Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: உங்கள் முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாற . . .

சந்தனம், முல்தானிமட்டி கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
 
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்த வுடன் மித மான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
 
*பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவிவர சூரியக் கதிர்க ளால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
 
* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர்சேர்த்து, முகத்தில் தடவி ,  ஒரு மணி நேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.
* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையு ம்.
 
* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்க ளைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
 
* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
 
* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன் படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.
* தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தி ல் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண் டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
 
* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.
 
* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழி த்து, மிதமான சுடு நீரில் கழுவ வேண்டும். இதை தொடர் ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டா கும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.
 
* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத் துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.
 
* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டு ம். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறை யும்.
* கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயி லினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.
 
* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலை மாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கைகால்களுக்கு தின மும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
 
* நாம் சாப்பிடும் உணவு மூலமாக வே அழகை அதிகப்படுத்திக் காட்ட  லாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின் கள், தாதுப்பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகள வில் சாப்பிட வேண்டும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: