தி.மு.க., விடுத்த மிரட்டலுக்கு காங்கிரஸ் கட்சி பணிந்தது. இலங் கை தமிழர் பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் தீர்மானம் கொ ண்டு வர உள்ளது.
இலங்கை தமிழர் பிரச்னையில் பார்லிமென்டில் தீர்மானம் கொண் டு வர வேண்டும், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., மத்திய அரசுக்கு மிரட் டல் விடுத்தது. இது குறித்து நேற்று கருணாநிதியை மத்திய அமைச்சர்க ள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்நிலையி்ல், இன்று மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கருணாநிதி அறிவித்தார். வரும் 21ம் தேதிக்குள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வந்தால், தி.மு. க.,வின் முடிவை மறுபரிசீலனை செய்வோம் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தி.மு.க.,வின் மிரட்டலுக்கு காங்கிரஸ் கட்சி பணிந் தது. இலங்கை விவகாரம் தொடர்பாக ஒரு தீர்மானத்தை பார்லி மென்டில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளன. தி.மு.க.,வின் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்த பின்னர், அவசரமாக கூடிய காங்கிரஸ் காரிய கமீட்டி கூட்டத்தில், தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. எந்த மாதிரியான தீர்மானம் என அறிவிக்கப்படவில்லை.
லோக்சபா ஒத்திவைப்பு:முன்னதாக, இலங்கை தமிழர் விவகாரத் தில், தி.மு.க., அ.தி.மு.க., உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பியதா ல் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.. அ.தி,மு.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையத்திற்கு சென்று, ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன் றத்தில் நிறுத்த வேண்டும். ஐ.நா., மனித உரிமை சபையில் இந்தியா நடந்து கொண்ட விதம் கண்டனத்திற்க்குரியது எனக்கூறி கோஷங் கள் எழுப்பினர். சபாநாயகர் சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வி யடைந்ததால், அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.
நண்பகல் 12 மணிக்கு லோக்சபா கூடியபோது, இலங்கை தமிழர் பிரசனை தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. அ.தி.மு.க., உறுப்பி னர் தம்பிதுரை பேசுகையில், இலங்கையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்,அமெரிக்க தீர்மானத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி னார்.
தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. மாணவர் களின் போராட்டத்தினால் தமிழகம் பற்றி எரிகிறது. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தம் செய் ய வேண்டும். திருத்தம் கொண்டு வருவதில் அரசின் நிலை என்ன என்பதை விளக்க வேண்டும். ஐ.நா., கவுன்சிலில் இந்திய அரசின் நிலை ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.
இதன் பின்னர் லோக்சபாவில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியதும், சுமூகமாக அவை அலுவல்கள் நடைபெற்றன.
ராஜ்யசபா ஒத்திவைப்பு: ராஜ்ய சபாவிலும் அ.தி.மு.க., மற்றும் தி.மு. க., உறுப்பினர்கள் இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக கோஷங் கள் எழுப்பினர். அவையின் மையத்திற்கு சென்று கோஷங்கள் எழுப் பினர். அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி, உறுப்பினர்களை இருக் கையில் சென்று அமருமாறு கூறினார்.இருந்தும் அவையில் கோஷ ங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து ராஜ்யசபா 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோதும், கோஷங்கள் தொடர்ந்ததால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.அவை மீண்டும் கூடிய போது இலங்கை தமிழர் விவகாரத்தில் எதிர்க்கட்சி கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
thanks to dinamalar
m m m m m m m m m m m ……………….