ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் சிறிலங்கா தொடர் பான தீர்மானத்தில் இந்தியா பரிந்துரை செய்த திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்துள்ள தாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவி த்துள்ளது.
சிறிலங்கா தொடர்பில் இந்தியா முன்வைத்த ஏழு திருத்தங்க ளை அமெரிக்கா நிராகரித்துள் ளதாக ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய மத்திய அரசுக்கும் திமுக கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மா னத்தில் ஏழு திருத்தங்களைச் செய்வதற்கு, இந்திய வெளி விவ கார அமைச்சுக்கு கடந்த புதன்கிழமை இந்திய அரசாங்கம் உத்தர விட்டிருந்தது.
இந்தத்திருத்தங்கள் இந்திய-சிறிலங்கா உறவுகளை கடுமையான வீழ்ச்சிக்குள் தள்ளக்கூடியவை.
எழுத்துமூலம் இந்தியா முன்வைத்த இந்தத் தீர்மானங்களை அமெரிக்காவும், இணை அனுசரணை நாடுகளும் நிராகரித்து விட்டன.
தீர்மானத்திற்கு பரந்தளவிலான ஆதரவினை கோர வேண்டியுள் ளதனால் இந்தியாவின் திருத்தங்களை அப்படியே ஏற்றுக்கொள் ள முடியாது என அமெரிக்கா நிராகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
இறுதி நேரத்தில் திருத்தங்களைச் செய்ய இந்தியா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்த போதிலும், தீர்மனத்திற்கு இந்தியா ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் விளைவாக, சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித் தமைக்கு பழிவாங்கும் நோக்கில் திருகோணமலையில் உள்ள இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் வசம் உள்ள சில எரி பொருள் குதங்களை மீளப்பெறவுள்ளதாக சிறிலங்கா அறிவித் துள்ளது.
சிறிலங்கா அனைத்துலக சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையி ல் பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறு த்துவதாக ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இது சுதந்திரமான விசாரணை என்ற பதத்தைவிட வலிமையான து என்றும், அனைத்துலக விசாரணையை என்பதைவிட நலிவா னது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா அயல்நாட்டுடன் எடுத்துள்ள இந்த இறுக்க நிலை, கொழு ம்பை மேலும் சீனாவை நோக்கித் தள்ளிவிடக் கூடும் என அந்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
– பரிஸ்தமிழ்