Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூமியை தாக்கவரும் எரிகல்! – “அது பூமியை தாக்ககூடாது என கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள்!” – நாசா

பூமியை நோக்கி விரைவாக வந்துகொண்டிருக்கும் எரிகல்லின் தாக்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்னும் கேள்விக்கு, அந்த எரி கல் பூமியை தாக்ககூடாது என கடவுளிடம் பிராத்தனை செய்யுங் கள் என நாசா தெரிவித்திருப்ப து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பூமிக்கு அருகில் சுற்றிக் கொண் டிருக்கும் 95 சதவிகித எரிகற்க ளை நாசா கண்காணித்து வரு கிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய எரிகற்களும் அட ங்கும்.

10,000-க்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் எரிகற்களி ல், 50 மீட்டர் விட்டமுடைய வெறும் 10 சதவிகித எரிகற்கள் மட்டு மே கண்டறியப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து அறியமுடியாத விண்பாறைகள் மற்றும் எரிகற்கள் பூமியை தாக்குவதை சமாளி ப்பது குறித்து முடிவெடுக்க வேண் டியது அனைத்தும் அமெரிக்கா வை சார்ந்து இருக்கிறது.

இந்நிலையில், நியூயார்க் நகரை நோக்கி வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய எரிகல்லை எப்படி சமாளிப்பது என்பது குறித்து நாசா வின் தலைமை அதிகாரி சார்லஸ் போல்டேன் கூறுகையில், இந் த எரிகல்லின் தாக்கத்தை குறித்து ஆலோசிக்க வேண்டும். எரி கல்லை திசைத்திருப்ப முயற்சி செய்ய வேண்டும். தேவைப்பட் டால் இதற்காக நீங்கள் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

கடந்த பிப்ரவரி மாதம் 17 மீட்டர் விட்டமுடைய எரி கல் ஒன்று ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் என்னு மிடத்தை நோக்கி வந்த து. அதன் பிறகு மிகப் பெரிய எரிகல் ஒன்று சமீ பத்தில் பூமியிலிருந்து 17,200 மைல் தூரத்திற்கு அப்பால் வந்து சென்றதை நமது விண் கலங்கள் படமெடுத்தன. பூமியை தாக்கும் எரிகற்களை திசை திருப்புவது சம்பந்தமாக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறி த்து பன்னாட்டு ஒத்துழைப்பை நாசா எதிர் நோக்கிக்கொண்டிருக் கிறது என அவர் தெரிவித்தார்.

– webdunia

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: