Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்த மாதிரியான‌ முகத் தோற்ற‍த்திற்கு எந்தமாதிரியான‌ கூந்தல் அலங்காரங்கள்!

அழகு என்பது வெறும் முக அமைப்பு மற்றும் சரும நிறம் சார்ந்த தல்ல. பிறரை வசீகரிக்கும் அளவிற்கு அழகு இல்லையென்றாலும் சிறு அழகு குறிப்புகளை பயன்படுத்தி நாம் எப்படி நமது அம்சங்களை மாற்றிகொள்கிறோம் என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது.

அந்த வகையில் பெரும்பான்மையான பெண்கள் தவறுசெய்வது அவர்களின் சிகை அலங்காரத்தில் தான். நமது ஒவ்வொருவரின் முகமும் வெவ் வேறு அமைப்புகளை உடையது. அதில் பெரும் பாலான பிரிவுகளாக கருதப்படுபவை, வட்ட வடிவ முகம், நீள்வட்ட வடிவ முகம், சதுர வடிவ முகம் ஆகியவை.

பெண்கள் தங்களின் முக வடிவங்களுக்கு ஏற்றவகையில் சிகை அலங்காரத்தை தேர்வு செய்வது அவசியம். அந்த வகையில் பெண்க ளுக்கு உதவும் எளிமையான டிப்ஸ்களை தொடர்ந்து படியுங்கள்.

நீள்வட்ட முகம் உடையவர்கள்…

நீள்வட்ட முகமுடைய பெண்களுக்கு பெரும் பாலான சிகை அலங் காரங்கள் நன்றாகவே இருக்கும். ஃப்ரீ ஹேர், போனி டைல் போன்ற ஹேர் ஸ்டைல்கள் மிக எடுப்பாக இருக்கும். ஆனால் நீள்வட்ட முக முடையவர்கள் தங்களின் தலையில் நடு வாகு எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீள மாக இருப்பது போல தோன்றுவது மட்டுமில்லாமல் அவர்களது மூக்கையும் சற்று பெரியதாக காட்டிவிடும்.

சதுர முக வடிவம் உடையவர்கள்…

நீங்கள் சதுர முக வடிவமுடையர்கள் என் றால் உங்களக்கு நீளமான கூந்தல் மிக கச்சி தமாக பொருந்தும். கூந்தலை பின்பக்கமாக உயர்த்தி கட்டாமல், முகத்தில் கூந்தலின் இழைகள் விழும்படி பார்த்து கொள்ளுங்கள். போனி டைல் போன்ற சிகை அலங்காரங்க ளை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் குட்டை முடி பிரியராக இருந்தால் லேயர் லேயராக பாப் கட் செய்துகொள்ளலாம். ஆனால், கூந்த லை குட்டையாக வெட்டும் போது முடியை மொத்தமாக ஓரே அளவில் வெட்டினால் அது உங்களுக்கு ஒரு அடாவடி லுக்கை கொடுத்து விடும்.

வட்ட முக வடிவம் உடையவர்கள்…

வட்ட முகமுடையவர்கள் அனைவரும் குண் டாக இருப்பார்கள் என அர்த்தமில்லை. உங்க ளின் கன்னங்களில் நிறைய சதை இருந்தால் நீங்கள் உங்களின் தோள்கள் அளவிற்கு முடியை லேயர் கட் செய்து கொள்ளலாம். உங்க ளுக்கு சுருட்டை முடி இருந்தால் அதை ஸ்ரேட் னிங் செய்யலாம். இப்படி செய்யும்போது உங்க ளின் முகம் சற்று நீளமாக தோன்றும். எந்த வகையான சிகை அலங்காரம் செய்தாலும் கூந்தலை மேலே தூக்கி சீவுங்கள்.

வறண்ட மற்றும் எண்ணெய்ப் பசை தன்மையுள்ள கூந்தல்கள் பொலிவு பெற சில குறிப்புக்கள்

கூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுடைய கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எத்தன்மை யுடையது என்பதை அறிந்து அதற் கேற்ப சில வழி முறைகளை கடை பிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலா ம். வறண்ட மற்றும் எண்ணெய்ப் பசை தன்மை யுள்ள கூந்தலுக்கான சில டிப்ஸ்கள்..

வறண்ட கூந்தல்:

தலையில் எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடு குறைவு காரணமாகவே கூந்தல் வறட்சிய டைகிறது. மேலும், அதிகமாக சூரிய கதிர்வீச்சிற்கு உட்படுதல், கடின தன்மையுள்ள ஷாம்புகளை அதிக மாக பயன்படுத்துதல் மற்றும் சில ரசாயன சிகிச்சை போன்றவற்றாலு ம் கூந்தலில் வறட்சி தன்மை உண்டாகிறது.

* வறண்ட கூந்தலுடையவர்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை மிதமாக சூடு படுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும். மேலும் மைல்டான அதா வது மிதமான தன்மையுடைய ஷாம்புக்களை பயன்படுத்தினால் கூந்தலின் வறட்சி தன்மை குறையும்.

* விளக்கெண்ணெய், கிளிசரின், வினிகர் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மிதமான ஷாம்புவுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தலின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.

* சிலருக்கு ஷாம்பு போட்டு குளிப்பதாலும் கூந்தல் அதிகப்படியாக வறண்டு காணப்படும். அப்படிபட்டவர்கள் தலைக்கு குளித்த பின் சிறிது பாலை தலையில் தேய்த்து நன்கு அலசி விட வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் பட்டுப் போல மின்னும்.

*வறட்சியான கூந்தலை உடையவர்கள் ஹேர் -டிரையர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்ல து.

எண்ணெய்ப் பசையான கூந்தல்:

தலையில் காணப்படும் எண்ணெய் சுரப்பிகள் அதிகளவில் சுரப்பதால், கூந்தல் எண்ணெய்ப் பசையுடன் காணப்ப டுகிறது. கூந்தல் எண்ணெய் தன்மையுடன் இருப்பதால், தூசு மற்றும் அழுக்கு போன்றவை எளிதில் சேர்ந்து விடும்.

* எண்ணெய்ப் பசையான கூந்தல் உடையவர்கள், அடிக்கடி தலைக் குக் குளிப்பதோடு, தலையில் தூசு மற்றும் அழுக்கு போன்றவை சேராமல் பராமரிக்க வேண்டும்.

* எண்ணெய்த் தன்மை கூந்தலுடையவ ர்கள் மருதாணி அல்லது எலுமிச்சை போன்ற பொருட்கள் கலந்த ஷாம்புக்க ளாக வாங்கி பயன்படுத்துவது நல்லது.

* வேப்பிலைச் சாறுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து குளிக்க, தலையில் அதிகப்படி யாக காணப்படும் எண்ணெய் பிசு பிசுப்பு நீங்கும்.

*கேரட்டை வேகவைத்து மசித்து, தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், எண்ணெய் பசை கட்டுப்படும். மேலும் எண்ணெய்ப் பசை கூந்தலுடையவர்கள் உணவில் எண் ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

இந்த எளிமையான குறிப்புகளை பின்பற்றி உங்களின் தோற்றத்தை படிப்படியாக மெருகேற்றுங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: