Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சரித்திர நாயகன் ‘நடிகவேள்’ எம்.ஆர். ராதா!

நாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டா க்கியவர் எம்.ஆர்.ராதா. சினிமாவில் வில்லனாகவும், நகைச் சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகரா கவும் கொடிகட்டிப் பறந்தவர். “நடிக வேள்” என்று பட்டம் பெற்றவர். எம்.ஆர். ராதாவின் சொந்த ஊர் சென்னைதான்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக் கன் தெருவில் வசித்த ராஜ கோபால் நாயுடு- ராஜாம்பாள் தம்பதிகளின் 2-வது மகனாக 1908-ல் ராதா பிறந்தார். ராதா வின் அண்ணன் பெயர் எம்.ஆர். ஜானகிராமன். தம்பி பெயர் எம்.ஆர். பாப் பா. ராதாவின் தந்தை, உலகப்போரில் பணி யாற்றியவர். ரஷிய எல்லையில் போர் புரியும் போது மரணம் அடைந்தார்.
நாடக நடிகர்
எம்.ஆர்.ராதா மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தார். நாடகத்தில் நடிக்கும் ஆசை சிறுவயதிலேயே வந்துவிட்டதால், மேற்கொண்டு படிக்கவில்லை. “டப்பி” ரங்க சாமி நாயுடு கம்பெனி, சாமண் ணா கம் பெனி, ஜெகந்நாத அய்யர் கம்பெனி என்று பல்வேறு நாடகக் குழுக்களில் ராதா நடித் தார்.
 
நவாப் ராஜமாணிக்கம், சி.எஸ்.ஜெய ராமன், கே.சாரங்கபாணி, யதார்த் தம் பொன்னுசாமி பிள்ளை , பி.டி. சம்பந்தம் ஆகியோரும், இவருடன் நாடகத்தில் நடித்து வந்தனர். நடிப்புடன், கார் டிரைவர், மெக்கானிக், எலெக்ட்ரீஷியன் ஆகிய வேலைகளையும் ராதா கற்றுக்கொண்டார்.

ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமி நாதன் என்பவர் அவரை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோண கிரி என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார். அதன் பிறகு 1942 வரை ஐந்து படங்கள் நடித்த ராதா அதன் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு நாடகத்துறைக்கே திரும் பினார்.

பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954 ல் தனது மிகுவெற்றி நாடகமான ரத்தக் கண்ணீரின் திரை வெளியீடான ரத்தக் கண்ணீர் படத்தின்மூலம் திரைப்படத் துறை க்குத் திரும்பினார். கதாநாயக னாக திரைத் துறையில் நுழைந்த ராதா அதன் பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங் கள் ஏற்று நடிக்க த்தொடங்கினார். 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதை யுமே விரும்பினார். ராதா வின் நாடகங்களில் புகழ்பெற்றது ‘இழந்தகாதல்’ என்னும் நாடக ம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்பு ப் பலராலும் பாராட்டப்பட்டது.

ரத்தக்கண்ணீர்
பிறகு சொந்தத்தில் நாடகக்கம்பெனி தொடங்கினார். “ரத்தக் கண்ணீர்”, “தூக்கு மேடை”, “லட்சுமி காந்தன்”, “பம்பாய் மெயில்”, “விமலா”, “விதவையின் கண்ணீர்”, “நியூஸ் பேப்பர்”, “தசா வதாரம்”, “போர் வாள்” போன்ற நாடகங்களை நடத்தினார். இவற் றில் மிகவும் புகழ் பெற்றது “ரத்தக்கண்ணீர்”.
 
3,500 தடவை மேடை ஏறிய நாடகம் இது. இதில், செய்தித்தாளை ராதா படிக்கும் ஒரு சீன் வரும். அன்றாடம் வரும் செய்தித்தாளை கையில் வைத்துக்கொண்டு, அதில் வரும் செய்திகளைப் படித்து “கமெண்ட்” அடிப்பார்.
 
இதற்காகவே, ரத்தக்கண்ணீர் நாடக த்தை பலமுறை பார்த்தவர்கள் ஏராளம். ராதா நாடகங்களில் பிரமா ண்டமான காட்சி ஜோட னைகள், சீன்- செட்டிங்குகள் எதுவும் கிடையாது.
 
ஒரு கறுப்புத்திரை; ஒரு வெள்ளைத் திரை. இதை வைத்துக் கொ ண்டே, தன் நடிப்பு ஆற்றலைக் கொண்டு, நாடகத்தை வெற்றி கரமாக நடத்தி விடுவார்.
 
ராமாயணமா? கீமாயணமா?
 
ஈ.வெ.ரா.பெரியார் மீதும், அவருடைய கொள்கைகள் மீதும் மிகு ந்த பற்று உடையவர், ராதா. தன் நாடகங் கள் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார். “ராமன் ஒரு குடிகாரன். மாமி சம் சாப்பிடுகிறவன்” என்று சித்தரிக்கும் ராமாயணத்தை ராதா நடத் தினார். அதை “கீமாயணம்” என்று பிறர் வர்ணித்தபோது, “நான் நடத்துவதுதான் உண்மையான ராமா யணம். ராமனை நல்லவனாகச் சித்தரிப்ப து தான் கீமாயணம்” என்று கூறுவார், ராதா.
 
நாடகத்தில் ராதாதான் ராமர்! ஒரு கையில் மதுக்கலயம், இன்னொரு கையில் மாமிசம்! நையாண்டி வசனங் கள் ஏராளம்.
 
தடை
 
ராதாவின் 6 நாடகங்கள் தடை செய்யப்பட்டு இருந்தன. “ஆந்திர கேசரி” பிரகாசம் முதல்- மந்திரியாக இருந்தபோது “போர் வாள்” என்ற நாடகத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடை யை மீறி நாடகத்தை நடத்தி யதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டா ர்.
 
விடுதலையான பிறகு நாடக த்தின் பெயரை “மகாத்மா தொண்டன்”, “மலையாள கணபதி” என்றுபெயர் மாற்றி நடித்தார். கோவையில் இவரு டைய ராமாயண நாடகத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் “லட்சுமிகாந்தன்” என்ற இன்னொரு நாடகத்தை நடத்தி னார்.
 
அதில் ராமாயண நாடகத்தின் ஒரு காட்சியை தந்திரமாக புகுத்தி னார். ராமாயணம் நாடகத்தை கீமாயண மாக நடத்தியதற்காக காமராஜர் ஆட்சி காலத்தில் 16 நாட்கள் ஜெயில் தண்டனை அடைந்தார்.
 
காமராஜர் கரத்தால் பொன்னாடை
 
விடுதலையானபின்பு எம்.ஆர்.ராதாவுக்கு மக்கள் கமிட்டி சார்பில் பொன்னாடை போர்த்தும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு காம ராஜர் தலைமை தாங்க வேண் டும் என்று எம்.ஆர்.ராதா விரும் பினார். காமராஜர் மீது அவர் அதிக மதிப்பு வைத்திருந்தார். அவர் விருப்பப்படி விழாவுக்கு காமராஜர் தலைமை தாங்கி பொன் னாடை போர்த்தி னார்.
தஞ்சையில் “தூக்கு மேடை” நாட கத்தில் எம்.ஆர்.ராதாவுடன் தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி யும் பின்னர் “போர்வாள்” நாடகத்தில் ஈ.வெ.கி.சம்பத்தும் நடித்து இருக்கிறார்கள். ஈரோட்டில் “விதவையின் கண்ணீர்” நாடகம் நடந்தபோது அந்த நாடகத்தை அண்ணா பார்த்து பாராட்டினார்.
 
திருச்சியில் “போர்வாள்” என்னும் நாடகம் நடத்தியபோது ராதாவுக்கு “நடிகவேள்” என்ற பட்டத்தை பட்டுக்கோட்டை அழகிரி வழங்கினார். 1962-ல் “கலைமாமணி” பட்டம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினரால் வழங்கப்பட்டது.
சினிமா எம்.ஆர்.ராதா,
 
முதன் முதலாக 1937-ல், “ராஜசேகரன்” என்ற படத்தில் நடித்தார். இதில், மாடியில் இருந்து, கீழே குதிரை மீது குதிக்கும் காட்சியில் நடித்தபோது, கால் எலும்பு முறிந்துவிட்டது. குணம் அடைந்த பிறகு “பம்பாய் மெயில்” என்ற படத்தில் நடித்தார். பிறகு சினிமாவி ல் இருந்து ஒதுங்கி, நாடகங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
 
“பராசக்தி” படத்தைத் தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார், “ரத்தக் கண்ணீர்” நாடகத்தை படமாகத் தயாரித் தார். இதில் எம். ஆர்.ராதா, எஸ்.எஸ். ராஜே ந்திர ன், ஸ்ரீரஞ்சனி, எம்.என் . ராஜம் ஆகி யோர் நடித்தனர். 1954-ல் வெளியான இந்தப்படம் பெரிய வெற்றி பெற்றும், பட அதிபர்கள் யாரும் ராதாவை அணுக வில்லை.
 
“அவரை சமாளிக்க முடியுமா,
 
ரத்தக்கண்ணீர் போல அவர் வேறு வேடத்தில் சிறப்பாக நடிக்க முடியுமா?” என்றெல்லாம் யோசித்து, அவரை வைத்து படம் தயாரிக்கத் தயங்கினார்கள். இதுபற்றி எல்லாம் ராதா கவலை ப்படாமல், நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார்.
 
ஏ.பி.நாகராஜன்
மூன்று ஆண்டுகளுக்குப்பின், ஏ.பி.நாகராஜன், வி.கே. ராம சாமி ஆகியோரை பங்குதாரர் களாகக் கொண்ட லட்சுமி பிக்சர்ஸ், எம். ஆர்.ராதாவை கதாநாயகனாக நடிக்க வைத் து “நல்ல இடத்து சம்பந்தம்” என்ற படத்தைத் தயாரித்தது. இதில் ராதாவுக்கு ஜோடி யாக சவுகார் ஜானகி நடித்தார்.
 
படத்தை கே.சோமு டைரக்ட் செய்தார். படம் மூன்றே வாரங்க ளில் தயாராகி, 16-2-1958-ல் ரிலீஸ் ஆகியது. குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம், வெற்றிகரமாக ஓடியது. “மாறுபட்ட வேடங்களில் ராதா சிறப்பாக நடிப்பார். குறுகிய காலத்தில் படத் தைத் தயாரிக்க ஒத்துழைப்பு தருவார்” என்ற நம்பிக்கை பட அதிபர்களிடையே ஏற்பட்டது. போட்டி போட்டுக்கொண்டு அவரை ஒப்பந்தம் செய்தனர்.
 
பாகப் பிரிவினை
1959-ல், சிவாஜிகணேசனுடன் எம்.ஆர். ராதா இணைந்து நடித்த “பாகப் பிரிவி னை” வெளிவந்தது. படம் மகத்தான வெற்றி பெற்ற துடன், எம்.ஆர். ராதாவின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை யை ஏற்படுத்தியது. சிவாஜியுடனும், எம்.ஜி. ஆருடனும் இணைந்து ஏராளமான படங்க ளில் ராதா நடித்தார். குறுகிய காலத்தில் 150 படங்களில் நடித்து முடித்தார்.
7 ஆண்டு ஜெயில்
1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலை 5 மணி அளவில் எம். ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி. ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசி யுள்ளனர்.[1] இந்த சந்திப்பின்போது எம். ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றி ப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந் தத்துப்பாக்கிச் சூட்டைய டுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன் றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப் பட்டது.ஒரு பட அதிபரை கால்ஷீட் விஷயத்தில் எம்.ஜி.ஆர். இழுத்த‍டித் த‍தாகவும் அது பற்றிய பஞ்சாயத்தில் ஏற்பட்ட‍ வாக்குவா தத்தில் எம்.ஆர். ராதாவை எம்.ஜி.ஆர் சுட முயன்ற தாகவும், அப்பொழுது எம்.ஆர். ராதா சுதாரித் துக்கொண்டு எம்.ஜி.ஆரை சுட்ட‍தாகவும் வெளியான‌ செய்தியை உறுதி படுத்த‍பட‌வில்லை.

 
மீண்டும் சினிமா
 
விடுதலையாகி வெளிவந்ததும், மு.க.முத்துவுடன் “சமையல்கா ரன்” படத்தில் நடித்தார். தொடர்ந்து “டாக்சி டிரைவர்”, “பஞ்சாமிர் தம்”, “வண்டிக்காரன் மகன்”, “ஆடு பாம்பே” ஆகிய படங்களில் நடித்தார். மேலும் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
 
1979செப்டம்பரில் திருச்சி சங்கிலி யாண்டபுரத்தில் உள்ள வீட்டில் ராதா தங்கியிருந்தார். அந்த சமயத்தில் அவர் மஞ்சள் காமா லை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத் திரியில் அனு மதிக்கப் பட்டார். சிகிச்சை பலன் இன்றி, 17/9/1979 காலை, 71-வது வயதி ல் ராதா காலமானார்.
 
எம்.ஆர்.ராதா இளமைப்பருவம் முதலே தந்தை பெரியாரின் கொ ள்கையில் ஆழ்ந்த பற்றும், பிடிப்பும் கொண்டவர். அதனால் தான் என்னவோ தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதி மரணம் அடைந்தார்.
 
குடும்பம்
அந்தக் காலத்தில் நாடக நடிகர்க ளுக்கு யார் பெண் தருவது. மெக் கானிக் என்று தனது பார்ட் டைம் வேலையை சொல்லி முதல் மனைவி சரசுவதியை திருமணம் செய்தார் ராதா. சிறிது காலத் துக்குப்பின் சரசுவதியின் தங்கை தனலட்சுமியையும் மண ந்து கொண்டார். மூத்த மகனான எம்.ஆர். ஆர். வாசு, சில படங்க ளில் நடித்தார். இளம் வயதிலேயே காலமானார்.
 
அடுத்த மகன் ராதாரவி இப் போது திரை உலகில் சிறந்த குணச் சித்திர நடிகராக விளங் குகிறார். ராதா வுக்கு ரஷியா, ராணி, ரதி கலா என்ற மகள்கள் உள்ளனர்.
 
ராதாவின் மூன்றாவது மனைவி கீதா. இவருடைய மகள் ராதிகா, சினிமாவிலும், சின்னத்திரையிலும் சாதனைகள் புரிந்து வருகி றார். ராதிகாவின் தங்கை நிரோஷாவும் நடிகையாவார்.
ராதா த‌னது இறுதி மூச்சுவரை  பின் பற்றியது
இறுதி மூச்சுவரை ராதா பின்பற்றியது பெரியார். இந்தியாவின் சிறந்த தலைவர் யார் என்று கேட்டால் பெரியார் என்றே சொல்வார் ராதா. அதே நேரம் தி.க. உட்பட எதிலும் உறுப்பினர் அல்ல ராதா. இறுதி வரை சுதந்திர பறவையாக வாழ்ந்தவர் அவர்.
ராதா கலகக்காரரா?
ராதா கலகக்காரரா என்றால் இல்லை. வாழ்வதற்காக கூழை கும்பிடு, குறுக்குவழி என்றிருப்பவர்கள் மத்தியில், தன்மானத்தை இழக்காத ராதாவின் சுயமரியாதை வாழ்க்கை மற்றவர்களுக்கு கலகமாக தோன்றி யதில் வியப்பில்லை.
ராதா உயிருடன் இருந்தபோது பத்ரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி
ஒருமுறை ராதாவிடம் பேட்டி எடுக்கவந்த பத்திரிகையாளர் மாடி யிலிருந்து இறங்கிய அவரின் மனைவியைப் புகைப்படமெடுக்க முயன்றிருக்கிறார். உடனே ராதா, ‘நான் தான் சினிமாக்காரன், பப்ளிக் புராபர்ட்டி. என் பொண்டாட்டியை ஏன் படமெடுக்கிறே’ என்று மறுத்துவிட்டாராம்.இனி அவரது சில நேர்காணல்களிலிருந்து…

கேள்வி : இப்போது நடிகர்களுக்குப் பொன் னாடை போர்த்தும் வழக்கம் அதிகமாகிவி ட்டதே. இதுபற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?

ராதா : பொன்னாடை போர்த்தவேண்டியது பிணத்திற்குத்தான்.

கே : நீங்கள் எதில் அதிகம் இன்பம் காண்கிறீர்கள்?

ராதா : எதிர்ப்பில்தான். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை எதிர்த்து ஒரு தோற்றத்தைத் தருவதுதான் என்னுடைய பழக்கம்.

கே : உங்களுக்குப் பாடத்தெரியுமா?

ராதா : நன்றாகத் தெரியும். தியாகராஜர் கீர்த்தனைகளைகளில் 200 பாடல்களுக்கு மெட்டுடன் பாடத்தெரியும். ஆனால் பாடல் களி னால்தான் நாடகம் நடக்கும் என்பதை மாற்றவே நான் பாடுவதி ல்லை.

– தென்றல்திரை – 01.02.1956

கே : நீங்கள் ஏன் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை?

ராதா : நடிகர்கள் தேயிலைத்தோட்டக் கூலிகள் போல நடத்தப்ப ட்டனர். போதிய சவுகரியங்கள் இல்லை. முடிவாக நான் படவுல கை அடியோடு வெறுக்க மாடர்ன் தியேட்டர்தான் காரணம். ஒரு நடிகன் நடிகையோடு பேசினால் கட்டி வைத்து அடிப்பார்கள். இந் நிலை எனக்கு மிக்க வெறுப்பையும் அவமானத்தையும் அளித்தது.

– சினிமா மெயில் 20.01.1957

சில வாசகர் கேள்விகளும் ராதாவின் பதில் களும்

கே: திரையில் தங்களைப் பார்த்தால் பயந்து நடுங்குகிறேன். நேரி ல் எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் என் அச்சம் நீங்குமா, அதிக மாகுமா?

ராதா : தங்கள் மனதின் பலவீனத்தைப் பொறுத்தது.

கே : நேரு, பெரியார், ராஜாஜி, அண்ணாத்துரை இவர்களில் பொது ப்படையான பொருளைக் கருத்தாழத்தோடு பேசுபவர்களை வரி சைப்படுத்தவும்.

ராதா : பெரியார்தான். வரிசை தேவையில்லை.

கே: கட்சிவிட்டுக் கட்சிமாறும் ‘பச்சோந்திகள்’ பற்றித் தங்கள் கரு த்து என்ன?

ராதா : பச்சோந்தி

கே : நான் எங்கள் ஊரில் தங்கள் பெயரில் மன்றம் அமைக்க முய ற்சி செய்தேன். ஆனால் எங்கள் ஊர்த் திராவிடர்கழகப் பிரமுகர் ஒருவர் அவர் பெயரில் மன்றம் அமைவதை விரும்பமாட்டார் என்கிறார். இது உண்மைதானா?

ராதா : உண்மைதான்.

கே : எல்லாப் படங்களிலும் வில்லனாகவும் கொடூரமாகவும் காட்சியளிக்கிறீர்களே, இல்லத்தில் மனைவி மக்களோடும் சுற்ற த்தோடும் எப்படிப் பழகுவீர்கள் என்பதை அறிய ஆவல்.

ராதா : அது தங்களுக்குத் தேவையில்லை.

கே: அண்ணே, உங்களை எல்லோரும் கஞ்ச ன்னு சொல்றாங்க ளே, உண்மையா?

ராதா:திருடன், முடிச்சவிழ்க்கி, அயோக்கியன் ஆகியவர்களுக்கு நான் கஞ்சன்.

கே : தாங்கள் இந்த நாட்டின் முதன்மந்திரியானால்..?

ராதா : இதுமாதிரிக் கேள்விகேட்பவர்களைத் தூக்கில் போட சட்ட ம் கொண்டுவருவேன்.

– தமிழ்நாடு – ஜனவரி 1961.

(பல்வேறு இணையங்களில் இருந்து . . . )

One Comment

  • Kumaran

    MR Radha is great. During his ages, it is really great to be an actor like this. He has set an example for today’s actors. But no actor’s today can live a life like MR Radha.

    One more thing, I heard about him is that he possessed a very big car and a politician had requested his car for a day and his answer a big No.

    Can V2V bring about these stories that are not told in this article.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: