Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

L.I.C. கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

சென்னை அண்ணா சாலையில் 14 மாடிகளுடன் கம்பீரமாக காட்சி தருவது எல்.ஐ.சி. கட்டிடம். இங்கு ஆயுள் இன்சூரன்ஸ் அலுவலகமும் (எல்.ஐ.சி.) கடைகள், அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இந்தக் கட்டிடம் 177 அடி உயரம் கொண்டது. 1957-ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டது. அப்போதைய மத்திய நிதி மந்திரி மொரார்ஜி தேசாய் இந்த கட்டிடத் தை திறந்து வைத்தார். இந்த கட்டிடம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயரமான கட்டிடம். 14-வது மாடியின் உச்சியில் ஏறி நின்றால் சென்னை நகர் முழுவதையும் காணமுடியும்.

இதற்கு 25 காசு கட்டணம் வசூலி த்து பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இப்படி பார்வையாளராக அனுமதிக்க ப்பட்ட ஒரு வாலிபர் உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் பார்வை யாளர் அனுமதி நிறுத்தப்பட்டது.

இந்த எல்.ஐ.சி. கட்டிடத்தில் 11-7-1975 அன்று இரவு சுமார் 8-30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கட்டிடத்தின் 14 மாடிகளிலும் தீப்பற்றி எரிந்தது. மேகத்தை தொ டும் அளவுக்கு தீ ஜூவாலைகள் தெரிந்தன. புகை மூட்டத்தினால் அந்த பகுதியே இருண்டது. போக்கு வரத்து நிறுத்தப்பட்டன. அருகில் இருந்த கடைகள் எல்லாம் மூடப் பட்டு, அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். இந்த தீ விபத்து செய்தி சென்னை நகர் முழு வதும் காட்டுத்தீ போல பரவியது. பல் வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிர க்கணக்கானவர்கள் ஓடிவந்தனர்.

ஆனால் அவர்களை அருகில் செல்லாதபடி போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அண்ணா சாலை, புதுப்பேட்டை, திருவல்லிக் கேணி, எழும்பூர் பகுதியில் உள்ள வீடுகளின் மாடிகளில் நின்று பார்த்தால் கூட எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீப்பிடித்து எரிந்ததை பார் க்க முடிந்தது. கட்டிடத்தின் தரை தளத்தில் உம்மிடியார் நகைக் கடை, பின்னி ஜவுளிக்கடை, பெருமாள் செட்டி எழுதுபொருள் (ஸ்டேஷனரி) கடைகள் அனைத்தும் தீப்பிடித்தன.

இந்த கடைகளில் இருந்த விலை உயர்ந்த நகைகள், ஜவுளிகள் எரிந்தன. எல்.ஐ.சி. அலுவலகங்களில் இருந்த பீரோக்கள், நாற் காலி, மேஜை போன்றவை கருகி உருக்குலைந்தன. முக்கிய தஸ்தாவேஜுகள் சாம்பலா யின. கட்டிடத்திற்குள் எரிந்த பொருட் கள் காற்றில் தீப்பந்தங்கள்போல் பறந்து வெகுதூரத்தில் விழுந் தன.

முதல்-அமைச்சர் கருணாநிதி சிந்தா திரிப்பேட்டையில் நெடுஞ் செழியன் பிறந்த நாள் விழாவில் பேசிக் கொண் டிருந்தார். தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், கூட்டத்தை ரத்து செய்து விட்டு விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தார். தீயணைப்பு பணிகள் நடை பெறுவதை பார்வையிட்டார். துரிதமாக தீயை அணைக் கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். தீயணைக்கும் பணி யில் 1,500 பேர் ஈடுபட்டனர்.

உயரமான ஏணிகளில் ஏறி அவர்கள் தீயை அணைக்க முயன்ற போதிலும் 5-வது மாடிக்கு மேல் தண்ணீரை பீய்ச்சி அடிக்க இயல வில்லை. அதிகாலை வரையில் விடிய விடிய போராடிய போதிலும் தீ அடங்க வில்லை. கொழுந்து விட்டு எரிந்து கொண் டே இரு ந்தது. தீயின் கடும் வெப்பத்தால் கட்டிடத்தில் ஏராளமான வெடிப்பு கள் விழுந்தன. இதனால் தீயணை ப்பு வீரர்கள் அச்சம் அடைந்தா ர்கள்.

கட்டிட நிபுணர்கள் வந்து பரிசோ தித்துவிட்டு இடிந்து விழாது என்று கூறிய பிறகு தீயணைப்பு படையி னர் உள்ளே நுழைந்தனர். ஒவ் வொரு மாடியாக சென்று தீயை அணைத்தனர். மறுநாள் (12-ந் தேதி) மாலை 6 மணி அளவில் 14-வது மாடியை அடைந்தார் கள். 6-30 மணி அளவில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

அதாவது 22 மணி நேர போராட்டத்துக்குப்பிறகு தீ அணைந்தது. தீ விபத்துக்கான காரணம் கண்டறிய 250சாம்பிள்கள் எடுக்கப்பட்டு ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 14 மாடிகளிலும் இரு ந்த தஸ்தாவேஜுகள் (ரிக்கார்டுகள்) தீயில் எரிந்தன. ஆனால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 லட்சம் பாலிசிகள் கட்டிடத்தின் பாதாள அறையில் வைக்கப்பட்டு இருந்தன. அவை காப்பாற்றப்பட்டன.

நன்றி – காலச்சுவடு, மாலைமலர்

Leave a Reply