கூகுள் +ல் நண்பர்களுக்குள் நடந்த உரையாடல் ஒன்றை இங்கு நான், விதை2விருட்சம் மூலமாக பகிர்கிறேன்.
AAA – வணக்கம் என்ன விசேஷம்?
BBB – திமுக கூட்டணியிலிருந்து விலகியது தான் விசேஷம்.
என்று பதிலளித்திருந்தார்
இதில் நான் (விதை2விருட்சம்) சொல்ல விரும்பு வது
திமுக கூட்டணியில் இருந்து விலகியதுதான் விசேஷம்
–என்று BBB குறிப்பிட்ட வாக்கியத்தில் திமுக கூட்டணியில் இருந்து ஏதோ ஒரு கட்சி விலகியது போல் பொருள் தருகிறது. ஆனால் உண்மையில், அவர் இதுமாதிரியான பொருள் படும் படி குறிப்பிடவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க விலகியது என்ற பொருள்கொண்ட வாக்கியத்தை அமைக்க நினைத் தார். ஆனால் கால்புள்ளி அதாவது comma (,) ஐ குறிப்பிடாமல் இந்த வாக்கியத்தை அமைத்ததால் அவர் சொல்லநினைத்த தகவலே தவறாக போய்விடுகிறது. கீழே குறிப்பிட்டுள்ள சரியான
வாக்கியத்தை கவனமுடன் படியுங்கள்.
அவர் கீழே குறிப்பிட்டதுபோல வாக்கிய த்தை அமைத்திருக்க வேண்டும்.
திமுக, கூட்டணியில் இருந்து விலகியது தான் விசேஷம்
திமுக என்ற வார்த்தைக்கு அருகில் ஒரு கமா (,) அதாவது தமிழில் கால்புள்ளி என்று சொல்வார்களே அதை குறிப்பிடும் போதுதான் திமுக ஏதோ ஒரு கூட்டணியில் இருந்து விலகியது என்ற பொருள் தரும்.
பாருங்கள் ஒரு சின்ன கால் புள்ளி அதாவது comma (,), எப்படியெல்லாம் அர்த்தத்தை மாற்றுகிறது.
ஒரே ஒரு சின்ன கால்புள்ளி அதாவது கமா (,) வை எங்கு பயன் படுத்த வேண்டுமோ அங்கு பயன்படுத்தவேண்டும். எங்கு பயன் படுத்தக்கூடாதோ அங்கு பயன்படுத்தக்கூடாது. தமிழில் எழுத்துக் களை பிழையில்லாமல் எழுதுவதை மட்டுமே நமக்கு (என்னையும் சேர்த்துதான்) கவனம் இருக்குமே தவிர இதுபோன்ற முற்றுப்புள்ளி, கால்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சரியக்குறி போன்ற குறிகளை எங்கு பயன்படுத்த வேண்டும் எங்கு பயன்படுத் தக் கூடாது என்பது நாம் அறிந்து அதற்கே ற்ப தமிழில் எழுதினால் தமிழின் இனிமை மட்டுமல்ல தமிழின் தொன்மையும் காப் பாற்றப்படும்.
தமிழின் பெருமையே பெருமை!
– விதை2விருட்சம்
‘coma’ oru kaal pullia or arai pullia? I have a doubt, kindly clarify. Thank you
‘coma’ in tamil “kaal pulli”
‘comma’ oru Kaal pullia or arai pullia? I have a doubt. Kindly clarify.Thank you
already i told
nanri