Friday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: கண்களின் அழகைப் பராமரிக்க . . .

அழகான பெண்களுக்கு மேலும் அழகாக இருக்க சில குறிப்புக்க ள். அதாவது உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷ மோ, துக்கமோ எது வானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும் மொத்தத் தில் அவை உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு, சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.

கண்களின் அழகைப் பராமரிக்க கீழ்க் கண்ட விஷயங்கள் முக்கி யம்

தினசரி எட்டு மணி நேரத்தூக்கம், போஷாக்கானஉணவு, கால் சியம், விற்றமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண் டும். கண்க ளுக்கான பயிற்சிகள், கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஓரேஞ் நிறப் பழங்கள் மற்று ம் காய்கள் உட் கொள்ள வேண்டும்.

போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம் உடலு க்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

கண்களை நேரம் கிடைக்கும் போதெல் லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறை கள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக் கும் பொருளைப் பார்த்து விட்டு, உடனடி யாக தொலைவில் உள்ள ஒரு பொரு ளையும் பார்க்க வேண்டும்.

கட்டை விரலை நடுவில் வைத்துக் கொண்டு, அதை இடவலமா கவும், வல இட மாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறு ம் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கம்பியூட்டர், மொனிட்டர் போன்ற வற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளி யைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்க ளையும் பார்க்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply