தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே பால் வேற்றுமை கருதப் படாமையால் ஆடவரைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடை யவள் ஆகிறாள். ஆகவே முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டி லும் பெண்ணுக்கு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலு ம் அறிகி றோம். காரைக்காலம்மை யார், திலகவதியார், மங்கையர் க்கரசியார் ஆகியோர் இந்நிலைக் குத் தக்க சான்றுகள். மேலும் திருப் பனந்தாள் சிவாலயத்தின் பெயரா கிய தாடகை யீச்சுரம் என்பது, ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரியபுராணத்தில் சொல்லப்பட்டு ள்ளது.
அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தை யார் வெளியூர் சென்றிருந்த போது தான் பூசை செய்தாள். அச் சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்த போது இடையில் இருந்த ஆடை நழுவவே அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமான் சமீபம் இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள்கூர்ந்த பெருமான், தம்முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக் கொண்டார். தாடகைக்கு அருள் செய்தமையால் இத்தலத்திற்கு தாடகை யீச்சரம் என்று பெயர் வந்தது.
இப்பெயரைத் திருஞான சம்பந்தர் இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்புறம் முடிசாய்ந்த லிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல் குங்குலியக்கலய நாயனார் என்ற அடியவர் க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரியபுராணம் கூறுகிறது.
பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமத்தில் எந்தத்தடையும் விதி க்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில் களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.
– மகராசன் குழு அறிக்கையிலிருந்து பக்கம் 29-31
(உண்மை – 15.5.1983 மற்றும் விடுதலை)