Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இணைய‌ வாசகி கவிதா கேட்ட கேள்வியும்! – விதை2விருட்சம் அளித்த‍ ஆலோசனையும்,

கவிதா என்ற ஒரு சகோதரி! விதை2விருட்சம் இணையத்தில் வெளி யான இடுகை ஒன்றிற்கு அளித்த‍ பின்னூட்ட‍த்தில்,  தனது வாழ்வில் நடந்த நிகழ்வை இங்கே பகிர்ந்து அதற்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு, விதை2விருட்சம் இணையத்தை கேட்டு க்கொண்டுள்ளார். அவருக்கு விதை 2விருட்சம் வழங்கிய ஆலோசனையை நான் இங்கு பகிர்கிறேன்.

சகோதரி கவிதா அவர்களது கேள்வி!

vanakkam. en vayasu 22. nan oruthara love panren. avarum ennai 3 varusama unmaiyaga love pannar. rendu perukkum ore vayasu. ana community vera. avanga ammavai samathanap paduthi enga veettuku ponnu kettu varenu 3 varusama ennai namba vecharu. nanga love pandromnra perla entha thappum pannala. innaiku avanga amma othukka matenu kandipa sollitanganu solraru. amma seththu poiduvenu solranga. ne vera yaraiyavathu kalyanam pannikonu solranga. nan enna pannatum. pls enakku oru vali sollunga, ennala avanga vittu irukka mudiyala. mudiyathu. nana evvalavu sonnalum avanga purinjika matenranga. ippo suthama enkuda entha contectum illa. enakku paithiyam pidicha mathiri irukku.

– by Kavitha

இதற்கு விதை2விருட்சம், கவிதா அவர்களுக்கு வழங்கிய ஆலோசனை

சகோதரிக்கு!

உங்களது காதலருக்கு உங்கள் மீது உண்மையான காதல் இருந்திரு க்கும் பட்சத்தில் உங்களை எந்த சூழ் நிலையிலும் கைவிடமாட்டார். ஆனால் அவரோ ஒரு பொழுது போக் கிற்காகவும், தனக்கும் ஒரு காதலி இருக்கிறாள் என்று அவரது நண்பர்களிடம் பீத்திக்கொள் வதற்காகவும் தான் உங்களை காதலித் திருக்கிறார், இல்லை இல்லை காதலிப்பதுபோல் பாசாங்கு செய்தி ருக்கிறார்.

இதுபோன்ற பொய்யான காதலருக்காக உங்களை நீங்களே வரு த்திக்கொள்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அவர், உங்கள் மீது கொண்ட காதல் வேண்டுமானாலும் பொய்யாக இருக்க‍லாம். ஆனால் நீங்கள், அவர்மீது கொண்ட காதல், உண்மையானது என்பது எனக்கு புரிகிறது.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், பொய்யான காதல் என்றைக்குமே நிலைக்காது! அப்ப‍டி யே அது நிலைத்து திருமணத்தில் முடிந்தாலும், குடும்ப நல நீதி மன்றங்ளின் படிகளில் ஏறிக்கொண்டிருக்குமே ! தவிர நிலையான வாழ்க்கையை வாழாது.

உங்களை காதலிக்கும்போதே பாதியி லேயே விட்டு விட்டு செல்பவ னை கட்டாயப்படுத்தி, நீங்கள் திருமணம் செய்து கொண்டால், அந்த திருமண வாழ்க்கையிலும் பாதியிலே யே விட்டு செல்ல‍ மாட்டான் என்பது என்ன‍ நிச்சயம்!

உங்களை புரிந்துகொள்ளாமல் உங்களை விட்டு விலகிச் செல் கிறார் என்று நினைக்காமல்,  அவனை நீங்கள் தூக்கி எறிந்து விடுங்கள் மேலும் அவனது நினைவாக எப்பொருளையும் உங்கள் கண்ணில் படும்படி வைக் காதீர்! அவனது கைபேசி எண்ணோ அல்ல‍து தொலை பேசி எண் ணோ உங்களிடம் இருந்தால் அதை முதலில் அழித்து விடுங்கள்.

உங்களுக்கு தனித்திறமைகளை வெளிக் கொண்டு வந்து, அதில் உங்களது முழு கவனத்தையும் செலுத்தி, உங்களை முழு மையாக ஈடுபடு த்திக் கொள்ளுங்கள். படிப்பில் முழு கவனம் செலுத்தி, படித்து பட்ட‍ம் பெற்று, ஒரு நல்ல‍ வேலைக்கு சென்று உங்களை நீங்களே 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் செய்து கொள்ளு ங்கள். மேலும் ஓவியம் வரைதல், கதை, கவிதை எழுதுதல், அல்ல‍து கைவினைப் பொரு ட்கள் தயாரித்த‍ல், அல்ல‍து வலைதளம் ஒன்றை தொடங்கி அதில் நீங்கள் படித்த‍ பார்த்த‍ செய்திகளையும் தகவல் களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

இதுபோன்ற செயல்களில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொண்டு உங்களை காதலிப்பதுபோல் பாசாங்கு செய்தவனின் நினைவு கள் சுத்தமாக மறக்க‍ வேண்டும் அல்ல‍து மறக்க முயற்சிக்க வேண் டுமே தவிர தற்கொலைக்கு முயற்சிப்ப‍து, உங் களது உடலை நீங்களே காயப்படுத்திக் கொள் வது, அல்ல‍து உணவருந்தாமல் இருப்ப‍து இது வெல்லாம் அடி முட்டாள்கள் செய்யும் செயல் களே!

காலம் வரும் வரை பொறுத்திருங்கள். உங்கள் பெற்றோர் பார்க்கும் உங்களுக்கு ஏற்ற‍ ஒரு சரியான துணைவனையே (உங்களுக்கு பிடி த்தமானவராக இருந்தால்) மணந்து கொண்டு இல்ல‍ற வாழ்க்கை யில் ஈடுபடுங்கள்.

இப்ப‍டிக்கு
தங்கள் நட்பினை விரும்பும்
விதை2விருட்சம்

3 Comments

  • Kumaran

    My V2V friend Kavitha, our Sir, has given a very good advice to you. Just follow it, and try to overcome from this situation and take life as normal.

    Don’t think that life will be the same always. Things will change and one day you will come to an extraordinary level and that day you will thank V2V for this kind advice.

    Let the Lion Inside You Keep Roaring and let your ambition keep burning in your belly. Come on Cheer up my Friend.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: