3.எண்கவனகம்
4.விலங்குக்கவனகம்
5.எழுத்துக்கவனகம்
6. நூல் கவனகம்
7. கூட்டல்கவனகம்
8. மலர்க்கவனகம்
9. பெயர்க் க வனகம்
10. பழக்கவனகம்
11. ஆண்டுக்கவனகம்
12. நாடுகள் கவனகம்
13. மாயக்கட்டகவனகம்
14. வண்ணக் கவனகம்
15. தொடு கவனகம்
16. ஒலிக் கவனகம

திருக்குறள் நினைவாற்றல் நிகழ்ச்சி 1.முதல் சீரைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் 2. குறளைச் சொன்னால் குறளின் எண் ணைச் சொல்லுதல் 3. குறளின் எண்ணைச்சொன்னால் குறளைச் சொல்லுதல் போன்று பல்வேறு வகைகளில் திருக்குறளில் நினைவாற்றலை வெளிப்படுத்துதல

1 முதல் 50 பெயர்களை வரிசை எண்ணுடன் மாற்றி மாற்றிச் சொல்ல அதை நினைவில் நிறுத்தி 1 முதல் 50 வரை எண்ணை யும் அதற்கான பெயரையும் வரிசையாகச் சொல்லுதல்

கி.பி.1 முதல் கி.பி.1,00,000 ஆண்டு வரையிலான தேதியைச் சொன்னால் கிழமையைச் சொல்லுதல்

பிறந்த தேதி முதல் முக்கியமான நிகழ்ச்சிகள் வரை எந்தத் தேதியைச் சொன்னாலும் உடன் கிழமையைச் சொல்லுதல்.

உலகநாடுகளின் பெயரைச்சொன்னால் தலைநகரத்தின் பெயரை ச் சொல்லுதல்…

இத்தனை திறமைகள் உள்ள மாணவன் தான் தற்போது லயோலா உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட திலீபன்..

திலீபனையும் அவனது குடும்பத்தையும் கண்ட பின், பழகிய பின், நிச்சயமாக இது பெற்றோர்கள் ஆசீர்வாதத்தோடு நடக்கும் போரா ட்டம் என்பது தெளிவானது…
மேலும் பல விஷயங்கள் திலீபனை பற்றி விரைவில் நான் எனது பக்கத்தில் வெளியிடுவேன். திலீபனை நாம் உலகறிய எடுத்து செல்ல வேண்டும் அதற்கு என்னால் ஆன உதவி செய்ய வேண் டும் அது தான் எனது ஆசை..

சாதாரண மாணவன் அல்ல திலீபன் அவனை பற்றிய பல சாத னைகளை உங்களுக்கு நான் காணொளியாக விரைவில் தருகி றேன் உங்கள் அன்பான ஆதரவினை அந்த சிறுவனுக்கு ஆதரவு அளித்து உலக அரங்கில் எடுத்து செல்லுங்கள்.

– தமிழ்.களம் (முகநூல்)

One Comment

  • Anti-Hindi agitation spoiled the future of students,spoiled the future of Tamilnadu,allowed the DMK to come to power and start the saga of corruption in Tamilnadu,Spread of ‘THEERA VIDAM” spoiled the social structure of the Tamils and destroyed the peaceful co-existance between the various caste groups,encouraged foreign forces,encouraged anti-hindu propaganda by protestant christian forces ,encouraged religious conversion ,has spolied the systems of Marriage celebration in Tamilnadu and has led to serious cultural and social degradation.
    This agitation by the students will do more damage to Tamilnadu.High time the students concentrate only on studies and keep away from politics ,especially international politics.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: