Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடனடிச் சக்தி தரும் ஆரோக்கியமான எளிய 5 உணவு வகைகள்

நம் உடலில் சோர்வு ஏற்பட்டால் உடனே ஒரு கப் காஃபி அல்லது டீ அல்லது குளிர்பானம் அல்லது பிஸ்க ட்,  கேட் என்று சாப்பிடுகி றோம்.  இதில் நமக்கு அந்த நேரத்துக்கு மட்டும் தான் உடலுக்கு தெம்பை தரும். அந்நாள் முழு வதும் ஆரோக்கியமும் அதேநேரம் உனடி ச் சக்தி தரும் எளிய 5 உணவுகள் உணடு. அதனை பற்றி பார்ப்போம்..

முதல்உணவு:

ஓட்ஸ்:

தினமும் ஒருகப் ஓட்ஸ் சாப்பிடுங் கள். ஒரு கப் ஓட்ஸில் 150 கலோரி உடனே  உடலுக்குகிடைக்கிறது.

உடலுக்கு வலிமை தரும் ஓட்ஸில் பொட்டாசியமும், துத்த நாகமும் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும் ‘அவினின்’ என்ற இரசாயனப்பொ ரு ளும் இருக்கிறது.  இதனால் உடலும் உள்ளமும் உடனடியாகச் சக்தி பெருகிறது.

இந்த ஓட்ணினை காலை 11 மணிக்கும் மாலையில் 3 மணி அள வில் கஞ்சியாக செய்து சாப்பிடலாம்.

வைட்டமின் “சி” நிறைந்த உணவுகள்:

முதுகுத் தண்டிலும் இரத்த அணுக்களிலும் வைட்டமின் சி அதிகம் கலந்துள்ளது.  நம் உடலில் எல்லாத் திசுக்களிலும் இந்த “சி” உள்ளது.

உடல்துன்பத்தையும் மனத் துன்பத் தை யும் ஒருவர் தாங்கிக் கொ ண்டு உழைத்தால் அவர் உடலில் வைட்ட மின் “சி” சரியான அளவில் இருக்கிற து என்று அர்த்தம்.

நம் உடலை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்கிறது வைட்ட மின் “சி”

இதனை நாம் ஆரஞ்சுசாறு, கொய்யா, நெல்லிக்காய் முதலிய வற்றிலி ருந்து எளிதாகப் பெறலாம். இதில் “சி” அதிகம் உள்ளது.

இது தவிர தினமும் ஒரு கப் கொண்டைக் கடலை, அல்ல து கடலை பருப்பு சுண்டல் சாப்பிடலாம்.

காலையில் இட்லி, தோசை க்கு சட்னியாக பச்ச மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடலாம். இதிலும் வைட்டமின் “சி” இருக்கிறது.

நீரழிவு நோயாளிகள் ஊற வைத்த கொ ண்ட கடலையினை வேக வைத்து தினமு ம் சாப்பிட்டால் எளிதாக உடலுக்கு சக்தி கிடைக் கும்.

முட்டை கோஸ் சூப், பாசிப் பருப்பு பாயா சம், முளை விட்ட பச்ச பயிறு சாலட் இதி லும் அதிகமாக வைட்டமின் “சி” அதிகமாக இருக்கு.

தினமும் காலைசூப், ஆரஞ்சுஜூஸ், சுண்டல் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடியாகசக்திகிடைக்கிறது.

தண்ணீர்:

தண்ணீரில் எந்த சத்துக்களோ அல்லது எந்த கலோரிகளோ எதுவும் இல்லை.. ஆனால் அரை டம்ளர் தண்ணீர் உடலில் குறைந்தாலு ம் மன திலும், உடலிலும் சோர்வு ஏற்ப்படும்..

தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக் கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ் சு என்று பழங்களாகவும் சாப்பிடலா ம். அவற்றில் 70 சதவிகிதம் வரை தண்ணீர் தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது.

தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயி ற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடங் களையும் சுத்தப் படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கிவிடும்

ஒருபக்கம் தண்ணீர் குடித்துவிட்டு, இன்னொ ரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப் பழக் கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.

பார்லி தண்ணீர்:

பார்லி அரிசியில் மூளைக்கு புத்துணர்வு தரும் பாஸ்பரஸ் உப்பு அதிக மாக இருக் கிறது. நரம்புகளைப் பலப்படுத்தும் “பி” வட்ட மினும் உள்ளது. பார்லியைக் கொதி க்க வைத்து வடிகட்டி அந்த தண்ணீரை பாட்டிலில் வைத்து உடலில் சோர்வு ஏற் படும்பொழுது ஒரு டம்ளட் பார்லி தண்ணீர் குடித்தால் இரத்தத்தில் கலந்த வுடன் உடலின் குளூக்கோஸ் அளவு உயர்ந்து ஞாபகசக்தி அதிகரி க்கும்… மிகவும் துடிப்புது உற்சாகத்துடன் வேலை செய்வதனை நீங்களே உணர்விகள்

ராகி மாவு:

இதில் கால்சியம் அதிகம். .. இதனை தினமும் ஒரு வேலை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சக்தியினை இது தரு கிறது… கடின மான உழைப்பாளிகள் காலையிலும் மாலையிலும் 2 கப் கேழ் வரகுக் கஞ்சி, அல்லது 2 கேழ்வரகு ரொட்டியோ சாப்பி டுவதால் குறைந்தது 5 மணி நேரம் சுறுசுறுப்பாக இருக்கலாம். உடலில் உள்ள நரம்பு மண்ட லத்தை இதில் உள்ள கால்சியம் புது ப்பித்து விடுகிறது

(ஆரோக்கிய உணவு முறைகள் என்ற நூலில் இருந்து எடுத்த தகவல்)

என் இனிய இல்ல‍த்தில் . . .

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: