Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலிரவு – பெண்களுக்கு, நிபுணர்கள் வழங்கும் சில ஆலோசனைகள்

ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒருநாள். அந் நாளைப் படபடப்பும், டென்ஷனு ம் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்…..

*முதலிரவு நடக்கப் போகிற இடத் தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத் திலா, ஹோட் டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் பட படப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்பு கிற இடத்தை அவர் களிடம் தெரிவியுங்கள்.

* மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்த கங்களைப் படியுங்கள். தேவைப் பட்டால் பெண் மருத்துவரிடம் உங் கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.

*முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந் தாலோசியுங்கள். நீங்களாக மருத் துவம் செய்து கொள்ள வேண்டாம்.

*அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும் சேர்க் கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும்.

*முடிந்தால் இன்னொரு முறை குளியுங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றி விட்டு, புதிதாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங் கள்.

* உடலை உறுத்தாத உடையை அணிந்து கொள்ளுங்கள்.

* நகைகள் குறைவாகவே இருக் கட்டும். கூரிய முனைகளைக் கொண்டதும், கனமானதுமான நகைகள் வேண்டாம்.

* காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்க ளில் மித மான சென்ட் தடவிக் கொள்ளுங்கள்.

*உடல் முழுவதும் மாயிச்சரை  சிங் லோஷன் தடவிக் கொள் ளுங் கள்.

* கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும்.

* படுக்கை விரிப்பை இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய் யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.

* முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாக த்தான் இருக்கும். உங்கள் கண வரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம் தெரிவியுங்கள்.

* முதலிரவன்றே உறவில் ஈடுபட்டுத்தா னாக வேண்டும் என்று அவசியமில் லை. நீங்கள் இருவரும் ஒருவருக் கொ ருவர் அறிமுகமில் லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புக ளைப் பற்றி ப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

* அடுத்தவர்களது அனாவசிய அனுபவங்க ளையும், அறிவுரைகளையும் கேட்டுக் குழப் பிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரது அனு பவம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

* உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளை யாட்டுகளில் செலவழி யுங்கள்.

* முதல் முறை உறவில் ஈடு படும் பெண்களுக்கு வலி இரு க்கலாம். அதைப் பற்றியே நினைப்பது வலியை இன்னும் அதிக மாக்க த்தான் செய்யும்.

* வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

* உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: