Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘புரட்சிக்கவி’, ‘பாவேந்தர்’ பாரதிதாசன்

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் ஏப்ரல் 29, 1891 அன்று பாண்டி ச்சேரியில் (புதுச்சேரியில்) பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் தம்பதி யினருக்கு மகனாக பிறந்தார். இவரு க்கு இவரது பெற்றோர் சுப்புரத்தினம் என்றே பெயரி ட்ட‍னர். (பின்னாளில் பாரதியார் மீது கொண்ட அளவற்ற‍ அன்பால் சுப்புரத்தினம் என்ற தமது பெயரை பாரதிதாசன் என்றே மாற்றிக் கொண் டார்).  இளம் வயதிலேயே பிரெஞ்சு மொழி வழி பள்ளியில் பயில நேர்ந்தாலும் தமிழ்மீது கொண்ட தீராக காதலால் தமிழ்ப் பள்ளியிலேயே பயில விரும்பியதால், இவரை இவரது பெற்றோர் தமிழ் பள்ளியி லேயே சேர்த்த‍னர்.  தமிழ்ப் மொழிப் பற்றும் தமழறிவும் சிறந்து விளங்கினார்  பதினெட்டாவது வயதிலேயே கல்லூரியில் தமிழா சிரியாராக பணியமர்த்த‍ப்பட்டார். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்ற பெண்மணி யை மணந்து இல்ல‍ற வாழ் வை தொடங்கினார்.

நல்ல‍ இசை ஞானமும் நல்ல‍ தமிழுணர்வும் அவரிடம் இருந்த தால், பல‌ கவிதைகளை படைத்தார்.  சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்க ளை அழகாகவும் நகைச்சுவையுடனும் எழுதித் தமது நண்பர்களுக்குப் பாடிக் காட்டுவார். ஒரு சமயம் இவரது நண்பர் ஒருவரது திருமண விருந்தில் பாரதியார் பங்கேற்றி ருப்ப‍தை அறியாத இவர், பாரதி யாரால் இயற்ற‍ப்பட்ட‍ நாட்டுப் பாடலையே தமது நண்பருக்கு பாடிக் காட்டினார். அந்த விருந்தில் பங்கேற்று இருந்த பாரதி யாரை இவர் பாடி ய விதம் கவர்ந்தது. அப்பாடல் மூலமாகவே பாரதியாருக்கு பாரதி தாசனை அறி முகம் செய்து வைத்தது.

அன்றுமுதல் பாரதியாருடன் இணைந்து, மக்க‍ளுக்கு எழுச்சி யூட்டு ம் பல்வேறு பாடல்களையும், கவிதைகளையும் பாரதி தாசன் இயற்றிப் பாடினார். மேலும் பல்வேறு நூல் களையும் படைத்து அன்னைத் தமிழுக்கு பெருமைகள் பல சேர்த்தார். பாரதி யாரின் மறைவுக்கு பிறகும் தொடர்ந்து வீறு கொண்டு, பாரதியார் காட்டிய சீரான பாதையிலே சென்று தமிழுக்கும் தமிழனுக்கும் தொண்டாற்றினார். முதலில் ஆத்திகனாக இருந்த இவர், பின் நாத்திகனாக மாறினார்.

த‌னது வாழ்நாளில் பெரும்பகுதியை, சமூக விழிப்புணர்வுக் காகவும் செலவழித்த‍ பாவேந்தர் பாரதிதாசன் 21.4.1964 ஆண்டு காலமானார்.

பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள்

1926 ஆம் ஆண்டு
* முல்லைக் காடு, காசி ஈ.லட்சுமண பிரசாத்

1930 ஆம் ஆண்டு
* காசி ஈ.லட்சுமண பிரசாத்

1937 ஆம் ஆண்டு
* புரட்சிக் கவி,துரைராசு வெளியீடு

1938 ஆம் ஆண்டு
* பாரதிதாசன் கவிதைகள்,கடலூர் டி.எஸ்.குஞ்சிதம்

1939 ஆம் ஆண்டு
* குடியரசுப் பதிப்பகம்

1941 ஆம் ஆண்டு
* வானம்பாடி நூற்பதிப்புக் கழகம்

* 1942 ஆம் ஆண்டு
குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி)பாரதிதாசன் பதிப்பகம்

1943 ஆம் ஆண்டு
* பாரதிதாசன் ஆத்திசூடி (முல்லைப் பதிப்பகம்)
* முல்லைப் பதிப்பகம்

1944 ஆம் ஆண்டு
* பாரதசக்தி நிலையம்
* நல்ல தீர்ப்பு (நாடகம்),முல்லைப் பதிப்பகம்

1948 ஆம் ஆண்டு
* குயில் – எதிர்பாராத முத்தம்
* குயில் – கடவுளைக் கண்டீர்!
* குயில்
* காதலா – கடமையா?,பாரதிதாசன் பதிப்பகம்
* உயிரின் இயற்கை,மன்றம் வெளியீடு

1949 ஆம் ஆண்டு
* தமிழச்சியின் கத்தி,பாரதிதாசன் பதிப்பகம்
* சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,பாரதிதாசன் பதிப்பகம்

1950 ஆம் ஆண்டு
* குடும்ப விளக்கு (திருமணம்)பாரதிதாசன் பதிப்பகம்
* குடும்ப விளக்கு (மக்கட் பேறு)பாரதிதாசன் பதிப்பகம்
* பாரதிதாசன் பதிப்பகம்

1952 ஆம் ஆண்டு
* பாரதிதாசன் பதிப்பகம்
* பாரதசக்தி நிலையம் – இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)

1954 ஆம் ஆண்டு
* சேர தாண்டவம் (நாடகம்),பாரதிதாசன் பதிப்பகம்
* பொங்கல் வாழ்த்துக் குவியல்,பாரதிதாசன் பதிப்பகம்

1955 ஆம் ஆண்டு
* பாரதிதாசன் பதிப்பகம்
* கலை மன்றம், விடுதலை வேட்கை,

1957 ஆம் ஆண்டு
* பாரதிதாசன் கதைகள்முரசொலிப் பதிப்பகம்

1959 ஆம் ஆண்டு
* பாரி நிலையம் – பாரதிதாசன் பன்மணித் திரள்
* வீட்டுக் கோழியும் – காட்டுக் கோழியும்,குயில் புதுவை

1960 ஆம் ஆண்டு
* குயில்

1962 ஆம் ஆண்டு
* அன்பு நூலகம் – கதர் ராட்டினப் பாட்டு
* அன்பு நூலகம் மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது

1964 ஆம் ஆண்டு
* முத்தமிழ்ச் செல்வி அச்சகம்

1967 ஆம் ஆண்டு
* பிசிராந்தையார், பாரி நிலையம்
* பாரி நிலையம் – உரிமைக் கொண்டாட்டமா?

1969 ஆம் ஆண்டு
* காதல் நினைவுகள்,செந்தமிழ் நிலையம்

1977 ஆம் ஆண்டு
* காதல் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம்
* குயில் பாடல்கள்பூம்புகார் பிரசுரம்

1978 ஆம் ஆண்டு
* தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)பூம்புகார் பிரசுரம்

பிற படைப்புக்க‍ள்

* பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
* பாண்டியன் பரிசு (காப்பியம்)
* எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
* குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
* குடும்ப விளக்கு (கவிதை நூல்)
* இருண்ட வீடு (கவிதை நூல்)
* அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
* தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
* இசையமுது (கவிதை நூல்)
* அகத்தியன் விட்ட புதுக்கரடி
* பாரதிதாசன் பதிப்பகம் அமைதி
* செந்தமிழ் நிலையம்,இசையமுதம் ( பாகம் 1)
* இசை அமுதம் ( பாகம் – 2)
* இருண்ட வீடு,முத்தமிழ் நிலையம் இளைஞர் இலக்கியம்
* எது பழிப்பு
* கண்ணகி புரட்சிக் காப்பியம்
* கற்புக் காப்பியம்
* குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)
* குடும்ப விளக்கு (முதியோர் காதல்)
* குறிஞ்சித் திட்டு,பாரி நிலையம்
* தமிழியக்கம்,செந்தமிழ் நிலையம் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
* திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
* தேனருவி இசைப் பாடல்கள்
* நீலவண்ணன் புறப்பாடு
* பாண்டியன் பரிசு
* பாரதிதாசன் கவிதைககள் (பாகம் – 1)
* பாரதிதாசன் நாடகங்கள்
* பெண்கள் விடுதலை
* மணிமேகலை வெண்பா
* தமிழுக்கு அமுதென்று பேர்
* வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
* புகழ் மலர்கள் நாள் மலர்கள்

பல்வேறு இணையங்களில் இருந்து தொகுக்க‍ப்பட்ட‍து

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: