Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் வீட்டு சமையல் அறையை சுத்த‍மாக வைத்திருக்க . . .

ஆரோக்கியமாக வாழ சத்தான உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. அவை சமைக்கப்படும் இடமும் சுத்தமாக இருக்க வேண் டும். பார்க்க சுத்தமாக இருக்கும் சமை யல் அறையில் கிருமிகள் இருக்காது என்பது நிச்சயமாக சொல்லமுடியாது என்கிறார் இந்திய அகடமி மருத்துவ ஆலோசகர் டாக்டர் பாலாஜி. இதோ அவர் தரும் சில ஆலோசனைகள்…

சமையலறையில் தூசு, குப்பை, அழுக்கு, எண்ணெய் பிசுக்குகள் போன் றவற்றை நீக்கி சுத்தம் செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள் இல்லத் தரசிகள். ஆனால் இது பார்க்க சுத்தமாக இருக்குமே தவிர சுகாதாரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம், சமைய லறையில்தான் அதிகளவில் கிரு மிகளும், பாக்டீரியாக்க ளும் குடி கொண்டிருக்கின்றன.  

பொதுவாக கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை. இவை நம்மை அறியாம லேயே உணவை தாக்குகின்றன. இதனால் வயிற்று போக்கு, வாந்தி, பசியின்மை, தலை வலி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதை போக்க நாம் சமையல் அறையை கிருமிகள் இல்லாமல் பாது காக்க வேண்டும்.

சமையல் அறையில் எப்போதும் ஈரப்பதம் இருப்பது தான் பாக்டீரியா போன்ற நுண் கிருமிகள் வளர காரணம். எல்லோருடைய வீட்டிலும், சமையல் செய்யும் மேடையை துடை க்க ஒரு துணியை வைத்து இருப்பது வழக்கம். இந்த துணி எப்போ தும் ஈரமாக இருக்கும். அதுவே பாக்டீ ரியா குடிகொள்ள காரணமாக உள்ளது . சாதாரண துணிக்கு பதில் டிஸ்போ சபெல் துணிகள் பயன் படுத்தலாம்.

முடியாத பட்சத்தில் இரண்டு நாட்களு க்கு ஒரு முறை அந்த துணியை கிருமி நாசி கொண்டு துவைத்து வெயிலில் காயவைக்கலாம். மாதம் ஒருமுறை பழையதுணிகளை அகற்றிவிட்டு புது துணிகளை பயன்படுத்தலாம். சமைய லறையில் உள்ள சிங்க்கை தினந்தோ றும் சுத்தம் செய்யவேண்டும். சமையல் செய்த பாத்திரங்களில் இருக்கும் உணவுகள் சிங்கின் பைப்பில் தேங்கி இருக்கும்.

இது நாளடைவில் அப்படியே தங்கி விடும். இதனையும் வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். சமையலறையின் தரையும் கிருமி நாசினி கொண்டு ஒருநாள் விட்டு ஒரு நாள் துடைப்பது நல்லது. சமையல் அறை மேடையை துடை க்கும் துணிகளை ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை கைப் பற்றினாலே சமைய லறையை கிருமிகள் பாதிப்பில் இரு ந்து பாது காத்துக் கொள்ள முடியு ம். இவ்வாறு கூறுகிறார் டாக்டர் பாலாஜி.

thanks to dinakaran

Leave a Reply