பகவத்கீதை (Bhagavad Gita) என்பது இந்து சமயத்தினரின் முக் கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதம் என்னும் புனைகதையி ல் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணி யை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவி னர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன் றோர் இருப்பதால் போரி ட மறுத்தான். இதைக்கண்ட அவன் தேரோட்டியான கிருஷ் ணர், தர்மத்திற்காகப் போரிடும்பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக் கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்து வங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதை.
கண்ணனின் ஐந்து வாதங்கள்
கண்ணன் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கும் வாதங்கள் ஐந்து.
வேதாந்தப் பார்வை
சுயதருமப் பார்வை
கருமயோகப் பார்வை
பக்திப் பார்வை
தத்துவப் பார்வை.
வேதாந்த வாதம்
“வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளு டைய செயலல்ல. மூன்று காலத்திலும் எந்தப் பொருள் இல்லை யோ அதற்கு ஒரு காலத்திலும் இருப்பு என்பதில்லை. இருப்பது போல் தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும் தான். மூன்று காலத் திலும் எந்தப் பொருள் உள்ளதோ அதற்கு ஒரு கால த்திலும் இல்லாமை என்பதி ல்லை. புலன்களுக்கு அகப் படாததை இல்லை என்று சொல்லி விடமுடியாது. ஆன்மா என்ற ஒன்றுதான் அழியாத நிரந்தரமான உட்பொருள். அதை யாராலும் அழிக்க முடி யாது. அழிவதாக நமக்கு தெரிவ தெல்லாம் உடம்பு தான். “அர்ச்சுனா, எதிரிகளின் மீதுள்ள பாசத்தை விட்டுப் போர் புரி. அவர்கள் உடம்பில் குடிகொண்டி ருக்கும் ஆன்மா யாரையும் கொல்லாது, அதை யாராலும் கொல்லவும் முடியாது. அதனால் நீ யாருக்காக வும் வருத்தப்பட வேண்டர்ம்” என்கிறார். இந்த முதல் வாதத்தின் அடிப்படையில் தான் முழு கீதையும் செயல்படுகிறது.
சுயதரும வாதம்
“அர்ச்சுனா, உன்னுடய சுயதருமம் க்ஷத்திரியனுக்குகந்த தருமப் போர் தான். இப்போருக்காக நீ பல ஆண்டுகள் தவமிருந்திருக்கி றாய். போரிலிருந்து பின்வாங்கு வது உனக்கு ஒவ்வாத ஒன்று.” ‘சுயதருமமும் உன் சுபாவமும் விதிக்கும் க்ஷ்த்திரிய தருமத்தில் குறை இருந்தாலும் அதைக் கை விடாதே. எந்தச் செய்கை யிலும் நெருப்புக்குப் புகைபோல் ஏதாவ தொரு குறை இருக்கத்தான் செய்கிறது’.(18-48)
‘பிறிதொருவனுடைய கடமையை ஏற்று அதை நன்றாகச் செய்தா லும் அதைவிடச் சிறந்தது தன்னுடைய கடமையில் ஈடுபட்டிருப் பதே. அது முறையாக ஆற்றப்படாவிடினும் அதுவே சிறந்தது’ (3- 35). ‘சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் பாவம் சம்பவிப்பதில்லை’ (18-47).
இந்த சுயதருமப் பார்வை எப்படி மற்ற வாதங்களுடன் ஒழுங்காக வும் தர்க்க ரீதியாகவும் பிணைக்கப் படுகின்றது
கருமயோகப் பார்வை
இது கருமயோகம் என்று பெயர் கொண்ட புரட்சி மிகுந்த உப தேசம். எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடியது. ‘ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமை கள் பல. அவைகளைச் செய் வதில் விருப்போ அல்லது வெறுப்போ ஒரு பிரச்சினை ஆகக் கூடாது. கடமை யைக்கடமைக்காகவே செய்ய வேண் டும். கடமையைச் செய்வதற்குத் தான் உனக்கு அதிகாரம். அவை என்ன பயன் தருகிறதோ, தருமோ என்ற பிரச்சினை உன்னை எந்த விதத்தி லும் பாதிக்கக்
கூடாது. பயனுக்காகவோ அல்லது பயனை விரும்பியோ, வெறு த்தோ செயலில் ஈடுபடுவது உன்னை கட்டுப்படுத்தும். இந்தப் போர் உன்னுடைய கடமைகளில் ஒன்று. இதை ஆசை யோ, நிராசை யோ, கோபமோ தாபமோ இல்லாமல், ஆனால் அலட்சி யமும் இல்லாமல், நன்றாகவே செய்யவேண்டும்’. ‘உனது செயல் களை யெல்லாம் எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னில் நிலைத்த மனதுடன், பயனில் பற்றற்று, அகங்காரத்தை விட்டு, மனக் கொதிப்பில்லாமல் போரிடு’ (3 – 30).
கீதை 2வது அத்தியாயம் 39 வது சுலோகத்திலிருந்து 5வது அத்தி யாயம் முடியும் வரை இதை கருமயோகம் என்ற ஒரு உயரிய யோக நூலாக விவரிக்கப்படுகிறது.
பக்திப் பார்வை
‘எல்லாம் வல்ல இறைவன் நான். என்னை நம்பு. நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை. என்னையன்றி ஓரணுவும் அசையாது.’ 11 வது அத்தியாயத்தில் தன் விசுவ ரூபத்தைக் காட்டிவிட்டு கண் ணன் சொல்கிறான்: ‘இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர் களே. நீ என் கருவி மட்டும் தான்.’ (11–33). ‘உன் செயல்களை யெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி, அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன்.’ என்று கண்ணன் தன்னை ஆண்டவனாகவே வைத்துப் பேசுவதாக இந்தப் பகுதி உள்ளது.இது எல்லாம் ஈசன் செயல் என்ற பக்தி வாசகத்தை ஆதாரமாகக் கொண்டு எடுத்தாளப்பட்ட வாதம் என்கிற கருத்தும் உண்டு.
தத்துவப் பார்வை
பிரகிருதி என்பது மனிதனின் கூடவே பிறந்த சுபாவம். ‘அகங்கார த்தினால் நீ செய்வதாக நினைத்துக் கொண்டு நான் சொல்வதைக் கேளா மல் செயற்படுவாயானால், அழிந்து போவாய்’ (18–58). ‘அகங்காரத்தின் மயக்கத் தினால் நீ போரிட மாட்டேன் என்று நினைப்பது வெற்றுத் தீர்மா னம். அது நடக்காது. உன் பிரகிருதி உன்னை அப்படிச் செய்ய விடாது’ (18 – 59). ‘எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று நீ பின்வாங்குகிறயோ அதையே செய்யும் படி உன் பிரகிருதி (சுபாவம்) உன்னைக் கட்டாயப்படுத்தும்.’ (18- 60). இது பிரகிருதியை ஆதாரமாகக் கொண்டு தத்துவ ரீதியில்
சொல்லப்பட்ட ஐந்தாவது வாதம்.
சரணாகதி என்ற முத்தாய்ப்பு
‘உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தருமம், அதரு மம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்றறிந்து, என்னையே ஒரே புகலிட மாகக் கொண்டு, உன் கடமையைச் செய்.’ (18-66) என்று கடைசியாகக் கண்ணன் சொல்வதாக உள்ளது.
இவ்வைந்து வாதங்களின் பலத்தால் தான் அர்ச்சுனன் போரிடத் தொடங்குகிறான்.
கீதையின் போதனை
போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக எடுத் தாளப்பட்ட ஐந்து வாதங்கள் மனிதர் கள் அனைவருக்கும் கண்ண னால் கூறப்பட்ட போதனைகள் என இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்கு ச் சொல்லப்படுகிறது.
பற்றுகளை அறு. அதற்காக புலனட க்கம் என்ற யோகசாதனை யைச் செய்துகொண்டே இரு.
பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுய நல மற்ற பக்தியைச் செலுத்து.
அம்மெய்ப்பொருளையே புகலிடமாகக்கொள்
யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சம நோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.
கீதா சாரம்
சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
லத்தியா தொன்றை யறத்துறந்தோர் – பத்தியா
னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
கெண்ணும் பொருளா மிசைந்து.
பழமையான உபாயங்களான கர்மயோகத்தாலும், ஞானயோகத் தாலும் பரிசுத்தியடைந்த தம் நெஞ்சில், (பகவத் தொண்டு தவிர) வேறொன்றை விரும்பாது, மிகவும் வைராக்யமுடையவர்கள், (கர்மஜ் ஞானவைராக்யங்களாலே யுண்டான) பக்தி யோகத்தாலே அடையும் பரப்ரஹ்மமாகிற நாராய ணனே பகவத்கீதைக்கு அறி வாளிகள் அங்கீகரித்து எண்ணும் பொருளாவான்.
– பகவத் கீதை வெண்பாவிலிருந்து.
கீதைக்கு உரைகள் பல
19ம் நூற்றாண்டு பகவத்கீதை எழுத்துப்பிரதி
பகவத கீதைக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். ஆதி சங்கரர், இராமா னுஜர், மத்வர் ஆகிய மூன்று இந்து சமயப் பெரியோர் களும், நிம்பர்க்கர், வல்லபர், ஞானேசுவரர் போன்றவர்களும் எழுதிய பழைய உரைகளே பல உரைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் சுவாமி சின்மயானந்தா, பக்திவேதாந்த ஸ்வாமி, சர்வபள்ளி ராதா கிருஷ்ணன், சுவாமி சிவானந்தர், சுவாமி அரவிந்தர், மகாத்மா காந்தி, வினோ பா பாவே, அன்னி பெசண்ட் அம்மையார், சுவாமி சித்பவானந்தர் போன்றவர்களும் மேலும் சிலரும் சிறந்த உரைகளை எழுதியிரு க்கின்றனர். உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
பிற கீதைகள்
கீதை என்னும் சொல் பாடப்பட்டது அல்லது உபதேசிக்கப்பட்டது என்ற பொருள் கொண்டது. கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத் தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற இன்னும் பல கீதைகள் உள்ளன. அவை:
அவதூத கீதை
உத்தர கீதை
பிக்ஷு கீதை
அஷ்டாவக்ர கீதை
ராம கீதை
சுருதி கீதை
குரு கீதை
சிவகீதை
ருசியாவில் சர்ச்சை
உருசியாவின் சைபீரியாவில் உள்ள டோம்ஸ்க் என்ற நகர நீதி மன்றத்தில் பகவத் கீதை “தீவிரவாத” நூலாகக் கருதப்பட்டு
தடை செய்யப்பட வேண்டும் என காவல் துறை வழக்கு பதிந்தது. இஸ்கான் நிறுவனர் பக்தி வேதாந்த சுவாமி பிரபுபா தாவினால் எழுதப்பட்ட நூலின் உருசிய மொழி பெயர்ப்பு பெறப்பட்டு இந்த இந்துமத நூல் “சமூக வேற்றுமையை ” வளர்ப்பதாக உருசியா எங்கும் தீவிரவாத நூல் என்று தடை செய்ய வேண்டும் என சூன் மாதத்தில் இந்த வழக்கு பதியப்பட்டது. வழக்கைப் பதிவு செய்த நகர நீதிமன்றம் இதனை டோம்ஸ்க் மாநில பல்கலைக் கழக த்திற்கு “ஆராய்வதற்காக” அக்டோபர் 25 அன்று அனுப்பியது. திசம்பர் 28, 2011 அன்று இம்மொழிபெயர்ப்பை தடை செய்யமுடி யாதென்று கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக அந்நாட்டின் மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ப்பட்டது. ஆனால் அந்த நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்து விட்டது.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து . . .