Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி உயர்வு- அமுலுக்கு வருவது எப்போது?

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை, 5.25 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கு, தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம், அரசு கெஜட்டில், கடந்த மாதம், 25ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் எப்போது அமலு க்கு வரும் என, தெரிவிக்கப்பட வில்லை. அமலுக்கு வரும் தேதி யை, அரசு விரைவில் அறிவிக்கு ம் என, எதிர்பார்க்கப் படுகிறது.

வழக்கறிஞர்கள் இறந்தால், அவர் களது குடும்பத்துக்கு வழங்கப்படு ம் சேமநல நிதியை, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது, வழக்கறிஞர்களின் நீண்ட கால கோரி க்கை.

அறிவிப்பு:

“சேமநல நிதி, 5.25 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும்; அதற்காக, ஆண்டு தோறும், 4 கோடி ரூபாய், அரசு வழங்கும்’ என, சென்னை ஐ கோர்ட், 150வது கொண்டாட்ட நிறைவு விழாவில், முதல்வர் ஜெய லலிதா அறிவித்தார். வழக்கறிஞர்களுக் கான சேமநல நிதியத்தில் உறுப்பினர் களாக சேருபவர்களுக்கு தான், இந்த நிதி கிடைக்கும். மனுவில் ஒட்டப்படும், “ஸ்டாம்ப்’ விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், ஏற்கனவே உள்ள டிபாசிட் தொகை மூலம் கிடைக்கும் வட்டி, இவற்றைக் கொண்டே, சேமநல நிதியை, வழக்கறிஞர்களின் குடும்பத்துக்கு, பார் கவுன்சில் வழங்கி வருகிறது. போதிய நிதி இல்லாததால், வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு, சேமநல நிதி வழங்குவதில், பார் கவுன்சிலுக்கு சிரமம் ஏற்பட்டது. திட்டத்தை தொடர்ந்து செயல் படுத்த வேண்டும் என்றால், அரசு உதவ வேண்டும் என, தமிழ்நாடு பார் கவுன் சில் கோரியது. தமிழக முதல்வரையும் நேரில் சந்தித்து வலியுறுத் தினர்.

கட்டணம்:

சேமநல நிதியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்ப கட்ட ணத்தை, 200 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தவும், ஸ்டா ம்ப் மதிப்பை, 10 ரூபாயில் இருந்து, 30 ரூபாயாக உயர்த்தவும், ஆயுள் சந்தாவை, 2,500 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு குறைவான, “பிராக்டீஸ்’ உள்ளவர்க ளுக்கு, ஆண்டு சந்தாவை, 100 ரூபாயில் இருந்து, 500 ஆகவும், 10 ஆண்டுகளுக்கு அதிகமாக உள்ளவர்களுக்கு, 200 ரூபாயில் இரு ந்து, 1,000 ரூபாயாகவும் உயர்த்திக் கொள்ள, அரசு அனுமதித் தது. இதற்கு, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதிச் சட்டத்தில், திருத்தம் கொண்டு வர வேண்டும். கடந்த சட்ட சபை கூட்டத் தொடரி ன் போது, இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, நிறை வேற்றப் பட்டது. இந்த திருத்தம் குறித்து, அரசு கெஜட்டில், கடந்த மாதம், 25ம் தேதி, வெளியிடப்பட்டது. சேமநல நிதி உயர்வு, ஸ்டாம்ப் மதிப்பு உயர்வு மற்றும் சந்தா உயர்வுக்கு வகை செய்யும், சட்டத் திருத்தம், எப்போது அமலுக்கு வரும் என, அரசு கெஜட்டில் குறிப்பிட வில்லை. இதற்கான அறிவிப்பை, அரசு வெளியிடும் என, கூறப்பட்டு உள்ளது. சேமநல நிதி உயர்வு பற்றி, கடந்த ஆண்டு, செப்டம்பரில், அரசாணை வெளியிடப்பட்டது.

எதிர்பார்ப்பு:

அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து, சட்டத் திருத்தம் அமலு க்கு வந்தால், வழக்கறிஞர்க ளின் குடும்பங்கள் பயனடைவர் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், அந்த நிதியாண்டுக்கு உரிய, பாதி தொகையாவது அரசு வழங்கினால் தான், பார் கவுன்சிலுக்கு நிதி பிரச்னை இருக்காது எனவும் கூறப்படு கிறது. இதுகுறித்து, தமிழ் நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வம் கூறுகையில், “வழக்கறிஞர்கள் சேமநல நிதியத்துக்கு, 4 கோடி ரூபாய் வழங்க, முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மாதத்துடன், நிதியாண்டு முடிவதால், 4 கோடி ரூபாயை வழங்கு மாறு, தமிழக அரசுக்கும், ஐகோர்ட்டுக்கும் கடிதம் அனுப்பியுள் ளோம்,” என்றார்.

– நமது தினமலர் நிருபர் –

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: