Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணிணி குறிப்புக்கள்

அனலாக் (Analogue):

எந்த ஒருசிக்னல் தன்மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக் காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்க ளிலிருந்து வேறுபடுகின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புக ளுக்கிடையே மாறு கின்றன. இதனை உணர, தொடர்ந்து வேக மாக நகரும் நொடி முள் கொண்ட கடிகாரத்தின் முகப் பக்கத்தி னையும், டிக் டிக் என ஒவ்வொரு விநாடியாக நகரும் விநாடி முள் கொண்ட கடிகாரத் தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முத லில் குறிப்பிட்டது அனலாக் சிக்னல் தருவதாகும். இரண்டாவது டிஜிட் டல் சிக்னல். இரண்டாவதாகச் சொன்னது, ஒவ்வொரு எண்ணாக, ஒரே மதிப்பில் மாறுகி றது.

ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio):

ஒரு டிவியின் அல்லது மானிட்ட ரின் திரையின் அகல உயர விகித த்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்க ளின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீ ன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன.

டி.எப்.டி. (Thin Film Transistor):

கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் டிஜிட்டல் கேமராக்களுக்கு மிகக் குறைந்த தடிமனில் தட்டையான வண்ணத்திரை அமைக்கப் பயன் படுத்தும் ட்ரான் சிஸ்டரையும் தொழில் நுட்பத்தையும் குறிக்கிற து. இது நல்ல மேம்படுத்தப்பட்ட திரையைத் தருகிறது. இதனால் இதில் காட்டப்படும் படங்கள் மிகத் தெளிவான தன்மையைக் கொண்ட வையாக இருக்கும். படங்களில் பல்லாயிரக் கணக்கில் லட்சக் கணக்கான வண்ணக் கலவை காட்டப்படும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: