Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம் – தந்தை பெரியார்

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட் பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை (1.6.50)யில் பெரியார் 

முட்டாள்தனம் 

இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா?- ‘விடுதலை’(14.11.1972)யில் பெரியார்

ஹிந்தி இருக்கட்டும்

இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை. அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோ ம். சில காரியத்திற்காக இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமா னாலும் கட்டாயமாக்குங்கள். ஆனால் குழந்தைகளுக்கு வேண் டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமா னால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.- ‘விடுத லை’(07.10.1948)யில் பெரியார்

சிலப்பதிகாரம் ஒரு புளுகு 

….அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா ? … இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கி யம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? – விடுதலை (28.3.60)யில் பெரியார்

சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி 

இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப் பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய்கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப் படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.- விடுதலை (28.7.51)யில் பெரியார்

முக்கொலை 

போதாக்குறைக்கு ‘பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் ‘நாங்கள் பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், ‘தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறிவிடுவோம்’ என்று சொல்கி றார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளை யெல்லாம் கல்லூரியிலும் கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்கு கிறோம் என்றுதானே பொருள்? இப்படி யான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்த தாகத்தானே முடியும்? இதுதானா இந்தச் சிப்பாய்கள் வேலை? – விடுதலை (5.4.67)யில் பெரியார்

தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது 

தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில் லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்ப தை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனு பவப் புலவர் பாடியுள்ளார்.–தந்தை பெரியார் விடுதலை (27.11.43) யில்..

தமிழின் பெயரால் பிழைப்பு 

நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக் காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.-தந்தை பெரியார் விடு தலை (16.3.67)

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் .

..தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர் வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால் தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்ற வள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு – காரிய த்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும் படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின் றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப்பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க் கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைப வர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப் பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.- தந்தை பெரியார் ‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில்

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன்? 

சாதாரணமாகப் பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். – தந்தை பெரியார் ‘அறிவு விருந்து’ நூலில்

தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது? 

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக் கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ்வேண்டும்.’ இதுதானா? அய் யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர் க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல் களில் எதை எடுத்துக்கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந் த தமிழ் ‘சுவை’ அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க் கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டு பிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன். – தந்தை பெரியார்

தொல்காப்பியன் மாபெரும் துரோகி

தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக் கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக் காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும்’ நூலில்

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன? 

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழி யை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலி ருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கு ம் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால்பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்ப தால், பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லா மல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.- தந்தை பெரியார்

பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம் 

அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.- தந்தை பெரியார்

தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் 

தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான் களாக.. தமிழ்ப் புலவராகவே வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்ட தால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோ டு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண் டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள் வித்துவான் கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள்வரை இன்றைக்கும் அவர் களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவ தற்கில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள்.

தமிழால் என்ன நன்மை? 

தமிழ் தோன்றிய 3000-4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப் பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப் படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக் கிய இலக்கியங்களினால் இதுவரை தமிழனுக்கு ஏற்படுப்படுத் தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை 

இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபி த்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர்கூட சிந்தித்துப் பேசுவதி ல்லை. ‘வாய் இருக்கிறது; எதையாவது பேசி வயிறை வளர்ப் போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத் தையோ பற்றி சிறிதுகூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், ‘தமிழ் மொ ழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாகய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணி யாகட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனவாயா?

EVR ON RESERVATION:

ந்த மதத்துக்கும், எந்த ஜாதிக்கும் சலுகை கூடாது

மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமா கவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் –அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ, மதத்தி ற்கென்றோ எவ்விதச் சலுகையோ உயர்வு, தாழ்வோ, அந்தஸ் தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைக ளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகிய வை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.- தந்தை பெரியார்

நன்றி – தோமோ வழி

5 Comments

 • Kumaran

  According to me Periyar, has expressed his views. I didn’t like his views about Tamil Language, but regarding Reservations, I had a great interest for his views.

  At present the Indian Government should follow this strictly all over India.

 • த.செந்தில் குமார்

  கிறுக்கு தனமா அந்த ஆளு உளறினத்தை எல்லாம் ஒரு தத்துவமா நினைக்கிற முட்டாள் கூட்டம். தாய் சக்தி இல்லாவிட்டால் தாயை பலப்படுத்த வேண்டுமே ஒழிய, வேறு ஒரு தாயை நோக்கி ஓடலாமா ? அறிவு வேண்டாம்…

 • Sugan Subramanian

  EVR was thrown out of Kerala when he created riots in the name of alayapravesam. EVR and his followers need to be thrown out of Tamil Nadu. These weeds have taken root in the state for way too long. Upper caste atrocities need to be condemned. That should not mean it should become divide Tamil Nadu from the fabric of India. All societies in India are intertwined. It needs to be celebrated. Tamil needs to be recognized as the mother of all indian languages. EVR and his cronies have promoted their agenda of sucking up to white people, divided the population by caste and filled their coffers with looted money. Have done absolutely nothing for adhivasis. We need a chance in the state. It may not have to be a saffron party; but it cannot be any form of black and red.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: