Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலியின் முத்த‍மும், நண்பனின் ரத்த‍மும்

முகநூலில், நண்பர் ஒருவர் பகிர்ந்த வாசகம் தாங்கிய புகைப்படம் என்னை கவர்ந்தது. ஆம்! அது, நட்பின் ஆழத்தையும், காதலின் தூய்மையும் வெளிப்படுத்தியது. கீழுள்ள பட‍த்தில் காணப்படும் வரிகளை படியுங்கள். பின் விதை2விருட்சம் இணை யத்தின் கருத்தினை படித்து உணருங்கள். விதை2 விருட்சம் (எனது) கருத்து எவ்வ‍ளவு உண்மை என்பது உங்களுக்கே! புரியும்.

.

பெண்ணை காதலித்தேன் நண்பனை மறந்தேன்

என்ற முதல் வரியில்  காதலுக்காக நண்பனை துறக்கும் அந்த காதலன் அவள் மீதுள்ள‍ காதலின் வீரியத்தை உணர்த்துவதா கவும்,

ஒரு விபத்து

காதலி வந்தாள் முத்த‍ம் கொடுத்தாள்

என்ற  அடுத்த‍ வரியில், விபத்தி னால் நேர்ந்த அங்க ஈனம், அதாவது உடலில் ஏற்பட்ட‍ காயத்திற்காக வருந்தாதே! உனக் காக  நான் இருக்கிறேன். நீ விரைவில் மீண்டு வருவாய்! என்பது உணர்த்து வதாக அந்த முத்த‍ம் இருக்கிறது. இது காதலின் புனிதத் துவத்தை உணர்த் துகிறது.

அதற்கு அடுத்த‍ வரியில்  . . .

நண்பன் வந்தான் ரத்த‍ம் கொடுத்தான்.

காதலிக்காக தன்னையே தூக்கியெ றிந்தவன்தானே! அவனை நான் ஏன் போய் பார்க்க‍வேண்டும்? என்ற எண் ண‍த்தில் உண்டா கும் கோப‌த்தினால், பகைமை உணர்வுகொள்ளாமல், அய்யோ நண்பன் விபத்தில் அடிப‍ட்டு விட்டானே! “அவனுக்காக எனது உயிரையும் கொடுப்பேன்!” என்று ஓடோடி வந்து, அவன் நலம் பெற தனது இரத்தத்தை கொடுத்து காப்பாற்றுகிறான்.

விபத்தில் அடிபட்டு, உடலில் உயிருக்கே ஆபத்தினை விளைவிக் கக்கூடிய காயம் உண்டானாலும் அடிபட்ட‍வனது மனம் தன்னம் பிக்கையும் தைரியமும் இருந்தால்தான், சாவின் விளிம்பிக்கே சென்று மீண்டுவந்து நலம்பெறுவான். அத்தகைய தன்னம்பிக்கை யையும் தைரியத்தையும் ஊட்டுவதாக அவன து காதலி இட்ட‍ முத்த‍ம் உதவும்.

உடலில் ஏற்பட்ட‍ காயத்தினால் ஏற் பட்ட‍ ரத்தப்போக்கினை சரி செய்து அவனது உடலில் மீண்டும் புது ரத்த‍ம் பாய்ந்து அவன் நலம் பெற அந்த நண்பன் கொடுத்த‍ ரத்த‍ம் உதவும்.

இதிலிருந்து நாம் கற்கவேண்டியது என்ன‍ தெரியுமா?

ஒரு மனிதன், வாழ்க்கையில் நட்பும் அவசியம், காதலும் அவசியம்! என்பதும் இதில் எது உயர்ந்தது என்று பார்க்காமல் உண்மை யான நட்பிற்கும், தூய்மையான காதலுக்கும் மதிப்பளித்து, ஒரு மனிதன் வாழ்வானேயானால், அவன் ஏழையாக இருந்தாலும் அவன் தான் உலகிலேயே பெரிய பணக்காரன் ஆவான்.

உண்மையான நட்பையும், தூய்மையா ன காதலையும், ஒரு மனிதன், மதிப்ப ளிக்காமல் எட்டி உதைப்பவனாக இருந்தால், அவன் பணக்காரனாக இருந்தாலும், இந்த உலகில் வாழும் கடைக்கோடி ஏழைகள் கூட்ட‍தில் அவனுக்கு கடைசி இடம்தான் கிடைக்கும்.

உண்மையான நட்பினை போற்றுவோம்!
தூய்மையான காதலுக்கு மதிப்பளிப்போம்!!

– விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: