யூடியூப்பில் ஒரு வீடியோ பார்த்தேன் என்ன அற்புதமான வீடியோ அது! அந்த வீடியோவை பார்க்கும் மெய்சிலிர்க்கிறது. அந்த அளவுக் கு அற்புதமாக வீடியோ இதைப்பார்த்தவுடன் என் (விதை2விருட்சம்) நினைவுக்கு வந்த வலிகளையும், எனது மனதில் தோன்றிய வரிகளையும் இங்கே பகிர்கிறேன்.
இந்த சிற்றுயிர்கள் ஒற்றுமையாக இருந்து தங்களது இனத்தில் உள்ள ஒரு ஜீவனை காப்பாற்றுகிறது. ஆனால் மனிதா நீ மட்டும் ஏனோ ஜாதிகளாலும் மதங்களாலும், அரசியலாலும், பிரிந்து ஒற்றுமை யின் மகத்துவத்தை தீ இட்டு கொளுத்தி அதே தீயில் உன் சக மனிதனையும் சுட்டெரிக் கிறா யே! இன்று நீ அவனை சுட்டெரித்து அகமகிழ்வது போல், நாளை உன் னை வேறொருவன் சுட்டெரித்து அகமகிழ் வானே! அப்போது புரியும் தீ எவ்வளவு கொடூரமானது என் றும், அதன் வலியால் நீ எரித்தவன் எப்படியெல்லாம் பாதிக்கப் பட்டிருப்பான் என்பதை அப்போது உணர்வாய்!
வேண்டாம் மனிதா? ஜாதி, மதம், அரசியல் இவைகளை,
உன் சக மனிதனை உன் உற்ற தோழனாக தோழியாக பார்க்கும் மனோபாவத்தை கொண்டுவா. இன்று நீ இதை செய்தால், உனை பார்த்த வேறொ ருவன் உன்னை தன் சக தோழனாக ஏற்றுக் கொள்வான் பின்பு என்ன, சமுதாயத்தில் தானாகவே ஒற்றுமை வலுபெற ஆரம்பிக்கும்.
ஒற்றுமை வலுப்பெற ஆரம்பித்தால், ஜாதி, மதம், அரசியல் என்ற இவைகளில் ஒன்றோ அல்லது இவை அனைத்தும் சேர்ந்தோ தீயாக மாறி, உன்னை எரிக்க முற்படும் போது, இந்த ஒற்றுமைதான் தண்ணீராக மாறி அந்த தீயை இருந்த இடம் தெரியாமலும் தோன்றிய தடம் பதியாமலும் மறைந்து போகச் செய்யும்.
ஒற்றுமையின் அவசியத்தையும் அதன் பலத்தையும் உணர்த்தும் விதமாக, நண்டு, எறும்பு மற்றும் பென்குயின்க ளை கொண்டு இதை காட்சிப்படுத்தப் பட்டு, உள்ளது. இந்த வீடியோவில் உள்ள காட்சி களை பொறுமை யாக அதே நேரத்தில் அவசியமாக பாருங்கள். உங்களுக்கே புரியும்.
– விதை2விருட்சம்
good sathya. video super.