Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீரமங்கை இராணி வேலுநாச்சியார்

இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி அவர்களுக்கும் சக்கந்தி முத்தாத்தாள் அம்மாளுக்கும் 1730 ஆம் ஆண்டில் ஒரே பெண் மகளாக‌ வேலுநாச்சியார் பிறந்தார். பெண்ணாக இவர் பிறந் தாலும் ஓர் ஆண் வாரிசாக  வளர் க்கப்பட்டார்.  வாள்வீச்சு, அம்பு விடு தல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்று சிறந்து விளங் கினார் மேலும் பல மொழிகளையும் கற்று அதில் நல்ல‍ புலமையும் பெற்றார்.

போர்க்கலைகள் பல அறிந்தவரும, வீரம் செறிந்தவரும் விவேகம் பொதிந்தவருமான  சிவ கங்கை மன்னர் முத்துவடுகநாதர் அவர்கள், பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கிய இளம்பெண் வேலு நாச்சியாரின் அழகையும், வீரத்தையும் கண்டார். மனதை பறிகொடு த்தார். பின் 1746ல் அவரை திருமணம் செய்துகொண்டார். திருமண த்திற்குப்பின் வேலுநாச்சியார் சிவகங்கை க்கு குடிபுகுந்தார். அரசனுக்கு ஏற்ற‍ அரசி யாக இருந்து சிவகங்கை சீமை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தனர்.

அந்த சமயத்தில்தான், இராமநாதபுரத்தை ஆற்காடு நவாப்பின் பெரு ம்படை ஒன்று தாக்கி கைப்பற்றியது. பின் நவாபின் அடுத்த குறி சிவ கங்கைதான்.  இந்த சிவ கங்கையை கைப்பற்ற‍ நேரம் காலத் திற்காக காத்திருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கை யைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவியாக நவீனரக ஆயுதங்க ளைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப்.

முத்து வடுகநாதருடன் வேலு நாச்சியாரும், வீரனுக்கு ஏற்ற‍ வீராங் கனையாக திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.  ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர், காளை யர் கோயிலில் வழிபாடு செய்து கொண் டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளை த்து. கொடூரமாய் தாக்கினர். ஆங்கி லேயர்கள் கொடுத்த நவீன போர்ச் சாதனங்களை க் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவ ர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. ஆங்கி லேய படை வீரன் ஜோசப் ஸ்மித் என்பவ னால், வடுகநாதர் போர் வாளால் வெட்டப்பட்டு வீர மரணம் அடை ந்தார். வீரத் தம்பதிகளின் ஒரு மகளான இளவரசியும் அந்தப் போரில் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசம் வந்தது.

திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன் னர் வீர மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. மிகுந்த மன வேதனையுடன் தனது கணவரி ன் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடி த்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயி லுக்குச் செல்ல விரும்பினார். இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்க வில் லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப் படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டு மென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளா யிருந்த மருது சகோதரர் கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கி விட் டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்ற வும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போ கக் கூடாது’ என்றார் கள். ஆனால் நாச்சியார் கேட்க வில்லை. கண வரின் உட லைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்து ஆட்சியை கைப்பற் றியது.

வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமா னது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரச ரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன் ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம். பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபை யும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார்.

அதன்படி ஹைதர் அலியை விருப்பாட்சி யில் சந்தித்து ஆங்கிலேயர் களை எதிர்ப்ப‍து தொடர்பான உதவிகளையும் அதற்கான‌ வழி முறைகளையும் பற்றியும் உருது மொழியி லேயே விவரமாகவும் விரிவா கவும்  எடுத் துரைத்தார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமை யைக் கண்டு, வியப்புற்ற‍ ஹைதர் அலி, அவர் கேட்ட‍ உதவிகள் அனைத்தும் ஒன்று விடாமல் செய்வதாக உறுதி அளித்தார். பின் ஏழாண்டு காலம் தனது இருப்பிடத்தை, திண்டுக்கல் கோட்டை, விரு ப்பாட்சிக் கோட் டை, அய்யம்பாளையம் கோட்டை மாற்றிக்கொண்டே வாழ்ந்து வந் தார்.  வேலுநாச்சியாரோடு  இணைந்து உருவாக்க‍ப்பட்ட‍ சிவகங் கை மக்கள்பிரதிநிதிகள் கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப் பட்டு மருது சகோதரர்கள் தலைமையின் கீழ் தீவிரமாக செயல் பட்ட‍து. இந்த எதிர்ப்புப் படை உருவாக காரணமாக இருந்தது  வேலு நாச்சியாரின் அமைச்சராக இருந்த‌ தாண்டவராயன் பிள்ளை ஆவார்.

நவாப்படைகளையடனுன் அவருக்கு உதவியாக வந்த ஆங்கிலேய படைக்கும் எதிராக போர் புரிய‌ கிளம்பினார். வேலு நாச்சியார். முத லில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். பின்  சிவகங்கையை மீட்க,  வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித் தார்.

சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள் ளையர் படைகளை வீழ் த்தியது. விஜயதசமி அன்று சிவகங்கை அரண் மனை க்குள்ளே இருக்கும் ராஜ ராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண் கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண் டிருக்கும். வேலு நாச்சியாரும், அவரோடு இருந்த மகளிர் படையும், ஆயுதங்களை தங்களது ஆடைகளுக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்தனர். அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து, வெள்ளையரின் ஆயுதக் கிட ங்கை எரித்து ஆயுதங்களை சாம்பலாக்கி அழித்தாள். வேலுநாச்சி யாரின் மகளிர் படை திடீரென்று கோவிலுக்குள் புகுந் து கடுமையான‌ தாக்குதல் நடத்தியது. இந்த திடீர் தாக்குதலை சற் றும் எதிர்பார்க்காத ஆங்கிலேயப் படைகள் வெட்டுண்டு விழு ந்தார்கள், பிழைத்தவர்கள் உயிரைக் காப்பாற் றிக்கொள்ள‍ புற முதுகிட்டே நாட்டை விட்டு ஓடி ஒளிந்தார்கள்  தனது ஐம்பதாவது வயதி ல், தனது கணவ ரைக் கொன்ற ஜோசப் ஸ்மி த்தையும் தளபதி பான் ஜோரையும் தோற் கடித்தார்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலே யரின் கொடி இறக்கப் பட்டது. வேலு நாச்சி யாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவ கங்கையின் அரசியா னார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறு பத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சி யார். அவரது வாழ்க் கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

வேலு நாச்சியார் தனது இறுதிக் காலத்தில் விருப்பாட்சி அரண்ம னையிலேயே தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி, நாட்டை மீட்ட அந்த வீர மங்கை வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று வீர மரணம் எய்தினார்.

வரலாற்று ஆசிரியர்களால் நம க்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றி யது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத் துக்கு 85 ஆண்டுகள் முன்பே ஆங்கிலேயப் படைகளை துவம்சம் செய்த வீர மங்கையின் வரலாற்றை, ஏனோ ஆசிரியர்களால் மறைக்க‍ப்படுகிறது. அது அவர்களுக் கே வெளிச்ச‍ம்.

– விதை2விருட்சம் ரா.சத்தியமூர்த்தி (ஸ்ரீ முருக விஜயத்திற்காக . . .)

2 Comments

 • Kumaran

  Engal Anbu Thayae!!!
  Veera Mangaiyae!!!
  Velu Nachiyaraga Vazhntha Veeranganaiyae!!!
  Ungalukku Intha Tamizhagamae Thalai Vanangum!!!

 • Anonymous

  very nice article we have done one dance ballet at World tamil conference at Tanjavur during 1995 very brave lady.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: